மாவிட்டபுரம்
இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாவிட்டபுரம் யாழ்ப்பாண மாவட்டத்தில் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு ஊராகும். யாழ்ப்பாணம் -காங்கேசன்துறை வீதியில் யாழ்ப்பாண நகரில் இருந்து சுமார் 9 மைல்கள் தொலைவிலும், காங்கேசன்துறையில் இருந்து சுமார் ஒரு மைல் தொலைவிலும் இவ்வூர் உள்ளது. மாவிட்டபுரம், மாவிட்டபுரம் தெற்கு, என இரண்டு கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட இவ்வூரின் வடக்கு எல்லையில் காங்கேசன்துறையும், மேற்கு எல்லையில் கொல்லங்கலட்டியும், தெற்கு எல்லையில் தெல்லிப்பழையும் கிழக்கில் வீமன்காமமும் உள்ளன.[1]
மாவிட்டபுரத்தில் மிகவும் பழமை வாய்ந்த மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் உள்ளது. இக் கோயிலின் வரலாறும், இவ்வூருக்குப் பெயர் வந்த வரலாறும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திக் கூறப்படுகின்றன. மாவிட்டபுரத்தில் மிகவும் பழமை வாய்ந்த மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் உள்ளது. இக் கோயிலின் வரலாறும், இவ்வூருக்குப் பெயர் வந்த வரலாறும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திக் கூறப்படுகின்றன.
சோழநாட்டு இளவரசி ஒருத்திக்கு குதிரைமுக நோய் எனப்படும் நோய் ஏற்பட்டதாகவும் இது எந்த மருந்துக்கும் குணமாகாததால், யாழ்ப்பாணத்துக்கு வந்து இன்றைய மாவிட்டபுரப் பகுதியில் இருந்த புனித நீர்நிலை ஒன்றில் நீராடிக் குணம் பெற்றதாகவும், அதனால் மகிழ்ச்சியுற்ற இளவரசி அப்பகுதியில் முருகனுக்கு ஒரு கோயில் எழுப்பியதாகவும். இந்நிகழ்வை ஒட்டியே இவ்வூருக்கும் மாவிட்டபுரம் (மா (குதிரை) + விட்ட + புரம்) என்ற பெயர் ஏற்பட்டது என்பதும் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் நிலவும் ஐதீகம்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads