மாளவிகா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஸ்வேதா கோனுர் (பிறப்பு: சூலை 19, 1979)[1][2] என்ற இயற்பெயரைக் கொண்ட மாளவிகா எண்ட் லவலீ மாடல் அழகியாக இருந்து பின்னர் திரைப்பட நடிகையானார்.[3] இவர் தமிழ், இந்தி, தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். சுந்தர் சி. இயக்கத்தில் வெளியான திரைப்படமான உன்னை தேடி திரைப்படத்தில் அஜித்குமாருடன் முக்கிய வேடத்தில் நடித்து தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார். 2002-2003 இல் இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள் வெற்றியளிக்காததால் தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்கச் சென்றார். 2004 ஆம் ஆண்டு சூர்யா நடித்த பேரழகன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் மறுபடியும் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தில் கமலுடன் நடித்தார். பின்னர் பாலிவுட்டில் சீ யூ எட் 9 திரைப்படத்திலும் நடித்தார். இவர் ரோஜா வனம், வெற்றிக் கொடி கட்டு, சந்திரமுகி, வியாபாரி, திருட்டு பயலே ஆகிய படங்களில் நடத்துள்ளார்.[4] 2007-ல் சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

விரைவான உண்மைகள் மாளவிகா, இயற் பெயர் ...

தற்போது 38 வயதாகும் இவருக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கணவருடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகிறார். நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads