மாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மாநிலச் சட்ட மேலவை (இந்தி: விதான் பரிஷத்) என்பது இந்திய மாநிலங்களில் சட்டமியற்றும் சட்டமன்றங்களின் மேலவையைக் குறிப்பதாகும். இந்தியாவின் 28 மாநிலங்களில், 6 மாநிலங்களில் சட்ட மேலவை உள்ளது. அவை உத்திரப் பிரதேசம், பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரம், தெலங்காணா மற்றும் ஆந்திரப் பிரதேசம். தமிழ்நாடு சட்டமன்ற மேலவை 1950-86 காலகட்டத்தில் செயல்பட்டது. பின்னர் 1986இல் கலைக்கப்பட்ட இந்த அவை, 2010இல் மீண்டும் உருவாக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

Remove ads

வரையறை

இந்திய அரசியலமைப்பு பிரிவு மூன்று, விதி 168 (2) ல் குறிப்பிட்டுள்ளபடி ஒரு மாநிலத்தில் இரண்டு மன்றங்கள் இருந்தால் ஒன்று சட்டமன்ற மேலவை என்றும் மற்றொன்றை சட்டமன்ற கீழவை என்றும் வழங்க வேண்டும். ஒரே மன்றம் உள்ள மாநிலங்களில் அதனைச் சட்டமன்றம் என்று அழைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[1]

அமைப்பு

இது ஒரு நிரந்தர மன்றமாகும், ஆட்சிக் கலைப்பினால் இந்த மன்றம் கலைக்கப்படுவதில்லை. இதன் உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 வருடங்கள் இதல் மூன்றில் 1 பங்கு உறுப்பினர்கள் ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

உறுப்பினராவதற்கானத் தகுதிகள்

சட்ட மேலவையில் உறுப்பினாரவதற்கு ஒருவர் 30 வயது நிரம்பியிருக்க வேண்டும் மற்றும் மனவலிமை கொண்டவராகவும், எவ்வகையிலும் கடன் படாதவராக (கடனாளியாக இல்லாமல்) இருத்தல் வேண்டும். எந்த தொகுதியில் போட்டியிடுகின்றாரோ, அந்தத் தொகுதியைச் சேர்ந்தவராயிருத்தல் வேண்டும்.

உறுப்பினர்கள் எண்ணிக்கை

இம்மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கீழவை சட்டமன்றங்களின் அல்லது கீழவை சட்டப் பேரவைகளில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கையை மிகாமல் இருக்கை இருக்கவேண்டும். இந்த எண்ணிக்கை 40-க்கு குறையாமலும் இருக்கவேண்டும்.

மேலவையின் உரிமைகள்

இந்திய மாநிலங்களவையைப் போன்று இங்கும் சட்டப் பேரவை கீழவையில் முன் மொழிந்த மசோதா, தீர்மானங்கள் மற்றும் திட்டங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு விவாதிக்கவும், விமர்சிக்கவும் படுகின்றன. இரு அவைகளுக்கும் முரண்பாடு ஏற்படும் போது கீழவையின் முடிவே இறுதியானதாக ஏற்றுக்கொள்ளப்படும்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads