மியான்மர் அரசு நிர்வாகக் குழு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மியான்மர் அரசு நிர்வாகக் குழு, (State Administration Council சுருக்கமாக:SAC), மியான்மர் நாட்டை 2 பிப்ரவரி 2021 முதல் ஆளும் இராணுவத் தலைவர்களின் குழுவாகும்.2021 மியான்மர் இராணுவப் புரட்சி மூலம் அரசு நிர்வாகத்தைக் கைப்பற்றிய இராணுவத் தலைவர்களின் நிர்வாகக் குழு தற்போது மியான்மர் நாட்டை ஆள்கிறது. மியான்மர் நாட்டின் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தலைவர் மின் ஆங் ஹைங் இக்குழுவின் தலைவர் ஆவார். மியான்மரின் அரசியலமைப்பின்படி, இக்குழுவிடம் சட்டமியற்றும் அதிகாரம், நிர்வாகம் மற்றும் நீதி அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.[1]இக்குழு மியான்மர் அரசை நடத்துவதற்கு தற்காலிக அரசை அமைத்துள்ளது. இந்த அரசின் பிரதம அமைச்சர் மின் ஆங் லாயிங் ஆவார்.[2]நாடு கடந்த மியான்மர் அரசின் குழுவானது[3]மியான்மரை ஆளும் இராணுவக் குழுவை தீவிரவாத அமைப்பு என அறிவித்துள்ளது.[4]மேலும் இராணுவ ஆட்சிக் குழுக்கு எதிராக மியான்மர் தேசிய ஒற்றுமை அரசு என்ற அமைப்பை மியான்மரில் நிறுவியுள்ளது.[5]
Remove ads
மியான்மர் அரசு நிர்வாகக் குழு உறுப்பினர்கள்
25 செப்டம்பர் 2023 முடிய அரசு நிர்வாகக் குழுவின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 25 ஆகும்.[6]விவரம் பின்வருமாறு:
Remove ads
சர்வதேச அங்கீகாரம்
[[File:Myanmar civil war.svg|thumb|350px|{{legend|#a9e89bff| மியான்மர் அரசு நிர்வாகக் குழுவின் (JUNTA (SAC) கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் (ரோஜா நிறத்தில்)]]
2021 மியான்மர் இராணுவப் புரட்சி மூலம் மக்களாட்சியை கலைத்து இராணுவ ஆட்சியை நிறுவிய இக்குழுவின் தற்காலிக அரசை பல நாடுகள் அங்கீகாராம் வழங்காததுடன், இராஜதந்திர உறவுகளை கட்டுப்படுத்தியுள்ள்து. நியூசிலாந்து, ஜப்பான், இந்தோனேசியா நாடுகள் மியான்மரின் இராணுவ அரசுக்கு அங்கீகாரம் வழங்கவில்லை. ஆசியான் உச்சிமாநாட்டில் இருந்து மியான்மரை விலக்க உள்ளது.[11] நவம்பர் 2022 இல், ஐரோப்பிய ஒன்றியம் மியான்மர் இராணுவ நிர்வாகக் குழுவின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. 2021ல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, மியான்மரின் இராணுவத் தலைவர்களைக் கண்டித்தும், நாட்டிற்கான ஆயுத விற்பனையை நிறுத்துவதற்கும் ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. ஜனநாயக தேர்தல் முடிவுகளுக்கு மதிப்பளிக்கவும், அரசியல் கைதிகளை விடுவிக்கவும் மியான்மரின் இராணுவத்தை இந்த தீர்மானம் கோருகிறது. அத்துடன் இராணுவ ஆட்சியை அங்கீகரிக்கக் கூடாது என வலியுறுத்துகிறது.[12]
Remove ads
இராணுவ ஆட்சிக் குழுவிற்கு எதிரான ஆயுதக் குழுக்கள்
மியான்மர் இராணுவ ஆட்சிக் குழுவினரை எதிர்த்து மியான்மரில் 2021ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நாட்டின் எல்லைப்புற மாநிலங்களில் ஆயுதக் குழுக்கள் கிளர்ச்சிகள் செய்து, ஏறத்தாழ 60% நிலப்பரப்புகளை கைப்பற்றி தன்னாட்சியுடன் நிர்வகித்து வருகின்றனர்.
- அரக்கான் இராணுவம்
- அரக்கான் ரோகிஞ்சா இரட்சணிய சேனை
- ஐக்கிய வா மாநிலப் படைகள்
- காசின் விடுதலை இராணுவம்
- காரென் தேசிய விடுதலைப் படைகள்
- காரென் தேசியப் படைகள்
- சான் மாநிலப் படைகள் (வடக்கு)
- சான் விடுதலைப் படைகள் (தெற்கு)
- சின் சகோதரத்துவக் கூட்டணி
- சின் தேசியப் படைகள்
- சின்லாந்து தேசிய இராணுவம்
- சோமி புரட்சிகரப் படைகள்
- தாங் தேசிய விடுதலை இராணுவம்
- தேசிய ஜனநாயக கூட்டணிப் படைகள் (மியான்மர்)
- மியான்மர் தேசிய ஜனநாயகக் கூட்டணி இராணுவம்
- மியான்மர் மக்கள் பாதுகாப்புப் படைகள்
- மொன் தேசிய விடுதலைப் படைகள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads