மார்த்தாவின் திராட்சைத் தோட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மார்த்தாவின் திராட்சைத் தோட்டம் (Martha's Vineyard, உள்ளகப் பெயர்: நோப்பெ) மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் காட் முனைக்குத் தெற்கே உள்ள தீவு ஆகும். இது வசதி மிக்கோருக்கான கோடைக்கால குடியேற்றமாக மிகவும் அறியப்பட்டுள்ளது. இதில் சிறிய சப்பாக்கிடிக் தீவும் அடங்கும்; இது பொதுவாக பெரிய தீவுடன் இணைக்கப்பட்டிருந்தாலும் சூறாவளிகளாலும் புயல்களாலும் இரண்டு தீவுகளும் பிரிக்கப்படுகின்றன. கடைசியாக 2007இல் இவை பிரிந்தன. ஏப்ரல் 2, 2015 நிலவரப்படி இரண்டு தீவுகளும் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளன.[1][2] முக்கோண வடிவிலுள்ள இத்தீவின் நீளம் ஏறத்தாழ 20.5 மைல்கள் (33 கி.மீ.) ஆகும். 87.48 சதுர மைல்கள் (231.75 சதுர கி.மீ.) பரப்பளவுள்ள மார்த்தாவின் திராட்சைத் தோட்டம் ஐக்கிய அமெரிக்காவின் 57வது பெரிய தீவாக உள்ளது.

Remove ads
ஒளிப்படத் தொகுப்பு
கிரேஞ்சு கூடம்
மேற்கு டிசுபரிகே ஹெட் லைட்
அக்குன்னாசேப்பி பெர்ரி
எட்கார்டவுன்
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads