மாயங் அகர்வால்

இந்தியத் துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia

மாயங் அகர்வால்
Remove ads

மாயங் அகர்வால் (16 பிப்பிரவரி 1991) [2] என்பவர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் தொடக்க ஆட்டக் கார பேட்ஸ்மேன் என்ற பெயர் பெற்றவர். இது வரை கருநாடக அணிக்காக விளையாண்டுள்ளார். இவர் விஜய் அசாரே கோப்பை கிரிக்கட் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார். பல போட்டிகளில் கலந்து கொண்ட இவர் இது வரை இரண்டாயிரம் ஓட்டங்கள் எடுத்துள்ளார். பெங்களுருவில் பிசப் காட்டன் ஆண்கள் பள்ளியிலும் ஜெயின் பல்கலைக் கழகத்திலும் பயின்ற மாணவர் ஆவார்.[3] வலதுகை மட்டையாளரான இவர் இந்தியத் தேசியத் துடுப்பாட்ட அணி தவிர டெல்லி டேர்டெவில்ஸ், இந்திய அ அணி , 19 வயதிற்கு உட்பட்ட இந்திய அனி, கருநாட மாநிலத் துடுப்பாட்ட அணி, 19 வயதிற்கு உட்பட்ட கருநாடக மாநிலத் துடுப்பாட்ட அணி, கிங்சு லெவன் பஞ்சாப், ரசிங் புனே சூப்பர் ஜெயன்ட்சு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு ஆகிய அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...
Remove ads

உள்ளூர்ப் போட்டிகள்

முதல்தரத் துடுப்பாட்டம்

2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் துடுப்பாட்டத் தொடரில் இவர் கருநாடக மாநிலத் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். நவம்பர் 7, மைசூரில் சார்கண்ட் மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல்தரத் துடுப்பட்டப்போட்டியில் இவர் அறிமுகமனார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 12 பந்துகளில் 10 ஓட்டங்களை எடுத்து ஜேசுரபந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 12 நான்கு ஓட்டங்களும் ஒரு ஆறு ஓட்டங்களும் அடங்கும். இந்தப் போட்டி சமனில் முடிந்தது.[4]

பட்டியல் அ

2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற விஜய் அசாரே கோப்பைத் துடுப்பாட்டத் தொடரில் இவர் கருநாடக மாநிலத் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். பெப்ரவரி 23, பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் தமிழ்நாடு மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பட்டியல் அ துடுப்பாட்டம்போட்டியில் இவர் அறிமுகமனார். இந்தப் போட்டியில் 12 பந்துகளில் 10 ஓட்டங்களை எடுத்து ஜேசுராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் தமிழ்நாடு மாநிலத் துடுப்பாட்ட அணி 62 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[5] 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற விஜய் அசாரே கோப்பைத் துடுப்பாட்டத் தொடரில் இவர் கருநாடக மாநிலத் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். அக்டோபர் 23, பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் சத்தீசுகர் மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பட்டியல் அ துடுப்பாட்டம் போட்டியில் 33 பந்துகளில் 47 ஓட்டங்களை எடுத்து ஜேசுராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் கருநாடக மாநிலத் துடுப்பாட்ட அணி ஒன்பது இலக்குகளால் வெற்றி பெற்றது.[6]

இருபது20

2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி கோப்பைத் துடுப்பாட்டத் தொடரில் இவர் கருநாடக மாநிலத் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். அக்டோபர் 14, ஐதராபாத்து மைதானத்தில் கோவா மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இருபது20 போட்டியில் இவர் அறிமுகமனார். இந்தப் போட்டியில் 42 பந்துகளில் 52 இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு உதவினார். இந்தப் போட்டியில் கருநாடக மாநிலத் துடுப்பாட்ட அணி எட்டு இலக்குகளில் வெற்றி பெற்றது.[7]

Remove ads

சர்வதேசப் போட்டிகள்

தேர்வுத் துடுப்பாட்டம்

2018 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .டிசம்பர் 26 மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 161 பந்துகளில் 76 ஓட்டங்களை எடுத்து கம்மின்சு பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 102 பந்துகளில் 42 ஓட்டங்கள் எடுத்து கம்மின்சு பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி 137 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[8] 2019 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைத் தொடரில் விளையாடியது .அக்டோபர் 16, ராஞ்சித் துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 19 பந்துகளில் 10 ஓட்டங்களை எடுத்து ரபடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் ஓர் ஆட்டப்பகுதி மற்றும் இந்திய அணி 202 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[9]

Remove ads

சான்றுகள்

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads