மாத்தேயோ கார்காசி

From Wikipedia, the free encyclopedia

மாத்தேயோ கார்காசி
Remove ads

மாத்தேயோ கார்காசி 1792ஆம் ஆண்டில் இத்தாலியிலுள்ள புலோரென்சு(Florence) நகரத்தில் பிறந்தார். இவர் ஒரு புகழ்பெற்ற இத்தாலிய கிதார் இசை கலைஞரும் இயற்பாளருமாக(Composer) திகழ்ந்தார்.

விரைவான உண்மைகள் மாத்தேயோ கார்காசி Matteo Carcassi, பிறப்பு ...
Thumb
Dante சிலை

கார்காசி முதலில் பியானோ கற்க ஆரம்பித்தார். ஆனால், பின்போ, இவரது கவனம் கிதார் பக்கம் திரும்பியது. இவர் சிறுவயதிலேயே கிதார் கற்று முடித்தார். விரைவிலேயே கிதார் வாசிப்பதில் வல்லவர் என்று புகழ்பெற்றார்.

1810ஆம் ஆண்டில் இவர் செருமனிக்கு சென்றார். அங்கும் இவருக்கு விரைவிலேயே வெற்றி கிடைத்தது. 1815ஆம் ஆண்டில் இவர் பாரிசு நகரத்தில் ஆசிரியராகப் பணியாற்றி, பியானோவையும் கிதாரையும் கற்பித்தார். 1819ஆம் ஆண்டில் செருமனியில் இவரது நண்பர் அன்தோயின் மெசொனியெரை (Antoine Meissonnier) முதல் முறையாக சந்தித்தார். பிரபலமான கிதார் கலைஞரான மெசொனியெர், பாரிசு நகரத்திலிருந்த அவரது பதிப்பகத்தில் கார்காசியின் படைப்புகள் பலவற்றை பதிப்பித்தார்.

1820ஆம் ஆண்டிலிருந்து, கார்காசி தன்னுடைய பெரும்பாலான நேரத்தை பாரிசு நகரத்திலேயே செலவிட்டார். 1822ஆம் ஆண்டில் இலண்டன் மாநகரில் தொடர்ச்சியாக அரங்கங்களில் வாசித்து பெரும் வாத்திய கலைஞராகவும் ஆசிரியராகவும் பேரும் புகழும் பெற்றார். ஆனால், பாரிசிலோ, இவரது திறமைகள் தெளிவாக புரிந்துகொள்ளப்பட நெடுங்காலம் ஆயிற்று. இதற்கு பெர்தினாந்தோ காருலி(Ferdinando Carulli) அங்கிருந்தும் ஒரு குறிப்பிடத்தக்க காரணம். ஏனெனில், காருலியின் இரசிகர்கள் அவரை மிகவும் நேசித்தனர்.

1824ஆம் ஆண்டில் கார்காசி மீண்டும் செருமனி சென்றார். பின்பு, அவர் இலண்டனுக்கு சென்றார். இறுதியாக, அவர் பாரிசு நகரத்திற்கு திரும்பினார். பல வருடங்களாக இவர் இங்கிருந்து இலண்டன் முதற்கொண்டு ஐரோப்பாவிலுள்ள முக்கிய நகரங்களுக்கு சென்று வாசித்தார். 1836ஆம் ஆண்டில் மீண்டும் அரங்கங்களில் வாசிக்க துவங்கிய இவர், 1840ஆம் ஆண்டில் நிறுத்திவிட்டார். இவர், 1853ஆம் ஆண்டில் உயிர் நீத்தார்.

கார்காசி, இன்றைக்கும் விளைமதிப்பற்றதாக கருதப்படும் கிதார் வாசிக்கும் முறையினை விளக்கும் பொருட்டு ஒரு நூல் இயற்றினார். இவரது முக்கிய படைப்புகள் 25 Etudes op. 60யில் உள்ளன. இவைகளில், வாத்தியதிரனையும் அருமையான இசையையும் ஒன்றாக இணைத்துள்ளார், இவர். இவரது இசை இன்றைக்கும் பெரும்பாலான செம்மிசை கிதார் கலைஞர்கள் வாசிப்பதற்கு இதுவே முக்கிய காரணம் ஆகும்.

இவருடைய படைப்புகள், பல புகழ்பெற்ற கலைஞர்களாலும் பதிப்பிக்கப்பட்டுள்ளது; இசைக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்டும் உள்ளது.

Remove ads

மேலும் காண்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads