மான்கீம் செயல்முறை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மான்கீம் செயல்முறையானது (Mannheim process) ஐதரசன் குளோரைடு மற்றும் சோடியம் சல்பேட்டு ஆகியவற்றைத் தயாரிப்பதற்கானத் தொழிற்துறை தயாரிப்பு முறையாகும்.
வரலாறு
1772 ஆம் ஆண்டு சுவீடிசு வேதியியலாளர் காரல் வில்லெம் சீலே கடல் நீரிலிருந்துது பெறப்பட்ட உப்பு மற்றும் ஈய மஞ்சள் ஆகியவற்றை வெப்பப்படுத்தும் போது சிறிய அளவில் எரிசோடா (சோடியம் ஐதராக்சைடு) விளைபொருளாகக் கிடைப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்வரும் ஆண்டுகளில், வேறு பலர் இந்த முறையை மாற்றம் செய்தனர். சோடியம் சல்பேட் (உப்பு க்கட்டி) ஆனது இரும்புத் துருவல்கள் மற்றும் நிலக்கரி ஆகியவற்றுடன் இணைத்து வினைப்படுத்தும் போது சோடியம் கார்பனேட்டு (சோடா சாம்பல் என அழைக்கப்படுவது) உற்பத்தி செய்யப்படுவது கண்டறியப்பட்டது. மற்றொரு முறையில் உப்பு அல்லது உப்புக்கட்டியை கால்சியம் ஐதராக்சைடு (நீர்த்த சுண்ணாம்பு) உடன் வினைப்படுத்தும் போது சிறிற அளவில் தரம் குறைந்த சோடா சாம்பல் கிடைக்கிறது. இந்த மாற்று முறையானது பெரிய அளவிலான தயாரிப்புகளுக்கு பொருத்தமற்ற முறையாகும்.[1]
1780 கள் மற்றும் 1790 களில், நிக்கோலா லெப்லாங்கு என்பவர் தொழில்முறையில் அதிக அளவில் சோடியம் கார்பனேட்டு தயாரிப்பதற்கான ஒரு மிகச்சரியான முறையைக் கண்டுபிடித்தார். இந்த முறை லெப்லாங்கு செயல்முறை என அழைக்கப்படுகிறது. மான்கீம் செயல்முறையில் இடைநிலைப் பொருளாக கிடைத்த சோடியம் சல்பேட்டை லெப்லாங்கு செயல்முறை பயன்படுத்திக் கொண்டது. லெப்லாங்கு செயல்முறையில் உருவாக்கப்படும் கனரக மாசான ஐதரசன் குளோரைடு வளிமண்டலத்தில் சேரும் போது சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது. இதைத் தடுக்கும் நோக்குடன் அல்லது இத்தகைய உமிழ்வுகளை ஒழுங்குபடுத்தும் நோக்குடன் ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்றத்தில் கார/ஆல்கலி சட்டம் 1863 பிறப்பிக்கப்பட்டது. இச்சட்டமே காற்று மாசுபடுத்துதலுக்கு எதிரான திறன் மிக்க முதல் சட்ட நடவடிக்கை என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[2]
1861 ஆம் ஆண்டில் வேதியியலாளர் மற்றும் தொழிலதிபர் எர்னசுட்டு சால்வே என்பவர் சோடியம் கார்பனேட்டைத் தயாரிப்பதற்கான மேலும் நேரடியான முறை ஒன்றை வளர்த்தெடுத்தார். இந்த முறையின் வரவு, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களை முன்னிறுத்தி லெப்லாங்கின் முறையினை வழக்கொழிந்து போக காரணமாய் இருந்தது எனலாம்.
Remove ads
வேதியியல்
இந்த வினையின் வினைபடு பொருட்களாக கந்தக அமிலம் (H2SO4) மற்றும் சோடியம் குளோரைடு (NaCl, சாதாரண உப்பு) ஆகியவை உள்ளன. இந்த வினையின் விளைபடு பொருட்களாக சோடியம் சல்பேட்டு (Na2SO4) மற்றும் வாயு நிலை ஐதரசன் குளோரைடு (HCl) ஆகியவை உள்ளன.
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads