மாணிக் சாகா

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

மாணிக் சாகா
Remove ads

மாணிக் சாகா (பிறப்பு 8 ஜனவரி 1953) பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திரிபுரா முதல்வராக உள்ளவர். 15 மே 2022 அன்று திரிபுராவின் 12வது முதலமைச்சராக பதவியேற்றார்.[1][2] இவர் பாரதிய ஜனதா கட்சியின் திரிபுரா மாநிலத் தலைவராகப் பதவி வகித்தார்.[3][4] மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டு உள்ள நிலையில், 14 மே 2022 அன்று, பிப்லப் குமார் தேவ் பதவியை விலகியதை தொடர்ந்து மாணிக் சாகா முதல்வராகப் பதவி ஏற்கின்றார்.[5] அவசரமாக அழைக்கப்பட்ட பா.ஜ.க. சட்டமன்றக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு, தேவ், சாகாவின் பெயரைத் தன்னை தொடர்ந்து முதல்வராக அறிவித்து, புதிய முதலமைச்சருக்கு ஒத்துழைப்பதாகக் கூறினார். இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.

Thumb
மாணிக் சாகா, 2023
விரைவான உண்மைகள் மாணிக் சாகா, 11வது திரிபுரா முதலமைச்சர் ...
Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

மக்கான் லால் சகா மற்றும் பிரியா பாலா சாகா ஆகியோருக்கு மகனாக 8 சனவரி 1953-ல் சகா பிறந்தார்.[6] இவர் தனது பல் மருத்துவ பட்டப்படிப்பினையும் முதுநிலைப் படிப்பினையும் முறையே பாட்னா பல் மருத்துவக் கல்லூரி, பீகார் மற்றும் கிங் ஜார்ஜஸ் மருத்துவக் கல்லூரி, இலக்னோவில் முடித்தார் . சாகா திருமதி சுவப்னாவினை மணந்தார்.[6] இவர் திரிபுரா துடுப்பாட்ட சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். இவர் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு, கபானியாவில் உள்ள திரிபுரா மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக மருத்துவம் கற்பித்து வந்தார்.[2]

Remove ads

இரண்டாம் முறை முதலமைச்சராக

2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்ற பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் மாணிக் சாகா, இரண்டாவது முறையாக திரிபுரா முதலமைச்சராக 8 மார்ச் 2023 அன்று பதவி ஏற்க உள்ளார்.[7]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads