தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி

இது தமிழக அரசின் போக்குவரத்து துறையின் கீழ் திருநெல்வேலியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் From Wikipedia, the free encyclopedia

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி
Remove ads

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - திருநெல்வேலி என்பது அரசுப் போக்குவரத்து கழக துறையின் கீழ் செயல்படும் ஒரு பொதுப் போக்குவரத்து அமைப்பாகும். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 8 பிரிவுகளில் இதுவும் ஒன்றாகும்.

விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...
Remove ads

வரலாறு

1974ஆம் ஆண்டு பாண்டியன் போக்குவரத்துக் கழகத்திலிருந்து 104 பேருந்துகள் பிரிக்கப்பட்டு நாகர்கோவிலை தலைமையிடமாக கொண்டு கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டது. 1983ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கிய பணிமனைகள் கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகத்திலிருந்து பிரித்து நேசமணிப் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டது. நேசமணிப் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டபின் கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகத்தின் தலைமையிடம் திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டது. 1997-ல் போக்குவரத்துக் கழகங்களைத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டப்பொழுது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மதுரையுடன் இணைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், மதுரையிலிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய போக்குவரத்துக் கழகங்கள் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி என 2010 நவம்பர் 1 அன்று உருவாக்கப்பட்டது.

Remove ads

மண்டலங்களும் பணிமனைகளும்

இந்த போக்குவரத்துக் கழகம் 3 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மண்டலம்

கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகம் என்ற பெயரால் பெரும்பான்மையினரால் அறியப்படுகிறது. இது திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தை உள்ளடக்கியது. இம்மண்டலம் பின்வரும் 11 பணிமனைகளை கொண்டது:

பணிமனைகள்

  • தாமிரபரணி(தா)
  • திருநெல்வேலி புறவழிச்சாலை(புவ)
  • கட்டபொம்மன்நகர்(கந)
  • வள்ளியூர்(வ)
  • திசையன்விளை(திவி)
  • சேரன்மகாதேவி(சே)
  • பாபநாசம்(பா)
  • தென்காசி(தெ)
  • செங்கோட்டை(செ)
  • புளியங்குடி(புகு)
  • சங்கரன்கோவில்(சகோ)

நாகர்கோவில் மண்டலம்

நேசமணி போக்குவரத்துக் கழகம் என்ற பெயரால் பெரும்பான்மையினரால் அறியப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கிய இம்மண்டலம் பெரும்பான்மையான நகர மற்றும் புறநகரப் பேருந்துகளை இயக்குகிறது. நாகர்கோவிலில் பேருந்திற்கு மேற்கூரை கட்டும் தளமும் உள்ளது. பின்வரும் 12 பணிமனைகள் கொண்ட இம்மண்டலம் சுமார் 1000-க்கும் மேலான பேருந்துகளை தினமும் இயக்குகிறது:

பணிமனைகள்

  • கன்னியாகுமரி (க)
  • ராணிதோட்டம் கிளை 1 (ரா1)
  • ராணிதோட்டம் கிளை 2 (ரா2)
  • ராணிதோட்டம் கிளை 3 (ரா3)
  • செட்டிக்குளம்(செ)
  • விவேகானந்தபுரம்(வி)
  • திங்கள்நகர்(திந)
  • குளச்சல்(குள)
  • திருவட்டார்(திரு)
  • மார்த்தாண்டம்(மா)
  • குழித்துறை கிளை 1(குழி 1)
  • குழித்துறை கிளை 2(குழி 2)

தூத்துக்குடி மண்டலம்

இம்மண்டலம் 26.06.2013 அன்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிமிடெட், திருநெல்வேலியில் "தூத்துக்குடி" என்ற புதிய மண்டலம் உருவாக்கப்பட்டது. இது தூத்துக்குடி மாவட்டத்தை உள்ளடக்கியது ஆகும். இது பின்வரும் 7 பனிமனைகளை கொண்டுள்ளது

பணிமனைகள்

  • தூத்துக்குடி நகர் (தூந)
  • தூத்துக்குடி புறநகர்(தூபு)
  • திருச்செந்தூா்(திசெ)
  • ஸ்ரீவைகுண்டம்(திகு)
  • கோவில்பட்டி(கோ)
  • விளாத்திகுளம்(விகு)
  • சாத்தான்குளம்(சா)
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads