மாநகரசபை (இலங்கை)

From Wikipedia, the free encyclopedia

மாநகரசபை (இலங்கை)
Remove ads

இலங்கையில் மாநகரசபை (Municipality) என்பது, ஒரு உள்ளூராட்சி அமைப்பாகும். இது, அந் நாட்டிலுள்ள உள்ளூராட்சி அமைப்புக்களின் தரவரிசையில் முதல் நிலையில் உள்ளது. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில், 1885 ஆம் ஆண்டில் மாநகரசபைகள் உருவாக்கப்பட்டன. 1885 ல், கொழும்பு, கண்டி ஆகிய நகரங்களிலும், 1886 ல், காலியிலும் மாநகரசபைகள் அமைந்தன. பலகாலமாக இலங்கையின் இரண்டாவது பெரிய நகரமாக இருந்துவந்த யாழ்ப்பாணத்தின் உள்ளூராட்சி 1949 ஆம் ஆண்டிலேயே மாநகரசபை நிலைக்கு உயர்ந்தது. இலங்கையில் தற்போது 23 மாநகரசபைகள் உள்ளன.

Remove ads

பிரகடனம்

1947ம் ஆண்டின் மாநகரசபைச் சட்டத்தின் (இல129) படி உள்ளூராட்சி அமைச்சர் எந்தவொரு வளர்ச்சியடைந்த நகரத்தினையும் மாநகரசபைப் பகுதியெனப் பிரகடனப்படுத்தி அதன் எல்லையை வரையறுத்துப் பெயரையும் குறிப்பிடலாம்.

மாநகரசபையின் பொறுப்புக்கள்

  • சபையின் ஒழுங்குவிதிகள், கட்டுப்பாடுகள்
  • பொதுச்சுகாதாரம், பொதுப் பயன்பாட்டுச் சேவை, போக்குவரத்து
  • பிரதேச மக்களின் பொதுநல வசதிகள்
மாநகரசபைக்குப் பொறுப்பாக உள்ளூராட்சி அமைச்சர் இருப்பார். சுபையைக் கலைத்தல், பதவிநீக்கம் என்பன இவரின் உத்தரவின் பேரிலேயே மேற்கொள்ளப்படும்.

அதிகாரங்கள்

  • சபைக்கு தேவையான பதவிகளை உருவாக்கல்
  • அப்பதவிக்கு ஆட்களை நியமித்தல்
  • மாநகரசபை விதிகளின்படி அதற்குச் சொந்தமான எந்தக் கட்டிடத்தையும் (அமைச்சர் அனுமதியுடன்) ஏலத்தில் விற்றல், வாடகைக்கு விடல்
  • எல்லைக்குள் மக்களுக்கு இன்னல் விளைவிக்கும் விடயங்களைக் கண்டுபிடித்து தடுத்துத் தணிக்கை செய்தல்.
  • விதிகளுக்குட்பட்ட ரீதியில் வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்தல்
  • வீதிகளுக்கு மின்சாரம், நீர் என்பவற்றை வழங்குதல்

தலைவர்

மாநகரசபைக்கு மேயரே தலைவராவார்.

நிதிதிரட்டும் மூலங்கள்

  • சபை விதிக்கும் வரிகள்
  • அபராதம், தண்டம்
  • முத்திரை வரி
  • விற்றல், வாடகைக்குக் கொடுத்தல், வாங்கல் மூலம் கிடைக்கும் பணம்
  • வருமானங்களும், நன்கொடைகளும்
  • அமைச்சரின் விசேட ஒதுக்கு நன்கொடை

இலங்கையின் மாநகரசபைகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads