மீண்டும் சாவித்திரி
விசு இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மீண்டும் சாவித்திரி (Meendum Savithri) திரைப்படம் 1996-ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை விசு எழுதி, இயக்க, பி. நாகிரெட்டி தயாரித்தார். இத்திரைப்படத்தில் விசு, ரேவதி, சரண்யா பொன்வண்ணன், நிழல்கள் ரவி, ராஜா, ரமேஷ் அரவிந்த், நாகேஷ், ஜெய்கணேஷ், அன்னபூர்ணா, சீதா, பாண்டு மற்றும் பலர் நடித்துள்ளனர். நல்ல படம் என்ற விமர்சனத்தை பெற்றாலும், மிகக்குறைவாகவே வசூல் செய்தது.[1][2][3][4][5]
Remove ads
நடிகர்கள்
- விசு - நாராயண மூர்த்தி
- ரேவதி - மஞ்சு
- சரண்யா பொன்வண்ணன் - உமா
- நிழல்கள் ரவி - நரசிம்மன்
- ராஜா - வாசுதேவன்
- ரமேஷ் அரவிந்த் - பாஸ்கர்
- நாகேஷ் - இராமமூர்த்தி
- ஜெய்கணேஷ் - சந்திரமௌலி
- கங்கா
- அன்னபூர்ணா - வாசுதேவனின் தாய்
- சீதா - காயத்ரி
- பாண்டு - கஜேந்திரன்
- குமரிமுத்து
- ஒரு விரல் கிருஷ்ணா ராவ்
- இடிச்சபுளி செல்வராசு
- ஓமக்குச்சி நரசிம்மன்
கதைச்சுருக்கம்
மஞ்சு (ரேவதி) அனைத்தையும் மிகவும் வெளிப்படையாக பேசும் சுபாவம் கொண்டவள். அவள் ஒரு சிறிய நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாள். தன்னால் முடிந்த வரை மக்களைத் திருத்தும் சுபாவம் கொண்ட தன் தந்தை நாராயண மூர்த்தியுடன் (விசு) வாழ்ந்து வருகிறாள் மஞ்சு. கல்யாண வயதை அடைந்த மஞ்சுவிற்கு மாப்பிள்ளை தேடுகிறார் நாராயண மூர்த்தி. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பம் என்பதால், ஆண் வீட்டார் கேட்கும் வரதட்சணையை நாராயண மூர்த்தியால் தர இயலவில்லை. அவ்வாறாக ஒருநாள், வரதட்சணை இல்லாமல் கல்யாணம் செய்துகொள்ளத் தயார் என்ற ஒரு வினோதமான விளம்பரத்தைப் பார்க்கிறாள் மஞ்சு. அந்த விளம்பரத்தைக் கொடுத்தது வாசுதேவன் (ராஜா), மிகவும் நல்லவனாக இருக்கிறான். மஞ்சுவும் நாராயண மூர்த்தியும் வாசுதேவனின் குடும்பத்தை பார்த்து மிரண்டுபோகிறார்கள். வாசுதேவனின் தந்தை ராமமூர்த்தி (நாகேஷ்) வியாபார தோல்வியால் மனநலம் பாதிக்கப்பட்டவர், அவனின் தங்கை காயத்ரி (சீதா) பாலியல் துன்புறுத்தலால் மனநலம் பாதிக்கப்பட்டவள், அவனது சகோதரன் பாஸ்கர் (ரமேஷ் அரவிந்த்) ஒரு குடிகாரன், அவனது அம்மா ஒரு ஆஸ்துமா நோயாளி.
இதை அனைத்தையும் தாண்டி, வாசுதேவனை மணக்கிறாள் மஞ்சு. உண்மையில் வாசுதேவனின் குடும்பத்தினர் அனைவரும் எதற்காகவோ பயந்து, நலமாக இருப்பதை மறைந்து நடிக்கிறார்கள். மஞ்சுவைத் திருமணம் செய்யும் முன்பே, உமா (சரண்யா பொன்வண்ணன்) என்ற பெண்ணை வாசுதேவன் மணந்திருந்தான். உமாவை மணந்த பின்பும், மஞ்சுவை ஏன் மணந்தான் வாசுதேவன்? எதை மறைக்க வாசுதேவனின் குடும்பத்தினர் நாடகமாடினர்? இறுதியில் மஞ்சுவிற்கு என்னவானது? போன்ற கேள்விகளுக்கு விடைகாணுதலே மீதிக் கதையாகும்.
Remove ads
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு தேவேந்திரன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை பிறைசூடன் எழுதியிருந்தார்.[6]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads