மா. இராஜாங்கம்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
மா. இராஜாங்கம் (M.Rajangam), என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு, 1962, 1967, மற்றும் 1971 ஆகிய ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் சார்பாக உத்தமபாளையம் (1962) மற்றும் கம்பம் (1967) சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார், திண்டுக்கல் மக்களவைத் தொகுதியிலிருந்து (1971) இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
Remove ads
வாழ்க்கை வரலாறு
மா. இராஜாங்கம் தேவர், தேனி மாவட்டம் கூடலூரில் மாயாண்டி தேவர், அங்கம்மா அம்மையாரின் மகனாக பிறந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் 13-2-65 கூடலூர் கிளர்ச்சிக்குக்காரணம் என்று கைதுசெய்யப் பட்டார். ஒரு அறையில் போட்டு முதுகில் மின் இயக்கத்தைச் சாடவைத்து போலீசார் வேதனைப்படுத்தினார்கள்.[2]
இவர் நினைவாக சிலை மற்றும் ராஜாங்கம் நினைவு அரசு கள்ளர் மேல்நிலப்பள்ளி அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads