மாயா ராய்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாயா ராய் (Maya Ray) ஓர் வழக்கறிஞரும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியுமாவார். 1972இல் மேற்கு வங்கத்தின் இராய்கஞ்ச் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு நடந்த இடைத்தேர்தலில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Remove ads
தொழில்
இராய்கஞ்ச் மக்களவைத் தொகுதியின் உறுப்பினரான இவரது கணவர் சித்தார்த்த சங்கர் ராய் 1972இல் மேற்கு வங்கத்தின் முதல்வராக பதவியேற்ற பிறகு அந்த இடத்துக்கு நடந்த இடைத்தேர்தலில் இவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2]
ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவைஉறுப்பினர் மறைந்த தாமஸ் ஜே. மான்டன் என்பவரால் ஒரு வழக்கறிஞராக இவர் ஒருமுறை "புகழ்பெற்ற வழக்கறிஞர் மற்றும் முன்னாள் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரி" என்று குறிப்பிடப்பட்டார்,
Remove ads
இறப்பு
இவர் தனது கணவர் இறந்து இரண்டரை வருடங்களுக்குப் பிறகு, 11 மார்ச் 2013 அன்று சிறுநீரக செயலிழப்பால் இறந்தார்.[3]
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads