மாந்தரின ஒய் குறுமவக மரபன் ஒருமைப் பண்புக் குழு

From Wikipedia, the free encyclopedia

மாந்தரின ஒய் குறுமவக மரபன் ஒருமைப் பண்புக் குழு
Remove ads

மாந்தரின மரபியலில், மாந்தரின ஒய் குறுமவக மரபன் ஒருமைப் பண்புக் குழு (human Y-chromosome DNA haplogroup) என்பது ஒய் மரபன் எனும் ஒய் குறுமவகத்தின் மீள்சேரவியலாத மரபனின் பகுதிகளின் வேறுபாட்டால் வரையறுக்கப்படு ஒருமைப் பண்புக் குழுவாகும். இது ஒய் குறுமவகத்தில் உள்ள ஒற்றைக் கருவன் பலவுருவாக்கங்களினல் பதிவாகியுள்ள மாந்தரின மரபியல் பன்மையைக் குறிக்கிறது.[1]

Thumb
ஓங்கலான குடியேற்றத்துக்கு முந்தைய ஒய் குறுமவக ஒருமைப்பண்புக் குழுக்களும் கடலோரமாக நகர்ந்த வழித்தடங்களும்.

ஒய் மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள் ஒய் குறுமவகத் தொகுதிமரபுக் கிளைபிரிவமைப்பின் பேரியல் கிளைகளைக் குறிக்கின்றன. இன்று வாழும் அனைத்து மாந்தரினத்துக்கும் முதல் வேர்நிலை தந்தைவழியின் மிக அண்மைப் பொது மூதாதையை ஒர் குறுமவக ஆதாம் என மரபியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த ஒய் குறுமவக ஆதாமின் காலம் பல ஆய்வுகளில் பலவாறு அறுதியிடப்பட்டுள்ளது. தொல்லியல், மரபியல் தகவல்களின்படி, பழைய கற்கால மாந்தரின முதல் மக்கள்தொகை பனியூழிப் பெரும நிலைக்காலத்தில் நிலவியதாகவும் மாந்தரின ஒய் குறுமவக மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள் தளர்வான காட்டுப் பகுதியில் தோன்றியதெனவும் அடர்காடுகளைத் தவிர்த்துவிட்டு உயர் ஆக்கத்திறன் உள்ள பகுதிகளில் பரவியதெனவும் தெரிய வந்துள்ளது.[2]

Remove ads

பெயரீட்டு மரபு

ஒய் மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள். ஒய் குறுமவகத் தொகுதிவழி கிளைபிரிவமைப்பின் மிகவும் கீழே அமைந்த ஒய் மரபன் ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கக் குறிப்பான்களின் தொடர் இருப்பினை வைத்து வரையறுக்கப்படுகின்றன. இவற்றின் துணைக்கவைகள், ஒய் குறுமவகத் தொகுதிவழி கிளைபிரிவமைப்பின் மிகவும் கீழே அமைந்த ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கத்தை வைத்து, அதாவது ஈற்று ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கத்தின் இருப்பை வைத்து வரையறுக்கப்படுகின்றன.[3][4]>ஒய் குருமவகப் பேரவை(Y Chromosome Consortium) பேரியல் ஒருமைப் பண்புக் குழுக்களையும் அவற்றின் துணைக்கவைகளையும் பெயரிடும் நெடுங்கைமுறைப் பெயரீட்டையும் குறுங்கைமுறைப் பெயரீட்டையும் உருவாக்கியுள்ளது. நெடுங்கைமுறைப்படி, பேரியல் ஒருமைப் பண்புக் குழுக்கள் ஆங்கிலப் பெரிய எழுத்துகள் A முதல் T வரையுள்ள எழுத்துகளாலும் அவற்றின் துணைக்கவைகள் எண்களோடு ஆங்கிலச் சிறிய எழுத்துகளாலும் குறிக்கப்படும். குறுங்கைமுறைப்படி, பேரியல் ஒருமைப் பண்புக் குழுக்களும் அவற்றின் துணைக்கவைகளும் முன்னதன் முதல் எழுத்தும் அதைத் தொடர்ந்து ஒரு சிறுகோடும் பின்னதன் ஈற்று ஒற்றைக் கருவன் பல்லுருவாக்க இருப்பை வரையறுக்கும் பெயரும் அமையும்படி குறிக்கப்படுகின்றன.[5]

புதிய ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கங்கள் கண்டறியப்படும்போது அவற்றையும் உள்ளடக்க நேருவதால் ஒய் மரபன் ஒருமைப் பண்புக் குழுக்களின் பெயரீடுகளும் காலங்காலமாக மாறியவண்ணமே உள்ளன.இதனால் அதன் தொகுதிவழிக் கிளைபிரிவமைப்பும் நீண்டபடியே உள்ளது. தொடர்ந்து பெயரீடு மாறுவதால் பல்வேறு ஆய்வுகளில் குழப்பமான பெயரீடுகள் அமைந்துவிடுகின்றன.[1]நெடுங்கைமுறைப் பெயரீட்டின் இந்தத் தொடர் இயைபின்மையும் இடைஞ்சலான விரிவும், எளிய குறுங்கைமுறைப் பெயரீட்டை நோக்கி நகர வழிவகுத்தது. 2012 செட்டம்பரில் உருவாக்கிய மரபன் குடும்பக் கிளைபிரிவமைப்பு, ஒய் மரபன் ஒருமைப் பண்புக் குழுப் பெயரீட்டு மாற்றத்துக்கான பின்வரும் விளக்கத்தை ஆய்வாளரின் ஒய் மரபன் முடிவுகளின் பக்கத்தில் அளிக்குமாறு வேண்டுகிறது (கவனிக்க, கீழே குறிப்பிட்ட ஒருமைப் பண்புக் குழு தனி ஆய்வாளரைச் சார்ந்தது):[6]

குடும்ப கிளைபிரிவு மரபன் முறையின் நெடுநாளைய வாடிக்கையாளர்கள் செறிநிலை மாந்தரின் YCC-கிளைபிரிவு, புதிய ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கங்கல் கண்டறியும் போது கடந்த பல ஆண்டுகளாகப் படிமலர்ந்து வருவதை அறிவர். சிலவேளைகளில் இவ்வகை ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கங்கள் ஈற்று ஒருமைப் பண்புக் குழுவின் நெடுங்கை விளக்கத்தைக் கணிசமாக மாற்றிவிடுகின்றன. இந்தக் குழப்பத்தால், சில ஆண்டுகளுக்கு முன்பு குறுங்கை வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது, இது கிளைபிரிவின் கவை, ஈற்று ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கம் ஆகியவற்றை வரிசையில் வைத்துக் குறிக்கிறது அதாவது J-L147 என J1c3d என்பதற்கு மாற்றாகக் குறிக்கிறது. எனவே மிக நெருங்கிய குறிப்பில் குடும்பக் கிளைபிரிவு, மரபனில்நடப்பு நெடுங்கையை கிலைபிரிவில் காட்டாமல் விட்டுவிட்டு ஈற்று ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கத்தில் மட்டும் கவனத்தைக் குவிக்கிறது.

இது அறிவியல் உண்மையை மாற்றாது. ஆனால், எளிய குழப்பமற்ற கருத்து உரையாடலுக்கு உதவுகிறது.

பென்னெட் க்ரீனிசுபேன், பேமிலி ட்ரீ டி.என்.ஏ.
மரு. மைக்கேல் எப். ஹேம்மர், அரிசோனா பல்கலைக்கழகம்

Remove ads

பேரியல் ஒய் மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள்

பேரியல் ஒய் மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள் பின்வருமாறு:[7] ஒய் மரபன் ஒருமைப் பண்புக் குழுக்களின் தொகுதிமரபுக் கிளைபிரிவு

ஒய்-மரபன் ஆதாம்

ஒருமைப் பண்புக் குழு A00

ஒருமைப் பண்புக் குழு A0

ஒருமைப் பண்புக் குழு A1a

ஒருமைப் பண்புக் குழு A1b1

BT

ஒருமைப் பண்புக் குழு B

CT
DE

ஒருமைப் பண்புக் குழு D

ஒருமைப் பண்புக் குழு E

CF

ஒருமைப் பண்புக் குழு C

F

ஒருமைப் பண்புக் குழுக்கள் F*, F1, F2, F3

ஒருமைப் பண்புக் குழு G

ஒருமைப் பண்புக் குழு H

IJK
IJ

ஒருமைப் பண்புக் குழு I

ஒருமைப் பண்புக் குழு J

K

K*

LT (K1)

ஒருமைப் பண்புக் குழு L

ஒருமைப் பண்புக் குழு T

K2

K2*

NO (K2a)

ஒருமைப் பண்புக் குழு N

ஒருமைப் பண்புக் குழு O

K2b

ஒருமைப் பண்புக் குழு K2b1

ஒருமைப் பண்புக் குழு P (K2b2)

A, B குழுக்கள்

ஒருமைப் பண்புக் குழு A ஆப்பிரிக்க ஒருமைப் பண்புக் குழுவாகும். இதில் இருந்து தான் இன்றைய அனைத்து ஒருமைப் பண்புக் குழுக்களும் தோன்றின. ஒருமைப் பண்புக் குழு BT ஒருமைப் பண்புக் குழு A வின் ஒரு கிளைப்பிரிவு ஆகும். துல்லியமாக, A1b யின் கிளைப்பிரிவு (A2-T குருசியானி குழு. 2011), பின்வருமாறு:

  • ஒருமைப் பண்புக் குழு A
    • ஒருமைப் பண்புக் குழு A00
    • ஒருமைப் பண்புக் குழு A0 (முன்பு A1b)
    • ஒருமைப் பண்புக் குழு A1 (மேலும் A1a-T)
      • A1a (M31)
      • A1b (also A2-T; P108, V221)
        • A1b1a1 (மேலும் A2; M14)
        • A1b1b (மேலும் A3; M32)
        • BT (M91, M42, M94, M139, M299)
          • ஒருமைப் பண்புக் குழு B (M60)
          • CT (கீழே காண்க)

M168 (CT) சடுதிமாற்றம் உள்ள குழுக்கள்

A, B ஒருமைப் பண்புக் குழுக்களைத் தவிர்த்த மற்ற ஒருமைப் பண்புக் குழுக்களை CT யில் இருந்து தனியாகப் பிரிக்கும் சடுதிமாற்றங்களாக M168 குறிப்பானும் M294 குறிப்பானும் அமைகின்றன. இவை ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறுவதற்கு முன்பே ஏற்பட்டுள்ளன. DE ஐ வரையறுக்கும் சடுதி மாற்றங்கள் வடகிழக்கு ஆப்பிரிக்காவில் 65,00 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்கவேண்டும்.[8]CF ஒருமைப் பண்புக் குழுவை வரையறுக்கும் P143 சடுதிமாற்றம் அதேநேரத்தில் ஏற்பட்டு புத்தியல்பு மாந்தரை ஆசியாவின் தென்கடற்கரைக்குக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது .

  • ஒருமைப் பண்புக் குழு CF (P143) ஆப்பிரிக்காவுக்கு வெளியில் ஐரோப்பாசியாவிலும் ஓசியானியாவிலும் அமெரிக்காவிலும் அமைந்துள்ளது
    • ஒருமைப் பண்புக் குழு C (M130, M216) ஆசியாவிலும் ஓசியானியாவிலும் வட அமெரிக்காவிலும் அமைந்துள்ளது
      • ஒருமைப் பண்புக் குழு C1 (F3393/Z1426)
        • ஒருமைப் பண்புக் குழு C1a (CTS11043)
          • ஒருமைப் பண்புக் குழு C1a1 (M8, M105, M131) யப்பானில் குறைவான நிகழ்வெண்ணில் அமைந்துள்ளது
          • ஒருமைப் பண்புக் குழு C1a2 (V20) ஐரோப்பவிலும் நேபாளத்திலும் குறைவான நிகழ்வெண்ணில் அமைந்துள்ளது
        • ஒருமைப் பண்புக் குழு C1b (F1370, Z16480)
          • ஒருமைப் பண்புக் குழு C1b1 (AM00694/K281)
            • ஒருமைப் பண்புக் குழு C1b1a (B66/Z16458)
              • ஒருமைப் பண்புக் குழு C1b1a1 (M356) இந்த்யத் துணைக்கண்ட்திலும் அரேபியத் தீவகத்திலும் வட சீனாவிலும் குறைவான நிகழ்வெண்ணில் அமைந்துள்ளது
          • ஒருமைப் பண்புக் குழு C1b2 (B477/Z31885)
            • ஒருமைப் பண்புக் குழு C1b2a (M38) இந்தோனேசியா, நியூகினியா, மெலனேசியா, மைக்ரோனேசியா, பாலினேசியா ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளது.
            • ஒருமைப் பண்புக் குழு C1b2b (M347, P309) ஆத்திரேலியா பழங்குடிகளில் அமைந்துள்ளது
      • ஒருமைப் பண்புக் குழு C2 (M217, P44) ஐரோப்பாசியாவிலும் வட அமெரிக்காவிலும் குறிப்பாக, மங்கோலியரிலும் கசாக்குகளிலும் துங்கூசிக் மக்களிலும் தொல்சைபீரியரிலும் நாதேனே மொழி பேசுவோரிலும் அமைந்துள்ளது
    • ஒருமைப் பண்புக் குழு F (M89, M213) (கீழே காண்க)
  • ஒருமைப் பண்புக் குழு DE (M1, M145, M203) ca. 65 ka
    • ஒருமைப் பண்புக் குழு D (M174) 'யப்பான், சீனா 9குறிப்பாக திபெத்), அந்தமான் தீவுகள் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளது
      • D1 (CTS11577)
        • D1a (Z27276, Z27283, Z29263)
          • ஒருமைப் பண்புக் குழு D1a1 (M15) திபெத்தியரிலும் குவாங்கிக் மக்களிலும் யீ மக்களிலும் குமாங்மியனரிலும் அமைந்துள்ளது
          • ஒருமைப் பண்புக் குழு D1a2 (P99) திபெத்தியரிலும் குவாங்கிக் மக்களிலும் நாக்சியரிலும் துருக்கியரிலும் அமைந்துள்ளது
        • ஒருமைப் பண்புக் குழு D1b (M55, M57, M64.1, M179, P12, P37.1, P41.1 (M359.1), 12f2.2) யப்பானில் பரவலாக அமைந்துள்ளது
      • D2 (L1366, L1378, M226.2) மக்தான் தீவிலும் பிலிப்பைன்சிலும் அமைந்துள்ளது
    • Thumb
      ஒருமைப் பண்புக் குழு E
      ஒருமைப் பண்புக் குழு E (M40, M96) பரவலாக ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது
      • ஒருமைப் பண்புக் குழு E1 (P147)
        • ஒருமைப் பண்புக் குழு E1a (M33, M132) முன்பு E1
        • ஒருமைப் பண்புக் குழு E1b (P177)
          • ஒருமைப் பண்புக் குழு E1b1 (P2, DYS391p); முன்பு E3
            • ஒருமைப் பண்புக் குழு E1b1a (V38) ஆப்பிரிக்காவில் நைகர்-காங்கோ மொழி பேசுவோரில் அமைந்துள்ளது; முன்பு E3a
            • ஒருமைப் பண்புக் குழு E1b1b (M215) கிழக்கு ஆப்பிரிக்காவிலும் வடக்கு ஆப்பிரிக்காவிலும் நடுவண் கிழக்கிலும் ஐரோப்பாவிலும் (குறிப்பாக நடுதரைக்கடல் பகுதிக்கு அருகில் உள்ள பகுதிகளிலும்) அமைந்துள்ளது; முன்பு E3b
      • ஒருமைப் பண்புக் குழு E2 (M75)

ஒருமைப் பண்புக் குழு F (G, H, IJ & K) வின் கால்வழிக் குழுக்கள்

Thumb
ஒருமைப் பண்புக் குழு F இன் விலக்கங்களும் அதன் கால்வழிகளும்.

ஒருமைப் பண்புக் குழு F இல் இருந்து வந்த இந்தக் குழுக்கள் உலக மக்கள்தொகையின் 90% அளவில் அமைந்துள்ளன. குறிப்பாக ஆப்பிரிக்காவின் சகாரா உட்பகுதிக்கு வெளியே அமைந்துள்ளன. இந்த IJ இன் சடுதிமாற்ற நகர்வு அலை 45,000 ஆண்டுகளுக்கு முன்பு நடுவண் கிழக்குப் பகுதி அல்லது தெற்காசியாவுக்கு வெளியே ஏற்பட்டு ஐரோப்பாவுக்குப் (குரோமாக்னான்) பரவியுள்ளது.

ஒருமைப் பண்புக் குழு G, நடுவண் கிழக்குப் பகுதியில் அல்லது நெடுங்கிழக்காக ஆப்கானித்தான வார்டாக் பகுதியில் 30,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி புதிய கற்காலப் புரட்சியின்போது ஐரோப்பாவில் பரவியுள்ளது. ஒருமைப் பண்புக் குழு H, 30 முதல் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றி அங்கேயே பரவலாக அமைந்து வரலாற்றுக் காலங்களில் உரோம்மனியர் நகர்வோடு மேற்கே பரவியுள்ளது. ஒருமைப் பண்புக் குழு K, பரவலாக ஐரோப்பாசியாவிலும் ஆத்திரேலியாவிலும் தென்பசிபிக் பகுதிகளிலும் பரவியுள்ளது.

  • இணைநிலைக்குழு F* தென்னிந்தியாவிலும் சிறிலங்காவிலும் யுன்னானிலும் கொரியாவிலும் அமைந்துள்ளது
  • ஒருமைப் பண்புக் குழு G (M201) (அமு. 21,000) ஐரோப்பாசியாவின் பல இனக்குழுக்களில் அமைந்துள்ளது; மிகவும் பொதுவானதாக காகாச்சிலும் இரானிலும் அந்தோலியாவிலும் இலெவாந்திலும் அமைந்துள்ளது.அனைது ஐரோப்பிய நாடுகளிலும் மிகவும் பொதுவாக காகௌசியாவிலும் தென்கிழக்கு உரொமேனியாவிலும்கிரேக்கத்திலும் இத்தாலியிலும் எசுபானியாவிலும்போர்த்துகீசிலும் தைரோ நாட்டிலும் பொகீமியாவிலும் உயர்செறிவாக நடுக்கடல் தீவுகளிலும் அமைந்துள்ளது ; ஆனால் வட ஐரோப்பாவில் பொதுவாக அமையவில்லை.[9][10]. வடமேற்குச் சீனாவிலும் இந்தியாவிலும்பாக்கித்தானிலும் சிறிலங்காவிலும் மலேசியாவிலும் வட ஆப்பிரிக்காவிலும் சிற்றளவில் அமைந்துள்ளது.
    • ஒருமைப் பண்புக் குழு G1
    • ஒருமைப் பண்புக் குழு G2
      • ஒருமைப் பண்புக் குழு G2a
        • ஒருமைப் பண்புக் குழு G2a1
        • ஒருமைப் பண்புக் குழு G2a2
        • ஒருமைப் பண்புக் குழு G2a3
          • ஒருமைப் பண்புக் குழு G2a3a
          • ஒருமைப் பண்புக் குழு G2a3b
            • ஒருமைப் பண்புக் குழு G2a3b1
      • ஒருமைப் பண்புக் குழு G2b
      • ஒருமைப் பண்புக் குழு G2c (முன்பு ஒருமைப் பண்புக் குழு Haplogroup G5)
        • ஒருமைப் பண்புக் குழு G2c1
  • ஒருமைப் பண்புக் குழு H (M69) தெற்காசியாவில் பரவலாக்க் காணப்படுகிறது
    • ஒருமைப் பண்புக் குழு H1
    • ஒருமைப் பண்புக் குழு H2
  • ஒருமைப் பண்புக் குழு IJK
    • ஒருமைப் பண்புக் குழு IJ (P123, P124, P125, P126, P127, P129, P130) அமு. 45,000
      • ஒருமைப் பண்புக் குழு I (M170, M258) ஐரோப்பாவிலும் நடுவண் கிழக்கின் சில பகுதிகளிலும் அமைந்துள்ளது
        • ஒருமைப் பண்புக் குழு I1 (M253) வட ஐரோப்பாவில் பரவலாக அமைந்துள்ளது
        • ஒருமைப் பண்புக் குழு I2 (P215) I2B1 (m223)தவிர, தென்கிழக்கு ஐரோப்பாவிலும் சார்டினியாவிலும் முதன்மையாக அமைந்துள்ளது. I2B1 (m223) முதன்மையாக மேற்கு, நடுவண், வடக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது.
      • ஒருமைப் பண்புக் குழு J (M304, S6, S34, S35)
        • ஒருமைப் பண்புக் குழு J* (சொகோத்திராவுக்கு வெளியே அருகியே அமைந்துள்ளது)
        • ஒருமைப் பண்புக் குழு J1 தாகத்தனின் வடகிழக்கு காகாசிய மொழி பேசுவோரிலும் மெசபட்டோமியா இலெவாந்து அரேபியத் தீவகம் எத்தியோப்பியா, வட ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளின் செமித்தியரிலும் அமைந்துள்ளது.
        • ஒருமைப் பண்புக் குழு J2 (M172) இது முதன்மையாக, மெசபட்டோமியா, அந்தோலியா, இலெவாந்து, கிரீசு, பால்கன்கள், இத்தாலி, ஈரான், தெற்கு/நடுவண் ஆசியா காகாச்சு பகுதிகளில் அமைந்துள்ளது.
    • ஒருமைப் பண்புக் குழு K (M9) ஐரோப்பாசியாவிலும் ஓசியானியாவிலும்மெரிக்காவிலும் பரவியுள்ளது.
      • LT (கீழே காண்க)

ஒருமைப் பண்புக் குழு K (M9) இன் கால்வழிக் குழுக்கள்

ஒருமைப் பண்புக் குழு L முதன்மையாக தெற்காசியாவில் அமைந்துள்ளது. ஒருமைப் பண்புக் குழு M மெலனேசியாவில் பரவலாக உள்ளது. ஒருமைப் பண்புக் குழு NO 35 முதல் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆசியா வில் தோன்றியது.

ஒருமைப் பண்புக் குழு N தென்கிழக்கு ஆசியாவில் தோன்றி, வடக்கே சைபீரியாவில் பரவியுள்ளது; மேற்கே, யுராலிக் மக்களில் மிகப் பொதுவாக அமைந்துள்ளது. ஒருமைப் பண்புக் குழு O கிழக்கு ஆசியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் உயர் நிகழ்வெண்ணிலும், தென்பசிபிக்கிலும், நடுவண் ஆசியாவிலும் தெற்காசியாவிலும் குறைவான நிகழ்வெண்ணிலும் அமைந்துள்ளது. ஒருமைப் பண்புக் குழு P , ஒருமைப் பண்புக் குழுக்கள் Q, R ஆகியவற்றை உருவாக்கியுள்ளது. இவை வேறுபடுத்த முடியாத நிலையில் மிகவும் அருகியே உள்ளன. இது நடுவண் ஆசியாவிலோ அல்டாய் மலைகள் பகுதியிலோ தோன்றியிருக்க வாய்ப்புள்ளது. ஒருமைப் பண்புக் குழு Q வும்கூட நடுவண் ஆசியாவில் தோன்றி, கிழக்கில் நகர்ந்து வட அமெரிக்காவை அடைந்திருக்கலாம்.

  • ஒருமைப் பண்புக் குழு K* மெலனேசியாவிலும் ஆத்திரேலியாவிலும் அமைந்துள்ளது
  • ஒருமைப் பண்புக் குழு K1 (முன்பு ஒருமைப் பண்புக் குழு K3) இந்தியத் துணைக்கண்டத்தில் அமைந்துள்ளது.
  • ஒருமைப் பண்புக் குழு K2 (முன்பு ஒருமைப் பண்புக் குழு K4)
  • ஒருமைப் பண்புக் குழு K3 (முன்பு ஒருமைப் பண்புக் குழு K6) மெலனேசியாவிலும் பாலினேசியாவிலும் அமைந்துள்ளது.
  • ஒருமைப் பண்புக் குழு K4 பாலியில் உள்ளது
  • ஒருமைப் பண்புக் குழு LT (L298/P326)
    • ஒருமைப் பண்புக் குழு L (M20) தெற்காசியாவிலும் நடுவண் ஆசியாவிலும் தென்மேற்காசியாவிலும் நடுத்தரைக்கடல் தீவுகளிலும் அமைந்துள்ளது.
    • ஒருமைப் பண்புக் குழு T (முன்பு ஒருமைப் பண்புக் குழு K2) (M184, M70, M193, M272) ஆப்பிரிக்காவில் ஆப்பிரிக்க-ஆசிய மொழி பேசுவோரிலும் நடுவண் கிழக்குப் பகுதியிலும் நடுத்தரைக்கடல் தீவுகளிலும் தெற்காசியாவிலும் அமைந்துள்ளது. சுசியாக்கென்சிகள், சோமாலியர்கள், இபிசாவின் எவிசுங்குகள், சுடில்ஃப்செர்கள், எத்தியோப்பியர்கள், புல்பேக்கள், எகிப்தியர்கள் , ஓமனியர்கள் ஆகிய இனக்குழுக்களில் அமைந்துள்ளது; மேலும் குறைந்த நிகழ்வெண்ணில் நடுத்தரைக்கடல் தீவுகளிலும் இந்தியாவிலும் அமைந்துள்ளது
  • ஒருமைப் பண்புக் குழு MNOPS (rs2033003/M526)
    • ஒருமைப் பண்புக் குழு M (P256) நியூகினியாவிலும் மெலனேசியாவிலும் அமைந்துள்ளது
    • ஒருமைப் பண்புக் குழு NO (M214) 35-40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது.
      • ஒருமைப் பண்புக் குழு NO* (மிகக் குறைவான பரவல்)
      • ஒருமைப் பண்புக் குழு N (M231) ஐரோப்பாசியாவி9ன் மிக வடக்கே யுராலிக் மக்களில் அமைந்துள்ளது.
      • ஒருமைப் பண்புக் குழு O (M175) கிழக்கு ஆசியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் தென்பசிபிக்கிலும் அமைந்துள்ளது.
    • ஒருமைப் பண்புக் குழு P (M45)
      • ஒருமைப் பண்புக் குழு P* (மிகக் குறைவான பரவல் )
      • ஒருமைப் பண்புக் குழு Q (MEH2, M242, P36) சைபீரியாவிலும் அமெரிக்காவிலும் அமைந்துள்ளது.
      • ஒருமைப் பண்புக் குழு R (M207, M306) ஐரோப்பாவிலும் மேற்காசியாவிலும்நடுவண் ஆசியாவிலும் தெற்காசியாவிலும் அமைந்துள்ளது.
    • ஒருமைப் பண்புக் குழு S (M230) (முன்பு ஒருமைப் பண்புக் குழு K5) நியூகினியாவின் மேட்டுநிலங்களில் அமைந்துள்ளது

ஒருமைப் பண்புக் குழு NO (M214) இன் கால்வழிக் குழுக்கள்

ஒருமைப் பண்புக் குழு NO அமு 35-40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிழக்காசியாவில் தோன்றியது. ஒருமைப் பண்புக் குழு N கிழக்காசியாவில் தோன்றி, மேற்கே சைபீரியாவிலும் வடக்கே யுராலிக் மக்களிலும் பரவியுள்ளது. ஒருமைப் பண்புக் குழு O கிழக்காசியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் உயர் wநிகழ்வெண்ணிலும்ஓசியானாவின் தென்பசிபிக்கிலும்நடுவண் ஆசியாவிலும் தெற்காசியாவிலும் குறைவான நிகழ்வெண்ணிலும் அமைந்துள்ளது.

  • ஒருமைப் பண்புக் குழு NO (M214) அமு 35-40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. (மிகவும் குறைந்த பரவல்)
    • ஒருமைப் பண்புக் குழு N (M231) ஐரோப்பாசியாவின் மிக வடக்கில் யுராலிக் மக்களில் அமைந்துள்ளது
      • ஒருமைப் பண்புக் குழு N1 (LLY22g)
    • ஒருமைப் பண்புக் குழு O (M175) கிழக்காசியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் தென்பசிபிக்கிலும் அமைந்துள்ளது
      • ஒருமைப் பண்புக் குழு O1 (F265/M1354, CTS2866, F75/M1297, F429/M1415, F465/M1422)
        • ஒருமைப் பண்புக் குழு O1a (M119, CTS31, F589/Page20, L246, L466) கிழக்கு, தெற்கு சீனாவிலும் தைவானிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் குறிப்பாக ஆத்திரனேசிய மக்களிலும் தாய்-காதை மக்களிலும் அமைந்துள்ளது
        • ஒருமைப் பண்புக் குழு O1b (P31, M268)
          • ஒருமைப் பண்புக் குழு O1b1 (M95) யப்பானிலும் தென் சீனாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் இந்தியத் துணைக்கண்டத்தில் குறிப்பாக ஆத்திரனேசிய மக்களிலும் தாய்-காதை மக்களிலும் மலாய்களின் இனக்குழுக்களிலும் இந்தோனேசியர்களிலும் அமைந்துள்ளது
          • ஒருமைப் பண்புக் குழு O1b2 (SRY465, M176) யப்பானிலும் கொரியாவிலும் மஞ்சூரியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் அமைந்துள்ளது
      • ஒருமைப் பண்புக் குழு (M122) கிழக்காசியா, தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் ஆத்திரனேசியாவிலும் (பாலினேசியா (உட்பட்ட) அமைந்துள்ளது

ஒருமைப் பண்புக் குழு P (M45) இன் கால்வழிக் குழுக்கள்

ஒருமைப் பண்புக் குழு P (M45) இருகிளைகளைக் கொண்டுள்ளது. அவை Q-M242 and R-M207 என்பனவாகும். இவை M45 ஐப் பொதுவானக் குறிப்பானாகக் கொண்டுள்ளன.மேலும் குறைந்தது 18 பிற ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கங்களையும் பெற்றுள்ளன.

ஒருமைப் பண்புக் குழு Q

Q என்பது SNP M242 குறிப்பானால் வரையறுக்கப்படுகிறது. இது நடுவண் ஆசியாவில் 17,000 முதல் 22,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக நம்ப்ப்படுகிறது.[11][12] ஒருமைப் பண்புக் குழுவின் துணைக்கவைகள் அவற்றின் சடுதிமாற்றங்களுடன் 2008 ஆம் ஆண்டு பன்னாட்டு மரபியல் கால்வழிக் கழகத்தின் (ISOGG) வரையறைப்படிக்கான கிளைபிரிவு [13] கீழே தரப்பட்டுள்ளது. ss4 bp, rs41352448 என்பது STR இன் மதிப்பு ஆகையால், இக்கிளைபிரிவில் குறிக்கப்படவில்லை. இந்தப் புதுமையான குறைந்த மதிப்பு Q கால்வழியில் (Q5) இந்திய மக்கள்தொகையில் அமைந்துள்ளது[14]


2008 ஆம் ஆண்டு பன்னாட்டு மரபியல் கால்வழிக்கழகத்தின்படியானக் கிளைப்பிரிவு

  • Q (M242)
    • Q*
    • Q1 (P36.2)
      • Q1*
      • Q1a (MEH2)
        • Q1a*
        • Q1a1 (M120, M265/N14) டங்கன்கள், ஏன் சீனர்கள், அசாராக்கள், யப்பானியர்கள், கொரியர்கள், திபெத்தியர்கள் ஆகிய மக்களில் தாழ்நிகழ்வெண்னில் அமைந்துள்ளது[15][16]
        • Q1a2 (M25, M143) தென்மேற்கு ஆசியா, நடுவண் ஆசியா, சைபீரியா ஆகிய மக்கள்தொகைகளில் தாழ்முதல் நடுநிலை நிகழ்வெண்களில் அமைந்துள்ளது
        • Q1a3 (M346)
          • Q1a3* பாக்கித்தானம், இந்தியா, திபெத்தில் தழ்நிகழ்வெண்ணில் அமைந்துள்ளது
          • Q1a3a (M3) அமெரிக்கா மக்களில் முதன்மையாக அமைந்துள்ளது
            • Q1a3a*
            • Q1a3a1 (M19) தென் அமெரிக்காவில் திகுனா பழங்குடி மக்களிடமும் வாயூ பழங்குடி மக்களிடமும் அமைந்துள்ளது[17]
            • Q1a3a2 (M194)
            • Q1a3a3 (M199, P106, P292)
        • Q1a4 (P48)
        • Q1a5 (P89)
        • Q1a6 (M323) யேமேனிய யூதரிடம் கணிசமான சிறுபான்மையினரிடம் அமைந்துள்ளது
      • Q1b (M378) தாழ் நிகழ்வெண்னில் அசாராக்களிடமும் சிந்தி மக்களிடமும் அமைந்துள்ளது


ஒருமைப் பண்புக் குழு R

Thumb
ஒருமைப் பண்புக் குழு R இன் விலக்கங்களும் அதன் கால்வழிகளும்.

ஒருமைப் பண்புக் குழு R என்பது SNP M207 எனும் குறிப்பானால் வரையறுக்கப்படுகிறது. ஒருமைப் பண்புக் குழு R இன் பெரும்பகுதி ஐரோப்பாசிய சுதெப்பியில் தோன்றிய தன் பிறங்கடைக் (வாரிசு) கால்வழியான துணைக்குழு R1 ஆல் ஆனதாகும். R1 இல் இரண்டு துனைக்குழுக்கள் R1aவும் R1bயும் அடங்குகின்றன.

ஒருமைப் பண்புக் குழு R1a முதனிலை இந்தோ-இரானிய மொழி பெசுவோரிடமும் பால்டோ-சுலாவிக் மொழி பேசுவோரிடமும் உள்ளது. இது அண்மையில் நடுவண் ஆசியாவிலும் தெற்காசியாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் பரவியுள்ளது.

ஒருமைப் பண்புக் குழு R1b, மேற்கு ஐரோப்பாவின் ஓங்கலான ஒருமைப் பண்புக் குழுவாகும். மேலும் இது ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் நீர்த்தநிலையில் பரவியுள்ளது.ளைதன் துணைக்குழு R1b1a2 (M269) அண்மை மேற்கு ஐரோப்பியர்களில் மிகப் பொதுவாகப் பரவியுள்ள ஒருமைப் பண்புக் குழுவாகும்.

  • ஒருமைப் பண்புக் குழு R1 (M173) மேற்கு ஐரோப்பாசியா முழுவதிலும் அமைந்துள்ளது
    • ஒருமைப் பண்புக் குழு R1a (M17) நடுவண் ஆசியாவிலும் தெற்காசியாவிலும் வடக்கு, கிழக்கு, நடுவண் ஐரோப்பாவிலும் அமைந்துள்ளது
    • ஒருமைப் பண்புக் குழு R1b (M343) மேற்கு ஐரோப்பாவிலும், மேற்கு ஆசியாவிலும் நடுவண் ஆசியாவிலும் வட ஆப்பிரிக்காவிலும் வட கேமெரூனிலும் அமைந்துள்ளது
  • ஒருமைப் பண்புக் குழு R2 (M124) தெற்காசியாவிலும் காகாச்சிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் அமைந்துள்ளது
Remove ads

ஒருமைப் பண்புக் குழுக்களின் தோற்றக் காலநிரல்

ஒருமைப் பண்புக் குழு தோன்றிய காலம் தோன்றிய இடம் வாய்ப்புள்ள TMRCA[18][19]
A00192–307,000 ஆண்டுகள் முன்பு
E50-55,000 ஆண்டுகள் முன்பு[20][21]கிழக்கு ஆப்பிரிக்கா[22] அல்லது ஆசியா[23]27-59,000 ஆண்டுகள் முன்பு
F38-56,000 ஆண்டுகள் முன்பு
IJ30-46,000 ஆண்டுகள் முன்பு
K40-54,000 ஆண்டுகள் முன்பு
E-M215 (E1b1b)31-46,000 ஆண்டுகள் முன்பு[24]39-55,000 ஆண்டுகள் முன்பு
P27-41,000 ஆண்டுகள் முன்பு
J19-44,500 ஆண்டுகள் முன்பு[25]
R20-34,000 ஆண்டுகள் முன்பு
I15-30,000 ஆண்டுகள் முன்பு
R-M173 (R1)13-26,000 ஆண்டுகள் முன்பு
I-M438 (I2)28-33,000 ஆண்டுகள் முன்பு[26]16,000-20,000 ஆண்டுகள் முன்பு
E-M3520,000-30,000 ஆண்டுகள் முன்பு[24]15–21,000 ஆண்டுகள் முன்பு
J-M267 (J1)15-34,000[25] ஆண்டுகள் முன்பு
R-M420 (R1a)22,000 ஆண்டுகள் முன்பு[27]8-10,000 ஆண்டுகள் முன்பு
R-M343 (R1b)22,000 ஆண்டுகள் முன்பு [28]மேற்காசியா [29]
Nat least 21,000 ஆண்டுகள் முன்பு (STR age)[30]
I-M253 (I1)11-21,000[31] or 28-33,000 ஆண்டுகள் முன்பு [26]3-5,000 years ago
J-M172 (J2)15,000-22,000[25] ஆண்டுகள் முன்பு19-24,000 ஆண்டுகள் முன்பு[32]
E-M7815-20,000[24] or 17,500-20,000 ஆண்டுகள் முன்பு [33]வடகிழக்கு ஆப்பிரிக்கா[33]குறைந்தது 17,000 ஆண்டுகள் முன்பு[33]
E-V1212,500-18,000 ஆண்டுகள் முன்பு[33]
R-M1713 ,000[27] or 18,000 ஆண்டுகள் முன்பு[34]இந்தியா
I-L460 (I2a)present 13,000 ஆண்டுகள் முன்பு [35]
I-M22311-18,000 ஆண்டுகள் முன்பு[31]
E-V137-17,000 ஆண்டுகள் முன்பு[33]மேற்கு ஆசியா[33]4,000-4,700 ஆண்டுகள் முன்பு (Europe)
6,800-17,000 ஆண்டுகள் முன்பு (ஆசியா)[33]
R-Z28011-14,000 ஆண்டுகள் முன்பு[36]
N-M46 (N1c1)at least 12,000 ஆண்டுகள் முன்பு (STR age)[30]
R-M45811,000 ஆண்டுகள் முன்பு[36]
I-P376-16,000,[31] present 10,000 years ago[37]
I-M423 (I2a1b)present 10,000 ஆண்டுகள் முன்பு[37]
I-M26 (I2a1a)2-17,000,[31] அண்மைக்கு 8,000 ஆண்டுகள் முன்பு[37]
R-M2695,500-8,000 ஆண்டுகள் முன்பு[38]
R-L11, R-S1163-5,000 ஆண்டுகள் முன்பு

மேலும் காண்க

  • மக்கள்தொகைவாரியாக ஒய் குறுமவக மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள்
  • ஐரோப்பிய மக்கள்தொகைவாரியாக ஒய் குறுமவக மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள்
  • ஐரோப்பாவின் மரபியல் வரலாறு
  • மரபியல் கால்வழி
  • கால்வழி மரபியல் ஓர்வுகள்

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads