மாநில அருங்காட்சியகம், ஹாத்வார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாநில அருங்காட்சியகம், ஹாத்வார் (State Museum Hotwar) என்பது இந்திய மாநிலமான ஜார்கண்டில் ராஞ்சியில் அமைந்துள்ள ஒரு இந்திய பண்பாட்டு அருங்காட்சியகமாகும். அருங்காட்சியகத்தின் தற்போதைய செயலாளர் வந்தனா தண்டேல் ஆவார்.
Remove ads
வரலாறு
இந்த மாநிலத்தின் சிறப்பான பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்துகின்ற பல காட்சிப்பொருள்கள் இங்கு உள்ளன. [1]இந்த அருங்காட்சியகத்தின் அசல் பெயர் ராஞ்சி அருங்காட்சியகம் என்பதாகும். இது முதன்முதலாக 1974 ஆம் ஆண்டில் பழங்குடி ஆராய்ச்சி நிறுவனத்தின் வளாகத்தில் நிறுவப்பட்டது. ஒரு கட்டிடத்தின் எல்லைக்குள் அடைக்கப்பட்டு இருந்த இந்த அருங்காட்சியகம் செப்டம்பர் 10, 2009 ஆம் நாளன்று ராஞ்சியில் உள்ள ஹாத்வார் என்ற புதிய இடத்திற்கு இடம் மாறியது. இந்த அருங்காட்சியகத்தை இந்தியாவின் துணை ஜனாதிபதியான முகமது ஹமீத் அன்சாரி திறந்து வைத்தார். [2]
ஜார்க்கண்டின் கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் பல காட்சிக் கூடங்கள் காணப்படுகின்றன. மேலும் இந்த அருங்காட்சியகத்தில் வங்காளம், ஒரிசா மற்றும் பீகார் போன்ற பல மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்களின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் ஒரு நூலகம் செயல்பட்டு வருகிறது, இந்த நூலகம் அனைத்து வசதிகளையும் கொண்டு அமைந்த நூலகம் ஆகும். இங்கு 300 பேர் வரை தங்கிப் படிக்க வசதி உள்ளது.
Remove ads
சிறப்புகள்
இந்த மாநிலத்தில் இந்த அருங்காட்சியகத்தில் அதிக எண்ணிக்கையிலான பண்பாட்டு பாரம்பரியக் கூறுகள் காணப்படுகின்றன. இதனை ராஞ்சியின் பழங்குடியினர் அருங்காட்சியகம் என்றும் அழைத்து வருகின்றனர். இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட உள்ளூர் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர். இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட பயணிகள் வருவதற்கு பின்வருவன உள்ளிட்ட பல காரணிகள் உள்ளன. [3]
- ஜார்க்கண்ட் மாநிலத்தின் பண்பாட்டு பாரம்பரியத்தின் இல்லமாக இந்த அருங்காட்சியகம் கருதப்படுகிறது.
- இந்த அருங்காட்சியகத்தில் உள்ள பல காட்சிக்கூடங்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முழுமையான வரலாற்றையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. அந்த மாநிலம் அமைக்கப்பட்டது தொடங்கி, அது வடிவம் பெற்றது முதல் படிப்படியான அதன் வளர்ச்சி உள்ளிட்டவைகள் இங்கு காணப்படுகின்றன.
- ஜார்க்கண்ட் பழங்குடியினரைப் பற்றிய முக்கியமான தகவல்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பான கூறாகக் கருதப்படுகிறது.
- ஹாத்வார் மாநில அருங்காட்சியகத்தைக் காண வருகின்ற சுற்றுலாப் பயணிகளுக்காக இங்கு அவ்வப்போது குறும்படங்கள் திரையிடப்படுகின்றன.
- இந்த அருங்காட்சியகத்தில் மாதந்தோறும் கண்காட்சிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
Remove ads
பிரிவுகள்
இந்த அருங்காட்சியகம் நான்கு முக்கியமான பிரிவுகளைக்கொண்டு அமைந்துள்ளது. அவை இனவியல், சிற்பவியல், தொல்லியல், மற்றும் ஓவியம் என்பனவாகும். இரு மாடிக் கட்டட அமைப்பினைக் கொண்ட இந்த அருங்காட்சியகம் ஒரு சிறப்புத்தன்மையோடு அமைந்துள்ளது. அருங்காட்சியகத்தில் நுழைந்தவுடன் சுவற்றில் பல அழகிய ஓவியங்களைக் காணமுடியும். அவை கடந்த காலத்தை பார்வையாளர்கள் முன் கொண்டு வந்து நிறுத்தும் வகையில் அமைந்துள்ளன. அரை வட்ட வ்டிவில் அமைந்துள்ள தூண்கள் கொண்ட அமைப்புகளில் சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவை மனித இனத்தின் தோற்றத்தைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. முதல் தளத்தில் இனவியல் காட்சிக்கூடம், சிற்பவியல் கூடமும் அமைந்துள்ளன. மேலும் அங்கு நிர்வாக அலுவலகமும் நூலகமும் உள்ளன. நூலகத்தில் அதிகமான தகவல்கள் அடங்கிய நூல்கள், இதழ்கள் ஆகியவை பார்வையாளர்களின் வசதிக்காக வைக்கப்பட்டுள்ளன. இனவியல் காட்சிக்கூடத்தில் டயோராமாக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஜார்க்காண்ட் மாநிலத்தின் பல வகையான இன மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையில் உள்ளன. மேலும் அங்கு அம்மக்கள் பயன்படுத்திய நகை வகைகள், இசைக்கருவிகள் போன்றவையும் உள்ளன. சிற்பவியல் பகுதியில் இடைக்காலமான 7/ஆம் நூற்றாண்டு முதல் 13/14ஆம் நூற்றாண்டு வரையிலான சிற்பங்கள் உள்ளன. பெரும்பாலானவை ஜார்க்கண்டைச் சேர்ந்தவையாகும். ஓவியக்கூடத்தில், 2011ஆம் ஆண்டில் நடைபெற்ற 34ஆவது தேசிய விளையாட்டுகள் நிகழ்ச்சியின்போது அமைக்கப்பட்டிருந்த கலைப்பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. [4]
பார்வை நேரம்
ஹாத்வார் மாநில அருங்காட்சியகத்தை சுற்றுலாப் பயணிகள் ஆண்டு முழுதும் கண்டு இன்புறலாம். இந்தியாவைச் சேர்ந்த பயணிகளுக்கு பார்வையாளர் கட்டணம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. வெளிநாட்டிலிருந்து இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள் ஒரு குறிப்பிட்ட அளவிலான நுழைவுக்கட்டணத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருள்களை புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி தரப்படுகிறது. இருந்தாலும், இங்குள்ள காட்சிப் பொருள்களைத் தொடுவதற்கு அனுமதி இல்லை. இந்த அருங்காட்சியகத்திற்கு அருகிலுள்ள தொடருந்து நிலையம் ராஞ்சி ஜங்சன் தொடருந்து நிலையம் ஆகும். இதற்கு அருகிலுள்ள விமான நிலையம் பிர்சா முண்டா விமான நிலையம் ஆகும்.எ[3]
Remove ads
குறிப்புகள்
இவற்றையும் பார்க்கவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads