மார்க்கண்ட நதி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மார்கண்ட நதி அல்லது மார்கண்டேய நதி (Markanda River) என்னும் ஆறு தென்பெண்ணை ஆற்றின் துணை ஆறாகும். இவாவாறு கர்நாடக மாநில எல்லைப் பகுதியான முத்தியால்மடுகு என்ற மலைப் பகுதியில் வெளியேறும், சிறுசிறு ஒடைகள் சேர்ந்து உருவாகிறது.[1] அங்கிருந்து தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நுழைகிறது. பின்னர் இந்த ஆற்றில் திம்மக்கா ஏரியில் இருந்து வுரும் உபரி நீரும் கலக்கிறது. இந்த ஆறானது வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் தீர்த்தம், பாலனப்பள்ளி, சிக்கரிப்பள்ளி வழியாக மாரசந்திரம் தடுப்பணையை வந்தடைகிறது. அங்கிருந்து செல்லும் ஆறானது எண்ணேகொல்புதூர் என்ற பகுதியில் தென்பெண்னை ஆற்றில் கலக்கிறது.[2]
Remove ads
பாசனவசதி பெறும் பகுதிகள்
இந்த ஆற்றின் குறுக்கே வேப்பனப்பள்ளி அருகே குப்பச்சிப்பாறை என்ற இடத்தில் தடுப்பண தடுப்பணையில் இருந்து வெட்டப்பட்ட கால்வாய் வழியாக ஆற்றின் நீரானது மாரசந்திரம், ஜீனூர், கொரல்நத்தம், ஜிங்கலூர், விரோஜிப்பள்ளி, நெடுமருதி, திப்பனப்பள்ளி, பண்டப்பள்ளி, கொத்தூர், தளவாப்பள்ளி, குந்தாரப்பள்ளி, சாமந்த மலை வழியாக கல்லுகுறி வழியாக கிருஷ்ணகிரி படேதலாவ் ஏரியை (பெரிய ஏரி) வந்தடைகிறது. இந்த ஏரியில் இருந்து செல்லும் தண்ணீரானது பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஏரிகளுக்கு செல்லும் வகையில் வாய்கால் அமைக்கப்பட்டள்ளது. இந்த கால்வாயின் கரையோரத்தில் உள்ள ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன. [3]
Remove ads
ஆற்றுநீர் வழக்கு
இந்த ஆற்றின் குறுக்கே கர்நாடக மாநிலமானது 50 மீட்டர் உயர அணையை தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் கட்டத்துவங்கியது. இந்த அணையை கட்ட தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு அரசு இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. ஆனால் உச்சநீதிமன்றம் அணைகட்ட தடைவிதிக்க மறுத்து வழக்கை கள்ளுபடி செய்து 2010 நவம்பர் 14 அன்று உத்தரவிட்டது.[4]
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads