மாவீரன் கிட்டு (திரைப்படம்)
சுசீந்திரன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாவீரன் கிட்டு (Maaveeran Kittu), சுசீந்திரனின் இயக்கத்தில், ஐஸ்வர் சந்திரசாமி, டி. என். தாய் சரவணன், ராஜீவன் ஆகியோரின் தயாரிப்பில் 2016இல் வெளியான தமிழ்த்திரைப்படம். இத்திரைப்படத்தில் விஷ்ணு, ஸ்ரீ திவ்யா, பார்த்திபன் ஆகியோர் முன்னணிப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் டி. இமானின் இசையில், சூர்யா ஏ. ஆரின் ஒளிப்பதிவில், காசி விஷ்வநாதனின் படத்தொகுப்பில் திசம்பர் 2, 2016இல் வெளியானது. திரைப்படப்பாடலாசிரியர் யுகபாரதி[2] இப்படத்திற்கு உரையாடலினை எழுதியுள்ளார். இத்திரைப்படம், ஒடுக்கப்பட்ட இனத்தைச்சார்ந்த போராளி ஒருவர் தன் இன மக்களை மேம்படுத்த நிகழும் வாழ்க்கைப்போராட்டம் குறித்தது.[3]
Remove ads
கதை
மாவீரன் கிட்டு திரைப்படத்தின் கதை முழுவதும் 1987இல் நடைபெறுவதாகப் புனையப்பட்டுள்ளது. இறந்தவர்களின் சடலத்தைக்கூட பொதுவழியில் எடுத்துச் செல்ல மறுக்கின்றனர் ஆதிக்க சாதியைச் சார்ந்தவர்கள். இன்னொரு பக்கம், கல்வி பயின்று முன்னேற்றமடைய எண்ணும் ஒடுக்கப்பட்ட வகுப்பினர். தங்ளை தடுத்து நிறுத்திய அந்தப் பொதுப்பாதையில் தலைநிமிர்ந்து நடக்க வேண்டும் என்பதே அவ்வூரின் ஒடுக்கப்பட்ட மக்களின் நீண்டநாள் கனவும் ஆசையும் [4] பன்னிரண்டாம் வகுப்பில் தமிழ்நாட்டிலேயே முதல் இடத்தைப்பெற்று, அந்த ஒடுக்கப்பட்ட வகுப்பில் முதல் மாணவனாக கல்லூரிக்குச் செல்கிறார் ஒடுக்கப்பட்ட வகுப்பைச்சார்ந்த கிட்டு (விஷ்ணு). கிட்டுவைப் படிக்கவைப்பவர் அந்த ஊர் மக்களின் பல வகையான சிக்கல்களுக்கா குரல்கொடுக்கும் சின்னராசு (பார்த்திபன்). தம்மின மக்களின் நிலை மேம்படவும் மாறவும் விஷ்ணு விஷால் படித்து மாவட்ட ஆட்சியராக வேண்டும் என்ற சின்னராசுவின் வேண்டுகோளை முழுமனதுடன் ஏற்கின்றார் கிட்டு. இச்சூழலில் ஆதிக்கசாதிச்சார்ந்த மக்கள் கிட்டுக்கு எதிராக சதிவலை பின்னுகின்றனர். சின்னராசுவின் உதவியோடு மக்கள் போராட்டம் தொடங்குகின்றனர். ஒடுக்கப்பட்ட இனத்தினர் பொதுவழியில் செல்ல வேண்டும் என்னும் அவர்களின் கனவு பலித்ததா? கிட்டு எப்படி மாவீரன் கிட்டு ஆகின்றான் என்பதே இப்படத்தின் கதை.[5]
Remove ads
நடிகர்கள்
- விஷ்ணு- கிட்டுவாக
- பார்த்திபன் - சின்னராசுவாக
- ஸ்ரீ திவ்யா - கோமதியாக
- சூரி - தங்கராசுவாக
- ஹரிஷ் உத்தமன் - செல்வராஜாக
- நாகிநீது - ஆதிக்கசாதியின் தலைவராக
- போஸ்டர் நந்தகுமார் - நெல்லை வரதனாக
- காசி விஸ்வநாதன்
இசை
இத்திரைப்படம் டி. இமானின் இசையில், யுகபாரதி ஆறு பாடல்களை எழுதியுள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீடு நவம்பர் 4, 2016இல் நடந்தது.
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads