மாத்ரு பூமி
எச். எம். ரெட்டி இயக்கத்தில் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாத்ருபூமி 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எம். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். சந்தானம், பி. யு. சின்னப்பா, டி. வி. குமுதினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது திவிஜேந்திரலால் ரேயின் வங்காள நாடகமான சந்திரகுப்தாவின் தழுவலாகும்.[2]
Remove ads
கதை
இப்படமானது அலெக்சாந்தரின் இந்தியப் படையெடுப்பை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இது ஆங்கிலேயர் இந்தியாவை வெற்றிகொண்டு ஆக்கிரமித்ததன் உருவகமாகும்.
நடிகர்கள்
இத்திரைப்படத்தில் நடித்தவர்கள்:[3]
Remove ads
தயாரிப்பு
மாத்ரு பூமி படமானது வங்க நாடகமான சந்திரகுப்தாவின் தழுவலாகும்.[4] இப்படம் அக்காலத்தில் ₹2 லட்சம் பட்ஜெட்டில் (2021 இல் ₹34 கோடி மதிப்பு) பிரம்மாண்டமாக தயாரிக்கபட்டது. படத்தை எடுத்து முடிக்க ஒரு ஆண்டு ஆனது. தெலுங்குத் திரையுலகில் பிரபல இயக்குநராக பின்னர் திகழ்ந்த பி. எஸ். ராமகிருஷ்ண ராவ், உதவி இயக்குநராகப் பணியில் சேர்ந்தார்.[5] இந்தப் படத்தில் இடம்பெற்ற போர்களக் காட்சிகள் செஞ்சிக் கோட்டை, கிருட்டிணகிரிக் கோட்டை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டன. நாள்தோறும் ஐந்து அணா சம்பளத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட துணை நடிகர்களைக் கொண்டு படமாக்கபட்டது.[6]
1937 ஆம் ஆண்டில், இந்திய தேசியவாதக் கட்சியான இந்திய தேசிய காங்கிரசு, சென்னை சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக பிரித்தானிய சார்பு கொண்ட நீதிக்கட்சியைத் தோற்கடித்தது. சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி பிரதமராகப் (முதலமைச்சர்) பதவியேற்றார். இந்த அரசியல் மாற்றத்தின் உடனடி விளைவாக, தமிழ் திரைப்படங்கள் மீதான தணிக்கை தளர்த்தப்பட்டது. இதனால் இந்திய விடுதலை இயக்கத்தையும், இந்திய தேசியத் தலைவர்களையும் புகழ்ந்து மாத்ரு பூமி உள்ளிட்ட சில திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன.[4]
பாடல்கள்
பாபநாசம் சிவன் பாடல்களை எழுதி இசையமைத்தார். இப்படத்தில் இடம்பெற்ற நமது ஜென்ம பூமி, அன்னையின் காலில் விலங்குகளா போன்ற பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.[6]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads