மின்னசொட்டா பல்கலைக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

மின்னசொட்டா பல்கலைக்கழகம்
Remove ads

மின்னசொட்டா பல்கலைக்கழகம், ஐக்கிய அமெரிக்காவின் மின்னசொட்டா நகரில் அமைந்துள்ள பொது ஆய்வுப் பல்கலைக்கழகமாகும். மாணவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவின் நான்காவது பெரிய பல்கலைக்கழகமாகத் திகழ்கிறது. மின்னசொட்டா விளையாட்டுக் குழுவான கோல்டன் கோபர்சு (Minnesota Golden Gophers) பிரபலான ஒன்று.

Thumb
வான்வழிக் காட்சி
விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, ஆங்கிலத்தில் குறிக்கோளுரை ...
Remove ads

வளாகங்கள்

முதலில் இப்பல்கலைக்கழக வளாகம் மிசிசிப்பி ஆற்றின் புனித அந்தோணி நீர்வீழ்ச்சிக்கருகில் அமைக்கப்பட்டது. பின்னர் ஒரு மைல் தொலைவில் அமைக்கப்பட்டது(தற்போதைய இடம்). அமெரிக்கக் குடியுரிமைப் போரின் போது பொருளாதார் நெருக்கடியால் இப்பல்கலை மூடப்பட்டது முன்பு பள்ளி நிலையிலிருந்த இது பில்சுபரியின் உதவியால் 1867 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு 1869 ஆம் ஆண்டில் பலகலையாக உயர்த்தப்பட்டது. தற்போது இருகரைகளிலும் வளாகங்களைக் கொண்டுள்ளது. கிழக்குக் கரையில் முதன்மை வளாகமும் மேற்குக் கரையில் புனித பவுல் வளாகமும், கார்ல்சன் மேலாண்மைப் பள்லியும் அமைந்துள்ளன.

நிர்வாக வசதிக்காக வளாகத்தினை பகுதி வாரியாக அமைத்துள்ளனர். சிறு குன்று பகுதி (Knoll area), அங்காடிப் பகுதி (Mall area), மருத்துவப் பகுதி (Health area), விளையாட்டுப் பகுதி (Athletic area), வாசற்பகுதி (Gateway area) ஆகியவையே இவை.

Thumb
கிழக்குக் கரை

சிறுகுன்று பகுதி, பல்கலையின் பழைமையான பகுதியாகும். இப்பகுதியில் மனிதவியல் (humanities) துறைகள் உள்ளன. இங்குள்ள கழகங்கள் பல ஐக்கிய அமெரிக்காவின் வரலாற்றுப் பகுதிகளென அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பகுதி பல்கலையின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கே தான் பல பொது, தனியார் கல்லூரிகள் அமைந்துள்ளன. மாணவர் விடுதி, உறைவிடப் பகுதி ஆகியவையும் இங்கேயே அமைந்துள்ளன.

Thumb
வால்டர் நூலகம்

மருத்துவப் பகுதி மையப் பகுதியின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. இளநிலைப் பட்டதாரிகளுக்கான மருத்துவத் துறைகள், பல்மருத்துவம், பொதுநலம், மருத்துவமனை ஆகியவை இங்கு அமைந்துள்ளன. இப்பகுதிக்கருகிலேயே ”சூப்பர்பிளாக்” அமைந்துள்ளது. நான்கு வகை உறைவிட அறைகள் அமைந்துள்ளன. சமூக செயல்பாடுகள் இங்கு நடைபெறுவதாலும், அதிகம் பேர் இப்பகுதியில் வாழ்வதாலும் பிரபலமான ஒன்றாக அமைந்துள்ளது.

விளையாட்டுப் பகுதியில் விளையாட்டுத் திடல்களும், நீர்வள மையமும் இங்கே அமைந்துள்ளன.

கிழக்குப் பகுதியில் உள்ள வாசற்பகுதியில் அலுவலகங்கள் அமைந்துள்ளன. மெக்னமாரா பழைய மாணவர்கள் மையமும் இங்கு அமைந்துள்ளது. உயிரிமருத்துவ ஆய்வகம் அதிக செலவில் கட்டப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிறுபாறைக்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பழைய கட்டடமான பில்சுபரி கூடத்தின் வண்ணப்பூச்சு ஒளிப்படமெடுக்க முடியாத வகையிலானது.

Thumb
பில்சுபரி கூடம்

புதிதாய் கட்டப்பட்ட கட்டடம் கட்டடக்கலைக்கான சிறந்த விருதினைப் பெற்றது. மேற்குக் கரையில் கலைக்கூடம், திரையரங்குகள், ஆடலரங்கம் ஆகியவை அமைந்துள்ளன. ஆண்டுதோறும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இப்பல்கலைக்கழகத்தின் பெரிய நூலகமான வில்சன் நூலகம், மிடில்புரூக் தங்கும் விடுதிக்கருகில் அமைந்துள்ளது.

வாசிங்டன் நிழற்சாலை இருகரை வளாகங்களையும் இணைக்கிறது. சாலையைக் கடப்பதற்கான தனி நடைபாதையும், வாகனங்களுக்கான சிறப்பு சாலையும் அமைக்கப்பட்டுள்ளன,

Thumb
வாசிங்டன் நிழற்சாலை பாலம்

”மின்னியாபொலிசு” ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்பான பகுதி என ஃபோர்ப்சு செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

Thumb
வெய்சுமன் கலை அரங்கம்

புனித பவுல் வளாகம் பால்கன் அய்ட்சில் (Falcon Heights) அமைந்துள்ளது. இருப்பினும், வளாகங்கள் புனித பவுல் தெருவின் முகவரிகளையே கொண்டிருக்கின்றன. உணவு, வேளாண்மை, இயற்கை வளங்களுக்கான அறிவியல் துறை, சமூக அறிவியல் போன்றவையும்’ இங்கேயே இயங்குகின்றன. கால்நடை மருத்துவம், உயிரியியல் துறைகளும் அடக்கம். மரங்கள், செடிகள் அடர்ந்த பசுமையான சூழலைக் கொண்ட இவ்வளாகம் அமைதி மிகுந்ததாகவும் இளங்குகிறது.

Thumb
திரையரங்கம்

பெய்லி தங்கும் விடுதி இங்கேயே அமைந்துள்ளது. இரண்டு வளாகங்களுக்கும் சென்றுவர் ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. இங்குள்ள கருத்தரங்கத்தில் ஆண்டுதோறும் 20,000 பேர் கலந்துகொள்வதாக அறியப்படுகிறது. வீடுநிர்வகித்தலும் வடிவமைப்புக்களுக்கான துறைகளும் இங்கு உள்ளன.

புனித பவுல் வளாகத்தில் பாலும் இறைச்சியும் வழங்கப்படுகின்றன. இங்கு வழங்கப்படும் பால், இறைச்சிப் பொருட்கள் இங்குள்ள ஆசிரியர்கள், மாணவர்களாலேயே தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இதற்கு மாநில அரசு தரச் சான்று அளித்துள்ளது.

Remove ads

துணை அமைப்புகள்

இப்பல்கலைக்கழகம் 19 கல்லூரிகளையும், பள்ளிகளையும் உறுப்பினராகக் கொண்டுள்ளது. இக்கல்வி நிலையங்கள் ஒவ்வொன்றும் உடல்நலம், உயிரி அறிவியல், தொடர்கல்வி, பல்மருத்துவம், வடிவமைப்பு, மனித வளம், உணவு, வேளாண்மை, இயற்கை வளம், சட்டம், மருத்துவம், அறிவியற் தொழினுட்பம், கால்நடை மருத்துவம் ஆகிய துறைகளில் ஏதாவது ஒன்றைக் கொண்டு இயங்குகின்றன.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads