மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (MARA Technological University, மலாய்: Universiti Teknologi MARA; UiTM) என்பது மலேசியா, சிலாங்கூர், சா ஆலாம் மாநகரில் தலைமை வளாகத்தைக் கொண்ட ஒரு பொதுப் பல்கலைக்கழகம் ஆகும். இந்தப் பல்கலைக்கழகத்திற்கு மலேசியா முழுவதும் மேலும் 34 வளாகங்கள் உள்ளன.

விரைவான உண்மைகள் முந்தைய பெயர்கள், குறிக்கோளுரை ...

இது கிராமப்புற மலாய்க்காரர்களுக்கு உதவுவதற்காக, ரிடா பயிற்சி மையம் ("ஊரக, தொழில்துறை மேம்பாட்டு ஆணைய பயிற்சி மையம்", RIDA) எனும் பெயரில் 1956-ஆம் ஆண்டில் 50 மாணவர்களுடன் தொடங்கப்பட்டது. தற்போது இந்தப் பல்கலைக்கழகம், மலேசியாவின் மிகப்பெரிய உயர்கல்வி நிறுவனமாக வளர்ந்துள்ளது.[2]

இளங்கலை முதல் முதுகலை நிலை வரை ஆங்கிலத்தில் கற்பிக்கப்படும் 500-க்கும் மேற்பட்ட கல்வித் துறைகளை இந்தப் பல்கலைக்கழகம் வழங்குகிறது. தற்போது 170,514 முழுநேர, பகுதிநேர பூமிபுத்ரா மாணவர்கள்; மற்றும் பன்னாட்டு மாணவர்கள் உள்ளனர். முதுகலை திட்டம் பன்னாட்டு மாணவர்களுக்கும்; பூமிபுத்ரா மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது; பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு வழங்கப்படுவது இல்லை.[3]

Remove ads

பொது

இந்தப் பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவதற்கு முன்னோடியாக இருந்தவர் ஐக்கிய மலாய் தேசிய அமைப்பான அம்னோவின் முன்னாள் தலைவர் ஓன் ஜாபார் என்பவராகும். அவரின் முயற்சியால் 1956-ஆம் ஆண்டில் ரிடா பயிற்சி மையம் தோற்றுவிக்கப்பட்டது.[4]

1951-ஆம் ஆண்டில் ஓன் ஜாபார் இலங்கைக்குச் சென்று இருந்த போது அங்குள்ள கிராமப்புற மக்களுக்கு வழங்கப்படும் வேளாண் பயிற்சித் திட்டங்களைக் கண்டு, அதே போல மலாயாவிலும் உருவாக்கலாம் எனும் ஒரு முன்னோடித் திட்டத்தைக் கொண்டு வந்தார். அவரின் தொடர் முயற்சிகளினால் "ரிடா" எனும் ஊரக மற்றும் தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. கிராமப்புற மலாய்க்காரர்களை வளம் பெறச் செய்வதே அந்த ஆணையத்தின் தலையாய நோக்கமாகும்.

மாரா தொழில்நுடபக் கல்லூரி

ரிடா பயிற்சி மையம் சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயாவில் நவம்பர் 1956-இல் செயல்படத் தொடங்கியது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக 14 பிப்ரவரி 1957-இல் திறக்கப்பட்டது. 1963-இல் மலேசியா கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பிறகு, சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் இருந்து மாணவர்களை சேர்க்கப்பட்டனர்.[5]

இந்தப் பயிற்சி மையம் பின்னர் 1965-இல் மாரா கல்லூரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 1967-இல், மாரா தொழில்நுடபக் கல்லூரி எனத் தரம் உயர்த்தப்பட்டது.[6] மலேசியாவில் பயிற்சி பெற்ற பூமிபுத்ராக்களின் தேவையை நிறைவு செய்யும் வகையில் அதன் தரம் உயர்த்தப்பட்டது. ஆகஸ்டு 1999-இல், பிரதமர் மகாதீர் முகமது மாரா தொழில்நுடபக் கல்லூரி எனும் பெயரை மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் என மாற்றுவதாக அறிவித்தார்.[7]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads