மிளகா (திரைப்படம்)

ரவி மரியா இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மிளகா என்பது 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை ரவி மரியா இயக்கியுள்ளார். நடிகர் நடராஜ் சுப்பிரமணியம் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்த படம் 25 ஜூன் 2010 அன்று வெளியானது. இத்திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களுக்கு ஆளானது.[1]

விரைவான உண்மைகள் மிளகா, இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

கதை சுருக்கம்

ஊர்த்திருவிழாவில் நாயகி பூங்கொடியின் இடுப்பை நாயகன் நட்ராஜ் கிள்ளி விடுகிறார். நாயகி பார்க்கையில் ரவி மரியா பின்னால் இருந்ததால், நாயகி ரவிமரியாவை அடித்து விடுகிறார். ரவி மரியா பிரபலமான ரவுடி சகோதரர்களில் ஒருவர். தன்னை அடித்த பூங்கொடியை திருமணம் செய்து கொள்ளப் போவதாக சகோதரர்களிடம் கைப்பேசியில் கூறுகிறார். ஆனால் பூங்கொடி மறுக்க, விபத்தில் ரவிமரியா சுயநினைவற்றுப் போகிறார்.

ரவிமரியாவின் சகோதரர்கள் பூங்கொடியின் தாய், தந்தையை மிரட்டி, பூங்கொடியை தங்கள் வீட்டிலிலேயே பாதுகாப்பாக வைக்கிறார்கள். பூங்கொடியை வெளியே அனுப்புகையில் அடியாட்களோடு அனுப்புகிறார்கள். சிறைகைதி போல இருக்கும் பூங்கொடி நடராஜை சந்தித்து தன் பிரட்சனையை தெரிவிக்க பார்க்கிறார். அதனை உணர்ந்த நடராஜ் பூங்கொடியை ரவுடி சகோதரர்களிடமிருந்து காக்க நினைக்கிறார்.

இறுதியில் நாயகன் நட்ராஜூம், நாயகி பூங்கொடியும் இணைகிறார்களா என்பதே கலையாகும்.[2]

Remove ads

தயாரிப்பு

ஆசை ஆசையாய் (2002) திரைப்படத்திற்குப் பிறகு ரவி இயக்கிய இரண்டாவது திரைப்படம் மிளாகாவாகும். இயக்குநர்கள் சிங்கம் புலி, ஜெகன்னத், நந்த பெரியசாமி மற்றும் ஜி.எம்.குமார் ஆகியோர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.[3]

ஒலிப்பதிவு

சபாஷ் முரளி இசையமைத்துள்ளார்.[4]

  • தவணியே - பாலாஜி
  • நீ சிரிச்சுப்பார்க்கற - கிருஷ்ணராஜ், கங்கா
  • கிறுக்கு பையா - சத்தியன், பிரசந்திணி
  • எங்கே வந்தடி - ஜனனி, வினீத், கீதம்
  • சாமி வந்துருச்சு - ஸ்ரீராம், சபேஷ்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads