மார்த்தா நஸ்பாம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மார்த்தா க்ரேவென் நஸ்பாம் (Martha Craven Nussbaum, பிறப்பு: மே 6, 1947) ஒரு அமெரிக்க மெய்யியல் அறிஞர் ஆவார். தற்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் நெறிமுறைகள் துறைகளில் எர்ன்ஸ்ட் ஃப்ரண்டு பெருந்தொண்டு பேராசிரியராக இருக்கும் அவர், அங்கு சட்டப் பள்ளி மற்றும் தத்துவவியல் துறையில் கூட்டாக நியமிக்கப்பட்டுள்ளார். பண்டைய கிரேக்க மற்றும் ரோமானிய தத்துவம், அரசியல் தத்துவம், இருத்தலியல், பெண்ணியம் மற்றும் விலங்குரிமை உள்ளிட்ட நெறிமுறைகள் ஆகிய துறைகளில் தனித்த ஈடுபாடு கொண்டவர். பண்டைய கிரேக்க-உரோமானிய இலக்கியங்கள், தெய்வீகவியல், அரசறிவியல் ஆகியவற்றில் இணை நியமனங்களையும் கொண்டுள்ள நஸ்பாம், தெற்காசிய ஆய்வுகள் குழுவின் உறுப்பினராகவும், மனித உரிமைகள் திட்டத்தின் குழு உறுப்பினராகவும் உள்ளார். அவர் இதற்கு முன்பு ஹார்வர்ட் மற்றும் பிரௌன் பல்கலைக்கழகங்களில் கற்பித்திருக்கிறார்.[3][4]
தி ஃபிராஜைலிட்டி ஆஃப் குட்னஸ் (1986), கல்டிவேட்டிங் ஹ்யூமானிடி (1997), செக்ஸ் அண்ட் சோஷியல் ஜஸ்டிஸ் (1998), ஹைடிங் ஃப்ரம் ஹியூமானிடி (2004), ஃப்ரான்டியர்ஸ் ஆஃப் ஜஸ்டிஸ் (2006), ஃப்ரம் டிஸ்கஸ்ட் டு ஹ்யூமானிடி (2010) உள்ளிட்ட பல நூல்களை நஸ்பாம் இயற்றியுள்ளார். அவர் கலை மற்றும் மெய்யியலில் 2016 கியோட்டோ பரிசு, 2018 பெர்க்ரூன் பரிசு, 2021 ஹோல்பெர்க் பரிசு ஆகியவற்றைப் பெற்றவராவார்.[5][6][7]
Remove ads
இவற்றையும் பார்க்க
மேற்கோள் தரவுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads