மீனாக்ஷி சேஷாத்ரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மீனாக்ஷி சேஷாத்ரி (Meenakshi Seshadri) (பிறப்பு 1963) இந்திய நடிகை, விளம்பர மாதிரி மற்றும் நடனக் கலைஞர் ஆவார். இவர் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவரது காலத்தில் அதிக வருவாயை பெற்ற நடிகை எனக் குறிப்பிடப்படுகிறார். இவர் அதிகமாக நகைச்சுவை, நாடகம், அதிரடி மற்றும் காதல் வகைப் படங்களில் நடித்துள்ளார். இவர் தனது 17வது வயதில், 1981ம் வருடம் "ஈவ்ஸ் வீக்லி மிஸ் இந்தியா" போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்றார்.[1][1][2]
மீனாக்ஷி சேஷாத்ரி முதன் முறையாக "பெயிண்டர் பாபு" (1983) திரைப்படத்தில் அறிமுகமானார். இதை அடுத்து நடித்த "ஹீரோ" (1983) திரைப்படம், மக்களிடையே அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. குறிப்பாக, 'ஹோசியர்' (1985), 'பேவாஃபை' (1985), 'மேரி ஜங்' (1985), 'சுவாதி' (1986), 'டாகேட்' (1987), 'இனாம் தஸ் ஹசார்' (1987), ஷாகென்ஷா' (1988), 'மஹாதேவ்' (1989), 'ஜர்ம்' (1990), 'காயல்', 'கர் ஹொ டு ஆசியா' 'டாமினி' (1993) போன்ற படங்களில் இவரது கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.[3] இவர் நடித்துள்ள 'சுவாதி' (1986), 'டாஹ்லீஸ்' (1986), 'சத்யமேவ ஜயதே' (1987), 'அவார்கி' (1990) மற்றும் 'டாமினி' (1993) படங்களுக்கு மகத்தான விமர்சன பாராட்டுக்களைப் பெற்றார்.[4] இவர் 1980 மற்றும் 90களில் இந்திப் படவுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். இவரது நடிப்புத்திறன், அழகு மற்றும் இவரது நடனம் அனைவராலும் பேசப்பட்டது.[3] இவர் 90களில் நடந்த "கஜீராஹோ" நாட்டிய விழாவில் நடனம் ஆடியுள்ளார்.
இவரது சொந்தப் படமான "கதக்" திரைப்படத்தை வெளியிட்ட பிறகு படவுலகை விட்டு வெளியேறினார். தன் குழந்தைகளை வளர்ப்பதற்காக அமெரிக்காவில் தன் கணவருடன் வசிக்கிறார். அமெரிக்காவில், "செரிஷ் டான்ஸ் ஸ்கூல்" என்னும் நடனப் பள்ளியை நடத்தி வருகிறார். இவரது வாழ்க்கை குற்த்து "மீனாக்ஷி அக்சப்ட் ஹர் விங்ஸ்" என்கிற பெயரில் ஆவணப்படம் எடுக்கப்பட்டது.[5][6]
Remove ads
இளமைப் பருவம்
மீனாக்ஷி சேஷாத்ரி, சார்க்கண்டிலுள்ள சிந்திரியில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்தார்.[7][8][9][10][11] இவர் இந்திய பாரம்பரிய நடனங்களான பரதநாட்டியம், குச்சிப்புடி, கதக் மற்றும் ஒடிசி வகை நடனத்தில் தேர்ச்சி பெற்றவர். இவர் வேம்படி சின்ன சத்யம் மற்றும் ஜெய ராமா ராவ் போன்றோரிடம் நடனம் பயின்றார்; தனது 17வது வயதில், 1981ம் வருடம் "ஈவ்ஸ் வீக்லி மிஸ் இந்தியா" போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்றார். மேலும் இவர், 1981ம் வருடம், தோக்கியோ, ஜப்பானில் நடந்த சர்வதேச அழகிப் போட்டியில் இந்தியா சார்பாக பங்கு பெற்றார்.[12][13]
Remove ads
விருதுகள் மற்றும் அங்கீகாரம்
- 1991 – சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டார். (ஜர்ம் திரைப்படம்-1990)
- 1994 – சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டார். ( டாமினி திரைப்படம்) [14]
- 1993 – சிறந்த நடிகைக்கான சுமிதா பட்டீல் நினைவு விருது [15]
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads