மாநகரப் போக்குவரத்துக் கழகம்

சென்னையின் போக்குவரத்து கழகம் From Wikipedia, the free encyclopedia

மாநகரப் போக்குவரத்துக் கழகம்
Remove ads

மாநகரப் போக்குவரத்துக் கழகம் - சென்னை (Metropolitan Transport Corporation - MTC) சென்னை நகரில் இயங்கும் நகரப் பேருந்துகளின் துறையாகும். சென்னை மாநகரப் பேருந்துகள் ஒரு நாளைக்கு 42 இலட்சம் பயணிகளுக்கு சேவை புரிகின்றன. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மொத்தம் 3,365 பேருந்துகளை இயக்குகிறது. இப்பேருந்துகள் சென்னை நகரின் சுமார் 40 கி.மீ. வரை மக்களுக்கு சேவை புரிகின்றன.

விரைவான உண்மைகள் நிறுவுகை, தலைமையகம் ...
Thumb
Thumb
Thumb
Thumb
Thumb
தொடர் பேருந்து
Thumb
மாநகரப் பேருந்தின் வோல்வோ சேவை
Thumb
மாநகரப் பேருந்தின் உள் தோற்றம்
Thumb
புதிய சொகுசுப் பேருந்துகளின் இருக்கைகள்
Remove ads

தோற்றமும் வளர்ச்சியும்

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (மண்டலம் - I) 1 ஜனவரி 1972ம் ஆண்டு 1029 பேருந்துகளுடன் பல்லவன் போக்குவரத்துக் கழகம் என்ற பெயரில் தமிழக அரசால் தொடங்கப்பட்டது.[1] மேலும் பல்லவன் போக்குவரத்துக் கழகம் பிரிக்கப்பட்டு டாக்டர். அம்பேத்கார் போக்குவரத்துக் கழகம் என்ற பெயரில் 19 ஜனவரி 1994 முதல் செயல்படத் தொடங்கியது. பின்னர் 1 ஜூலை 1997ல் பல்லவன் போக்குவரத்துக் கழகம் மாநகரப் போக்குவரத்துக் கழகம் (சென்னை மண்டலம் - I), டாக்டர். அம்பேத்கார் போக்குவரத்துக் கழகம் மாநகரப் போக்குவரத்துக் கழகம் (சென்னை மண்டலம் - II) என்ற பெயரிலும் மாற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டன. பின்னர் நிர்வாகக் காரணங்களுக்காக 10 ஜனவரி 2001ல் மாநகரப் போக்குவரத்துக் கழகம் (சென்னை மண்டலம் - II) மாநகரப் போக்குவரத்துக் கழகம் (சென்னை மண்டலம் - I) உடன் இணைக்கப்பட்டு இன்றுவரை செயல்பட்டு வருகிறது.

இன்று மொத்தம் 3,637 பேருந்துகள், 25 பணிமனைகள், குரோம்பேட்டையில் பேருந்து கட்டமைக்கும் பிரிவு, கலைஞர் கருணாநிதி நகரில் பயணச்சீட்டு அச்சிடும் பிரிவு மற்றும் பட்டுலாஸ் சாலையில் பழுதுபார்க்கும் பிரிவு ஆகியவை இயங்கிவருகின்றன. இத்துறையின் தலைமையகமான பல்லவன் இல்லம் எழும்பூரில் உள்ள பல்லவன் சாலையில் அமைந்துள்ளது.

Remove ads

பேருந்து சேவைகள்

மேலதிகத் தகவல்கள் வ.எண், பேருந்து வகை ...
Remove ads

பணிமனைகள்

மேலதிகத் தகவல்கள் S. No., பணிமனை ...

இதனையும் காண்க

மேலும் பார்க்க

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

பிற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads