மாற்கு (நற்செய்தியாளர்)

From Wikipedia, the free encyclopedia

மாற்கு (நற்செய்தியாளர்)
Remove ads

நற்செய்தியாளரான புனித மாற்கு (இலத்தீன்: Mārcus; கிரேக்க மொழி: Μᾶρκος; எபிரேயம்: מרקוס) என்பவர் பாரம்பரியப்படி மாற்கு நற்செய்தியின் ஆசிரியராகக் கருதப்படுபவர் ஆவார். மேலும் இவர் இயேசுவின் எழுபது சீடர்கலுள் ஒருவராகவும். கிறித்தவத்தின் மிகவும் பழைமையான நான்கு ஆயர்பீடங்களுல் ஒன்றான அலெக்சாந்திரியா திருச்சபையின் நிருவனராகவும் கருதப்படுகின்றார்.

விரைவான உண்மைகள் நற்செய்தியாளரான புனித மாற்கு, நற்செய்தியாளர், மறைசாட்சி ...

வரலாற்றாசிரியரான யுசிபசின் (Eccl. Hist. 2.24.1) படி, மாற்கு அனனியாசு என்பவருக்குப்பின்பு, நீரோ மன்னனின் ஆட்சியின் எட்டாம் ஆண்டில் (62/63) அலெக்சாந்திரியாவின் ஆயரானார். பாரம்பரியப்படி கி.பி 68 இல் இவர் மறைசாட்சியாக மரித்தார் என்பர்.[2][1][3][4][5]

மாற்கு நற்செய்தி 14:51-52இல் கெத்சமனித் தோட்டத்தில் இயேசு கைதுசெய்யப்பட்டப்பின்பு அவர் பின்னே சென்ற இளைஞர் இவர் என்பது மரபு; இயேசுவை கைது செய்தவர்கள் இவரைப்பிடித்தபோது தம் வெறும் உடம்பின் மீது இருந்த நார்ப்பட்டுத் துணியைப் விட்டு விட்டு இவர் ஆடையின்றித் தப்பி ஓடினார்.

கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் இவரின் விழா ஏப்ரல் 25இல் கொண்டாடப்படுகின்றது. இவரை பொதுவாக இரண்டு இறக்கைகளை உடைய சிங்கத்தைக்கொண்டு கலைகளில் சித்தரிப்பர்.[6]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads