மார்க்கண்டேயா

கே. ராம்நாத் இயக்கத்தில் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

மார்க்கண்டேயா
Remove ads

மார்க்கண்டேயா (Markandeya) 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முருகதாசா, கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. என். சுந்தரம், சி. எஸ். குழந்தைவேலு பாகவதர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]

விரைவான உண்மைகள் மார்க்கண்டேயா, இயக்கம் ...
Remove ads

திரைக்கதை

என்றும் 16-வயதாக இருக்க சிவபெருமானால் வரமளிக்கப்பட்ட மார்க்கண்டேயர் என்னும் சிறுவனின் புராணக் கதையே இதன் திரைக்கதை ஆகும்.

நடிகர்கள்

பின்னாளில் பிரபல பின்னணிப் பாடகராக விளங்கிய வி. என். சுந்தரம் மார்க்கண்டேயராக நடித்தார். அவரது பெயர் மாஸ்டர் வி. என். சுந்தரம் எனக் காண்பிக்கப்பட்டது. குழந்தைவேலு பாகவதர் மார்க்கண்டேயரின் தந்தை மிருகண்டு முனிவராகவும் கண்ணாபாய் தாயாகவும் நடித்தனர். கண்ணாபாய் நன்கு பாடக்கூடியவராக இருந்ததால் அவர் லேடி பாகவதர் என அழைக்கப்பட்டார். கே. பி. ஸ்ரீநிவாசன் நாரதராக நடித்தார். எஸ். என். கண்ணமணி ஒரு நாடோடிப் பெண்ணாக பாடி, ஆடி நடித்திருந்தார்.[2]

Remove ads

தென்னிந்திய திருத்தலங்கள்

இத்திரைப்படத்தில் தென்னிந்திய திருத்தலங்களான சிதம்பரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருக்கடையூர் ஆகிய இடங்களிலுள்ள திருக்கோவில்கள் சிறப்பாக கே. ராம்நாத்தினால் படம்பிடிக்கப்பட்டுக் காண்பிக்கப்பட்டன.[2]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads