மியான்மர் தேசிய ஒற்றுமை அரசாங்கம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மியான்மர் தேசிய ஒற்றுமை அரசாங்கம் (National Unity Government of the Republic of the Union of Myanmar), 2021 மியான்மர் இராணுவப் புரட்சி காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிறுவிய அரசாங்கம் கலைக்கப்பட்டது. இதனால் மியான்மரின் நாடு கடந்த அரசாங்கம் நிறுவப்பட்டது. இந்த நாடு கடந்த அரசாங்கத்திற்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த நாடு கடந்த அரசாங்கத்தில் மியான்மரின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் ஆயுதக் குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆதரவு அளிக்கிறது.[1]இந்த ஒற்றுமை அரசாங்கத்தின் தலைநகரம் எங்கு செயல்படுகிறது என்பதை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் மியான்மரின் தொலைதூரப் பகுதியில் தலைநகரம் செயல்படலாம் என அனுமானிக்கப்படுகிறது.

விரைவான உண்மைகள் மியான்மர் தேசிய ஒற்றுமை அரசாங்கம், உருவான நாள் ...

இராணுவத்தின் மியான்மர் அரசு நிர்வாகக் குழுவானது, நாடு கடந்த அரசாங்கமான மியான்மர் தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை சட்டவிரோதமானது என்றும்[2] தீவிரவாத அமைப்பு என்றும் அறிவித்துள்ளது.[3]இதனிடையே மியான்மர் தேசிய ஒற்றுமை அரசாங்கமானது, மியான்மர் இராணுவத்தை தீவிரவாத அமைப்பு என்று அறிவித்துள்ளது.[4]

மே 2021ல் மியான்மரின் நாடு கடந்த அரசாங்கம், மியான்மர் மக்கள் பாதுகாப்புப் படையை நிறுவி செப்டம்பர் 2021 முதல் மியான்மர் இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடி வருகிறது.[5][6]

செப்டம்பர் 2021ல் மியான்மர் தேசிய ஒற்றுமை அரசாங்கம் தனது பிரதிநிதிகளின் அலுவலகங்களை அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐக்கிய இராச்சியம், நார்வே, பிரான்சு, ஆஸ்திரியா மற்றும் தென் கொரியாவில் அமைத்துள்ளது..[7]

Remove ads

அரசாங்கத்தின் நிர்வாகிகள்

மேலதிகத் தகவல்கள் பதவி, பெயர் ...
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads