மால்வா அதிவிரைவு ரயில்

From Wikipedia, the free encyclopedia

மால்வா அதிவிரைவு ரயில்
Remove ads

மால்வா எக்ஸ்பிரஸ் (மால்வா விரைவுத் தொடருந்து) தினசரி செயல்படக் கூடிய ஒரு தொடருந்துச் சேவையாகும். இது மத்திய பிரதேசத்தின் மிகப்பெரிய தொழில் மையமான இந்தூர் நகரின், இந்தூர் தொடருந்துச் சந்திப்பினை ஜம்மு காஷ்மீரின் ஜம்மு தாவி தொடருந்துச் சந்திப்புடன் இணைக்கிறது.

விரைவான உண்மைகள் மால்வா விரைவுத் தொடருந்து, கண்ணோட்டம் ...
Remove ads

வரலாறு

இந்தத் தொடருந்து முதலில் இந்தூர் மற்றும் புது டெல்லிக்கு இடையே அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் ஜம்மு தாவி தொடருந்துச் சந்திப்பு வரை விரிவுபடுத்தப்பட்டது. அரசு ரீதியாக பாகிஸ்தானைச் சென்றடைவதற்காக முதன் முதலாக இயக்கப்பட்ட தொடருந்து இது. அக்டோபர் 22, 1985 பாகிஸ்தானின் லாகூர் வரை செல்லும்வகையில், இந்தூர் – லாகூர் சிறப்புத் தொடருந்தாக இயக்கப்பட்டது. 55 நாட்கள் செயல்படுத்தப்பட்ட இந்தத் தொடருந்துச் சேவை ஒரு சில இடர்பாடுகளால் நிறுத்தப்பட்டது. மத்திய பிரதேசம் மற்றும் இந்தியாவினை பொறுத்தவரை  ISO  சான்றிதழ் பெற்ற ஐந்தாவது தொடருந்து இதுவாகும்.[1]

Remove ads

வழிப்பாதை மற்றும் நிறுத்தங்களுக்கான நேரங்கள்

மேலதிகத் தகவல்கள் எண், நிலையத்தின் பெயர் (குறியீடு) ...
Remove ads

வண்டி எண்

Thumb
இந்தூரிலிருந்து புறப்படும் மால்வா விரைவுத் தொடருந்து
Thumb
லூதியானா சந்திப்பில் இந்தூர் நோக்கிச் செல்லும் மால்வா விரைவுத் தொடருந்து.I

இந்தூரிலிருந்து புறப்படும் தொடருந்துக்கு வண்டி எண் 12919 ஆகவும், ஜம்மு காஷ்மீரிலிருந்து புறப்படும் தொடருந்துக்கு வண்டி எண் 12920 எனவும் கொடுக்கப்பட்டுள்ளது. மால்வா எக்ஸ்பிரஸ் சுமார் 42 நிறுத்தங்களைக் கொண்டு செயல்படுகிறது.[2]

தொடருந்து பெட்டிகள் விவரங்கள்

மால்வா விரைவுத் தொடருந்து பொதுவாக 24 பெட்டிகளைக் கொண்டிருக்கும். இதில் உணவு மற்றும் பண்டக வசதிகளும் உள்ளன.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads