இசையமைப்பாளர்

பாடல்களை இயற்றுபவர் From Wikipedia, the free encyclopedia

இசையமைப்பாளர்
Remove ads

இசையமைப்பாளர் (Composer) என்பவர் குரல் இசை (பாடுதல்), மின்னணு இசை மற்றும் இசைக் கருவி போன்றவற்றை பயன்படுத்தி திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி, நிகழ்பட ஆட்டம், மேடை நாடகம் மற்றும் இசை தேவைப்படும் பிற பகுதிகளுக்கு இசைத் துண்டு எழுதுபவர் ஆவார்.[1]

Thumb
ஏ. ஆர். ரகுமான் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்

ஒரு இசையமைப்பாளர் எந்தவொரு இசை வகையிலும் இசையை உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக மேல்நாட்டுச் செந்நெறி இசை, இசை நாடகம், புளூஸ், நாட்டார் பாடல், ஜாஸ் போன்ற இசை வகைகளில் உருவாக்குவார்கள். இசையமைப்பாளர்கள் பெரும்பாலும் இசைக் குறியீட்டைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இசை மதிப்பெண்ணில் தங்கள் படைப்புகளை வெளிப்படுத்துகிறார்கள். பெரும்பாலான இசையமைப்பாளர்கள் சிறுவயது முதல் இசை பற்றி நன்கு பயின்று விட்டு வலுவான இசை பின்னணியை உருவாக்கி கொண்டு வருகின்றனர். இருப்பினும், முறையான பயிற்சி இல்லாத பல இசையமைப்பாளர்களும் இசையில் வென்றுள்ளனர். ஒரு இசையமைப்பாளர் இசை எழுதுவதில் ஆர்வம் கொண்டவராகவும் பல கருவிகளை செயல்படுத்தும் திறன் கொண்டவராகவும் இருப்பார்.

இந்தியாவை பொறுத்தவரையில் கருநாடக இசை, இந்துஸ்தானி இசை, கிராமிய இசை, மெல்லிசை மற்றும் தமிழ் கலப்பிசை போன்ற பாணிகளில் இசை உருவாக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக பாபநாசம் சிவன்,[2][3] ஜி. ராமநாதன், கே. வி. மகாதேவன், ம. சு. விசுவநாதன்,[4][5] சி. ஆர். சுப்பராமன், இளையராஜா, ஏ. ஆர். ரகுமான், யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் போன்ற பல இசையமைப்பாளர்கள் பல வகை பாணியில் இசை அமைத்துள்ளார்கள்.

Remove ads

இசையமைப்பாளர்களின் பட்டியல்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads