கருநாடகம்

இந்திய மாநிலம் From Wikipedia, the free encyclopedia

கருநாடகம்map

கருநாடகம் (Karnāṭaka, கன்னடம்: ಕರ್ನಾಟಕ, கர்நாடகம்) என்பது இந்தியாவின் தென் பகுதியில் உள்ள, ஒரு மாநிலமாகும். மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின்கீழ் இம்மாநிலம் நவம்பர் 1, 1956 அன்று உருவாக்கப்பட்டது. மைசூர் மாநிலம் என்று அழைக்கப்பட்டு வந்த இம்மாநிலம் 1973-இல் கர்நாடகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

விரைவான உண்மைகள் கருநாடகம், நாடு ...
கருநாடகம்
Thumb
Thumb
Thumb
Thumb
Thumb
Thumb
பண்: "கர்நாடக மாநிலப் பண்"
Thumb
கருநாடகாவின் வரைபடம்
ஆள்கூறுகள் (பெங்களூரு): 12.97°N 77.50°E / 12.97; 77.50
நாடு இந்தியா
உருவாக்கம்1 நவம்பர் 1956
(மைசூரு மாநிலத்தில் இருந்து)
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
பெங்களூரு
அரசு
  நிர்வாகம்கர்நாடக அரசு
  ஆளுநர்தவார் சந்த் கெலாட்
  முதலமைச்சர்சித்தராமையா (காங்கிரஸ் கட்சி)
  சட்டமன்றம்ஈரவை
  நாடாளுமன்ற தொகுதிகள்மாநிலங்களவை 12
மக்களவை 28
  உயர் நீதிமன்றம்கருநாடக உயர் நீதிமன்றம்
பரப்பளவு
  மொத்தம்1,91,791 km2 (74,051 sq mi)
  பரப்பளவு தரவரிசை7-ஆவது
உயர் புள்ளி
1,925 m (6,316 ft)
தாழ் புள்ளி
0 m (0 ft)
மக்கள்தொகை
 (2011)[2]
  மொத்தம்6,11,30,704
  தரவரிசை8-ஆவது
  அடர்த்தி320/km2 (830/sq mi)
இனம்கன்னடிகா
GDP (2018–19)
  Total14.08 இலட்சம் கோடி (ஐஅ$160 பில்லியன்)
  Per capita1,74,551 (ஐஅ$2,000)
நேர வலயம்ஒசநே+05:30 (IST)
ஐஎசுஓ 3166 குறியீடுIN-KA
வாகனப் பதிவுKA
அதிகாரப்பூர்வ மொழிகள் கன்னடம்[5]
HDI (2017) 0.682[6] medium · 18-ஆவது
Literacy (2011)75.36%[7]
பாலின விகிதம் (2011)973 /1000 [7]
இணையதளம்www.karnataka.gov.in
மூடு

கருநாடக மாநிலமானது மேற்கில் அரபுக் கடல், வட மேற்கில் கோவாவையும், வடக்கில் மராட்டிய மாநிலத்தையும், வடகிழக்கில் தெலுங்கானாவையும், கிழக்கில் ஆந்திரப் பிரதேசத்தையும், தென் கிழக்கில் தமிழ்நாட்டையும், தென் மேற்கில் கேரளாவையும், எல்லைகளாகக் கொண்டுள்ளது. இம் மாநிலம் 74,122 சதுர மைல்கள், அதாவது 191,976 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் 5.83% ஆகும். 30 மாவட்டங்களைக் கொண்டுள்ள இம்மாநிலம் பரப்பளவில் இந்தியாவின் எட்டாவது மிகப் பெரிய மாநிலமாகத் திகழ்வதுடன் மக்கள் தொகையில் இந்திய அளவில் ஒன்பதாவது இடத்தையும் கொண்டுள்ளது. கன்னடம் ஆட்சி மொழியாகவும் பெருமளவு பேசப்படும் மொழியாகவும் உள்ளது.

கருநாடகம் என்ற பெயருக்குப் பல வித சொல்லிலக்கணம் பரிந்துரைக்கப்பட்டாலும், 'கரு' மற்றும் 'நாடு' என்ற கன்னட வார்த்தைகளில் இருந்துதான் அது உருவாக்கப்பட்டுள்ளது என்பது பொதுவான கருத்து. இந்த வார்த்தைகளின் பொருள் மேட்டு நிலம் என்பதாகும். ஆங்கிலேயர்கள் இம்மாநிலத்தை கர்நாடிக் என்றும் சில சமயங்களில் கர்நாடக் என்றும் குறிப்பிட்டனர்.

பழங்கற்கால பாரம்பரியத்தைக் கொண்டுள்ள கருநாடகம், தொன்மையான மற்றும் நடு கால இந்தியாவின் சில வலிமை வாய்ந்த பேரரசுகளின் தாயகமாகவும் திகழ்ந்துள்ளது. இப்பேரரசுகளால் சார்பகண்ட மெய்ப்பொருள் அறிவச்செம்மல்களும், இசை வல்லுநர்களும் சமய, பொருளாதார மற்றும் இலக்கிய இயக்கங்களைத் தொடங்கினர். அவை இன்றுவரை நிலைத்திருப்பது குறிப்பிடத் தகுந்தது. இந்தியாவிலேயே கன்னட மொழி எழுத்தாளர்கள்தான் அதிக அளவில் ஞானபீட விருது பெற்றுள்ளார்கள். மாநிலத் தலைநகராக விளங்கும் பெங்களூரு, இந்தியா சந்தித்து வரும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் முன்னோடியாக உள்ளது.

வரலாறு

Thumb
சாளுக்கியர் மற்றும் இராசரகுடர்களால் கட்டப்பட்ட மல்லிகார்சுனர் கோவில், காசி விசுவநாதர் கோவில் - பட்டாடக்கல், வட கருநாடகம். இது யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்

கருநாடக வரலாற்றை அப்பகுதியில், கிடைத்துள்ள கைக் கோடரிகள் மற்றும் இதர கண்டுபிடிப்புகள் மூலம் பழங்கற்கால கைக் கோடரி கலாச்சாரத்துடன் அதற்கு இருந்துள்ள தொடர்பை அறிந்துகொள்ள முடிகிறது. புதிய கற்காலக் கலாச்சாரத்தின் சான்றுகளும் இம்மாநிலத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.[8][9] பண்டைய சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தின் எச்சமான ஹரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் கருநாடகத் தங்க சுரங்களைச் சார்ந்ததாக அறியப்படுவதன் வழியே கருநாடகப் பகுதி பண்டைய காலம் தொட்டே வணிகம், கலாச்சாரம் ஆகியவற்றில் முன்னேறி இருப்பது தெரிய வருகிறது. பொ.ஊ. 3 நூற்றாண்டுகளுக்கு முன்னதாக, கருநாடகத்தின் பெரும் பகுதி, பேரரசர் அசோகரின் மௌரிய ஆட்சிக்கு உட்படு முன், நந்தா பேரரசின் கீழ் இருந்தது. நான்கு நூற்றாண்டுகள் தொடர்ந்த சதவாகன ஆட்சி பெருமளவு கருநாடகத்தை அவர்களின் அதிகாரத்தின் கீழ் கொள்ள உதவி புரிந்தது. சாதவாகனர்களின் ஆட்சி இறக்கம் கருநாடகத்தை அடிச்சார்ந்த, முதல் அரசநாடுகளான கடம்பர்கள் மற்றும் மேலைக் கங்க வழியினரும் வளர வழி வகுத்தது. அதுவே, அப்பகுதி பக்கச் சார்பற்ற அரசியல் உருபொருளாக புகுந்து அடையாளம் காணவும் வழி வகுத்தது. மௌரிய சர்மாவால் தொடங்கப்பட்ட கடம்ப வழிமரபு, பனவாசியை தலைநகராக கொண்டது.[10][11] அது போல், மேலைக் கங்கர் மரபினர், தாலகாட்டை தலைநகராக கொண்டு அமைக்கப் பட்டது.[12][13]

கடம்பர், சாளுக்கியர்

கடம்பர் மரபைச் சார்ந்த முதலாவது அரசாங்கங்கள் கன்னட மொழியை நிர்வாக மொழியாகப் பயன்படுத்தினர் என்பது கால்மிதி கல்வெட்டு வழியாகவும் மற்றும் பொ.ஊ. ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த செப்பு நாணயங்கள் வழியாகவும் அறியலாம்.[14][15] இவ்வம்சத்தைத் தொடர்ந்து சாளுக்கியர் வலிமை பெற்று ஆட்சியைக் கைப்பற்றினர். தக்காணத்தை முழுவதுமாக ஆட்சிக்குள் கொண்டு வந்த சாளுக்கியர் கருநாடகத்தை முழுவதும் இணைத்த பெருமை பெற்றவர்கள்.[16][17][18][19][20][21] சாளுக்கியர் கட்டிடக் கலை, கன்னட இலக்கியம், இசை ஆகியவற்றைப் பெரிதும் வளர்த்தனர்.[22][23]

விசயநகரப் பேரரசு, இசுலாமியர் ஆட்சி

Thumb
திப்பு சுல்தான்

பொ.ஊ. 1565ஆம் ஆண்டு, கருநாடகம் மட்டுமல்லாது தென் இந்தியா முழுவதும் முக்கிய அரசியல் மாற்றத்தைச் சந்தித்தது. பல நூற்றாண்டுகளாக வலிமை பெற்று திகழ்ந்த விசயநகரப் பேரரசு இசுலாமிய சுல்தானகத்துடன் தோல்வியைத் தழுவியது. பின் பிஜபூர் சுல்தானகத்திடம் ஆட்சி சிறிது காலம் இருந்து, பின் மொகலாயர்களிடம் 17ஆம் நூற்றாண்டு இடம் மாறியது. சுல்தானகத்தின் ஆட்சிகளின் போது உருது மற்றும் பாரசீக இலக்கியங்களும் வளர்க்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து வடக்கு கருநாடகம் ஐதராபாத் நிசாமாலும் தெற்கு கர்நாடகம் மைசூர் உடையார்களாளும், ஆளப்பட்டது. மைசூர் அரசரான இரண்டாம் கிருட்டிணராச உடையார் மரணத்தைத் தொடர்ந்து, படைதலைவரான ஹைதர் அலி ஆட்சியைக் கைப்பற்றினார். ஆங்கிலேயருடன் பல போர்களில் வெற்றி கொண்ட அவரைத் தொடர்ந்து அவரது மகன் திப்பு சுல்தான் ஆட்சிப் பொறுப்பேற்று ஆங்கிலேயரை எதிர்த்தார். ஆங்கிலேயருடனான நான்காவது போரிற் திப்பு சுல்தான் மரணம் அடைந்ததன் வழியே மைசூர் அரசு ஆங்கிலேய அரசுடன் 1799 இல் ஒருங்கிணைக்கப்பட்டது.

புவியமைப்பு

கருநாடகத்தின் மேற்கில் அரபிக் கடலும், வடமேற்கில் கோவாவும், வடக்கில் மகாராஷ்டிரமும், கிழக்கில் ஆந்திரப் பிரதேசமும், தென்கிழக்கில் தமிழகமும், தென்மேற்கில் கேரளமும் அமைந்துள்ளன. கருநாடகத்தில் பெரும்பாலும் மலைப் பகுதிகளே காணப்படுகிறது. கருநாடக மாநிலத்தின் தென் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. காவிரி ஆறு கருநாடகத்தில் தொடங்குகிறது.

Thumb
கருநாடகம் நில உருவப்படம்
Thumb
இந்தியாவின் உயரமான ஜோக் அருவி ஷராவதி ஆற்றில்

இம் மாநிலம் 3 முக்கிய நிலப்பகுதிகளைக் கொண்டுள்ளது கரவாளி கடற்கரை நிலப்பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான மலைப்பாங்கான மலைநாடு நிலப்பகுதி மற்றும் தக்காண பீடபூமியின் பாயலுசீமா சமவெளி. மாநிலத்தின் பெரும்பகுதி பாயலுசீமா சமவெளியின் வரண்ட நிலப்பகுதியாகும். பெயர் [24]. கருநாடகத்தில் பாயும் ஆறுகளாவன: காவேரி, துங்கபத்ரா, கிருஷ்ணா ஆறு மற்றும் சரவதி .

கருநாடகத்தில் நான்கு பருவகாலங்கள் உணரப்படுகின்றன. குளிர்காலம் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களிலும், கோடைக்காலம் மார்ச் மற்றும் மே மாதங்களிலும், பருவக்காற்று காலம் சூன் முதல் செப்டம்பர் வரையிலும்,பருவக்காற்று கடைக்காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் உணரப்படுகின்றது..

மாவட்டங்கள்

Thumb

1,91,791 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கர்நாடக மாநிலம் 31 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 31 மாவட்டங்கள், பெங்களூர், பெல்காம், குல்பர்கா, மைசூர் ஆகிய நான்கு ஆட்சிப்பிரிவுகளுள் அடங்கும்.

மக்கள் தொகையியல்

2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கருநாடகத்தின் மொத்த மக்கள் தொகை 61,095,297 ஆக உள்ளது. அதில் 30,966,657 ஆண்களும்; 30,128,640 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 973 பெண்கள் வீதம் உள்ளனர். 2001 ஆண்டின் மக்கள் தொகையுடன் ஒப்புநோக்கும்போது மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 15.60% உயர்ந்துள்ளது. மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 319 நபர்கள் வீதம் உள்ளனர். நகரப்புறங்களில் 38.67% மக்களும், மக்கள் கிராமப்புறங்களிலும் 61.33% வாழ்கின்றனர். சராசரி கல்வியறிவு 75.36% ஆகவும், ஆண்களின் கல்வியறிவு 82.47 % ஆகவும், பெண்களின் கல்வியறிவு 68.08% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,161,033 ஆக உள்ளது.[25]

சமயம்

ஆறு கோடியே பதினொன்று இலட்சம் மக்கள்தொகை கொண்ட கருநாடக மாநிலத்தில் 51,317,472 (84.00 %) மக்கள் இந்து சமயத்தைப் பின்பற்றுபவராகவும், 7,893,065 (12.92%) இசுலாம் சமயத்தைப் பின்பற்றுபவராகவும், 1,142,647 (1.87%) கிறித்தவ சமயத்தைப் பின்பற்றுபவராகவும், 440,280 (0.72%) சமண சமயத்தைப் பின்பற்றுபவராகவும், 95,710 (0.16%) பௌத்த சமயத்தைப் பின்பற்றுபவராகவும், 28,773 (0.05%) சீக்கிய சமயத்தைப் பின்பற்றுபவராகவும் உள்ளனர். பிற சமயத்தை பின்பற்றுவர்கள் எண்ணிக்கை 11,263 (0.02 %) ஆக உள்ளது. சமயம் குறிப்பிடாதவர்கள் எண்ணிக்கை 166,087 (0.27%) ஆக உள்ளது.

மொழிகள்

கருநாடகம் மாநிலத்தில் கன்னட மொழி அலுவல் மொழியாகவும் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழியாகவும் உள்ளது. சுமார் 64.75% மக்கள் இம்மொழியை பேசுகின்றனர். இது தவிர, தமிழ், மராத்தி, கொங்கனி, மலையாளம், துளு, பஞ்சாபி, உருது மற்றும் இந்தி ஆகிய மொழிகளும் பேசப்படுகின்றன.

பண்பாடு

கர்நாடகப்
பண்பாடு
Thumb

கன்னடம்
இலக்கியம்
நடனம்
கர்நாடக இசை
நாடகம்
ஓவியம்
சினிமா
உணவு
உடை
கட்டிடக்கலை
சிற்பம்
விளையாட்டு
பாதுகாப்பு கலை

பொருளாதாரம்

Thumb
கருநாடகம்: உள்மாநில உற்பத்தி

கடந்த ஆண்டு கருநாடகத்தின் உள்மாநில உற்பத்தி குறைந்தது ரூ. 2152.82 பில்லியன் ($ 51.25 billion) என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் வேகமாக பொருளாதார வளர்ச்சி பெறும் மாநிலங்களில் ஒன்றாக கருநாடகம் கருதப்படுகிறது.[26] இம்மாநிலத்தின் 2007–2008 ஆண்டுகளுக்கான உள்மாநில உற்பத்தி வளர்ச்சி விகிதம் குறைந்தது 7% .[27] 2004-05 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கருநாடக மாநிலத்தின் பங்களிப்பு குறைந்தது 5.2% சதவிதமாக இருந்தது.[28]

கருநாடகம் கடந்த பத்தாண்டுகளில் மிகப்பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது. பத்தாண்டுகளில் உள்மாநில உற்பத்தி 56.2% சதவிகிதமும், தனி நபர் உள்மாநில உற்பத்தி 43.9% சதவிகிதமும் வளர்ந்துள்ளது.[29] 2006–2007 ஆம் ஆண்டுகளில் மட்டும் ரூ. 78.097 பில்லியன் ($ 1.7255 பில்லியன்) கருநாடகம் அன்னிய நேரடி முதலிடாக பெற்று இந்திய மாநிலங்களில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.[30] 2004ஆம் ஆண்டின் முடிவில், கருநாடகத்தில் வேலையில்லாதவர் விகிதம் 4.94% . இது தேசிய சராசரியான 5.99% விட குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.[31] கருநாடகத்தின் தலைநகரமான பெங்களூர் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரமாக கருதப்படுகிறது. கருநாடகத்தில் தங்கச் சுரங்கங்கள் அமைந்துள்ளன. கருநாடகம் மிகப்பெரிய பொதுத் துறை தொழிலகங்களின் மையமாக விளங்குகிறது. இந்துஸ்தான் வானூர்தியல் நிறுவனம் (Hindustan Aeronautics Limited) , நாட்டு விண்வெளி ஆய்வகங்கள்(National Aerospace Laboratories), பாரத மிகுமின் தொழிலகம் (Bharat Heavy Electricals Limited), இந்திய தொலைபேசித் தொழிலகங்கள்(Indian Telephone Industries), இந்துஸ்தான் பொறியியங்கி கருவிகள்(Hindustan Machine Tools), இந்திய மற்றும் பன்னாட்டு கணிப்பொறி நிறுவனங்கள் பெங்களூரு நகரில் உள்ளன. இந்திய அறிவியல் கழகம் மற்றும் இஸ்ரோ போன்ற அறிவியல் மையங்கள் பெங்களூருவில் அமைந்துள்ளது.

சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்

கர்நாடக மாநில முக்கிய சுற்றுலாத் தலங்களும் கோயில்களும்; மைசூர் அரண்மனை, ஜோக் அருவி, சிவசமுத்திரம் அருவி, ஹம்பி, ஹளேபீடு, பாதமி குகைக் கோயில்கள், விஜயாபுரா கோல்கும்பாபந்திப்பூர் தேசியப் பூங்கா, பன்னேருகட்டா தேசியப் பூங்கா, அன்ஷி தேசியப் பூங்கா, சரவணபெலகுளா, அமிர்தேஸ்வரர் கோயில், உடுப்பி கிருஷ்ணர் கோயில், மேல்கோட்டை செல்வநாராயணர் கோயில், முருகன் கோயில், கேசவர் கோவில், சென்னகேசவர் கோயில், சென்னகேசவர் கோயில், பேளூர், மூகாம்பிகை கோயில், விருபாட்சர் கோயில், ஹோய்சாலேஸ்வரர் கோவில், திருக்கோகர்ணம் மகாபலேசுவரர் கோயில், முருதீசுவரா கோயில், சாமுண்டீசுவரி கோயில் மற்றும் தர்மஸ்தால கோயில் ஆகும்.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.