மார்ஸ் எக்ஸ்பிரஸ்

From Wikipedia, the free encyclopedia

மார்ஸ் எக்ஸ்பிரஸ்
Remove ads

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் சார்பாக செவ்வாய் கோளை ஆராய அனுப்பப்பட்ட விண்கலமே மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆகும்.

விரைவான உண்மைகள் திட்ட வகை, இயக்குபவர் ...
Remove ads

உருவாக்கம்

இங்கிலாந்து,செருமனி உட்பட பல ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்போடு , ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமான இ.எஸ்.ஓ.சி-யால் மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலம் உருவானது.ஆறு கோடியே இருபது லட்சம் அமெரிக்க டாலரினால் இது தயாரிக்கப்பட்டது.2003-ம் ஆண்டு சூன் இரண்டு அன்று மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலம் அனுப்பப்பட்டது.ஸ்டார் செம் என்னும் ராக்கெட் இதனை தூக்கி சென்றது.ஆறு மாத பயணத்திற்குப் பின் திசம்பர் 25-ஆம் திகதி செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்ட பாதையில் நூழைந்தது மார்ஸ் எக்ஸ்பிரஸ்.

Remove ads

பீகிள்-2

மார்ஸ் எக்ஸ்பிரஸுடன் வின்ஞானிகள் பீகிள் என்ற ரோபோவையும் அனுப்பி வைத்தார்கள்.இது ஒரு மீட்டர் உயரம் உள்ள ரோபோவாகும்.இதை வடிவமைத்தவர் இங்கிலாந்தை சேர்ந்த காலின் பிலிஜ்ஜர் ஆவார்.பீகில்-2 பத்திரமாக பாராசூட் உதவியுடன் தரை இரக்கப்பட்டது.ஆனால் அது எலக்ரானிக் பாகங்களில் ஏற்பட்ட கோளாரினால் அது செயலிழந்து.

சாதனை

ரோபோ செயலிழந்தாலும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஒன்பது ஆண்டுகளாக செவ்வாயை ஆராய்ந்து வருகிறது.செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில் பனிப்பிரதேசம் இருப்பதற்கான அறிகுறிகளை 2004 சனவரியில் கண்டுபிடித்தது.அதில் 87 சதவிகிதம் கார்பன்-டை-ஆக்சைடும்,13 சதவிகிதம் பனியும் இருப்பது தெரியவந்துள்ளது.மீத்தேன்,அம்மோனியா போன்ற வாயுக்கள் அங்கு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தினத்தந்தி சிறுவர் மலர் 27-9-2013 இதழ்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads