மா. சித்திவினாயகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மா. சித்திவினாயகம் தமிழ் எழுத்தாளர், கவிஞர் மற்றும் கலை, இலக்கியக் கட்டுரையாளர் என்ற பல பரிமாணங்களையுடையவர். சித்திவினாயகம், ஈழம்ராஜி, தமிழ்ச்சித்தன், சி.வி.பிள்ளை, சித்தி மற்றும் ரமோனா என்ற பெயர்களில் எழுதிக் கொண்டிருக்கும் இவரின் இயற்பெயர் மா.சித்திவினாயகம்பிள்ளை என்பதாகும்.
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கையின் வட மாகாணத்தில் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கிளிநொச்சி மாவட்டத்திலேயே இவர் ஆரம்ப மற்றும் உயர்கல்வியைக் கற்றுக்கொண்டவர். கூட்டுறவுக் கல்லூரியின் கற்கை நெறியில் தேர்ந்து இவர் கணக்கியற் பதிவாளரானார். பின் கொழும்பில் கணக்கியற் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். கணக்கியற் பட்டப்படிப்பைத் தொடர முடியாமல் நாட்டுப்பிரச்சனை இவரை வெளிநாட்டிற்கு விரட்டியடித்தபோது ஜேர்மனியில் தஞ்சம் புகுந்தார்.
எழுத்துத்துறையில்
ஆரம்பகாலக் கவிஞர்களில் ஒருவராகக் கணிப்பிடப்படும் இவரின் கவிதைகள் "மரணத்துள் வாழ்வோம்" கவிதைத்தொகுதியில் இடம் பெற்றுள்ளது.
பின் இவர் புலம் பெயர் நாடுகளில் பல புனை பெயர்களில் எழுதினார். ஜேர்மனியில் இளம் அருவி சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து 1984ல் அதனை வெளியீடு செய்தவர். அங்கிருந்த காலத்தில் "தீ" என்னும் கவிதைதொகுப்பு இவரால் வெளிக்கொணரப்பட்டது. இவரின் சில கவிதைகள் மாற்று மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. பிறகு இவர் கனடாவிற்குப் இடம்பெயர்ந்து வாழ்ந்தார். அங்கு தமிழ் எழுத்தாளர் இணையத்தால் வெளியீடு செய்யப்பட்ட "அரும்பு" சிறுகதைத் தொகுதியில் இவரின் "குறி" சிறுகதை பலராலும் விமர்சிக்கப்பட்டது. கவியரங்குகளின் தலைமைக் கவியாகி கவிதையரங்குகளை நடத்தினார். இணையங்கள், பத்திரிகைகள், வானொலிகள், தொலைகாட்சிகள், சஞ்சிகைகள் எனப் பலவற்றில் கவிதைகள் எழுதினார்.”ஒரு அகதியின் நாட்குறிப்பு” இலக்கிய இணையம் உட்பட “தமிழர்பார்வை” (Tamilsreview) இணையச்செய்திவலையை பல வருடங்களாக நடாத்தி வருபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் பட்டம் பெற்ற இவர் சுதந்திர ஊடகவியலாளர் ஆவார்.
பத்திரிகையில், தமது பதினெட்டாவது வயதில் எழுதத் தொடங்கிய சித்தி அவர்கள், நவீன தமிழ்க் கவிதையுலகில் தனி அடையாளம் கொண்டவர். “அஞ்சுவது அஞ்சாமை பேதமை” என்னும் இவரின் கவிதைதொகுப்பு 2009 ல் சென்னையிலும்,பின்னர் கனடாவிலும் வெளியீடு செய்யப்பட்டது.விரிந்த தளங்களில் எல்லோருடனும் இணக்கப்பாட்டோடு இருக்க முயற்சித்தலே வாழ்வு என்கின்ற அற்புதமான இக்கவிஞர் இலக்கியம், சமூகம் குறித்த கூர்மையான,நேர்மையான விமர்சனமும் அவதானிப்பும் கொண்டவர்.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads