மீனா கந்தசாமி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மீனா கந்தசாமி (பிறப்பு: 1984), இந்திய எழுத்தாளர், செயற்பாட்டாளர், மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவர் தமிழ்நாட்டிலுள்ள சென்னையைச் சேர்ந்தவர்.[1] பெரும்பாலான இவரது படைப்புகள் பெண்ணியத்தையும், இந்தியாவின் சமகாலத்திய சாதியொழிப்புப் போராட்டத்தையும் மையமாகக் கொண்டுள்ளன. 2013 வரை இவர் இரு கவிதைத் தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளார். (டச் (2006), மெஸ். மிலிட்டன்சி (2010)).
Remove ads
பிறப்பும் கல்வியும்
1984 இல் தமிழ்க் குடும்பத்தில் முனைவர். டபுள்யூ. பி. சயந்திக்கும் முனைவர். கே. கந்தசாமிக்கும் மகளாகப் பிறந்தார். இவரது பெற்றோர் இருவரும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்.[1][2][3] இவரது இயற் பெயர் இளவேனில். இளவயதிலேயே கவிதைகளில் ஆர்வம் கொண்டிருந்தார். தனது பெயரை மீனா என மாற்றிக் கொண்டார்.[4]
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமூக-மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[1] இந்திய நடுவண் அரசின் கேந்திரிய வித்தியாலயப் பள்ளியில் படித்த இவர் உயர்நிலைக் கல்வி முடித்த நிலையிலேயே தனது 17 ஆவது வயதில் எழுதிய முதற்கவிதை ஒரு பாலியல் தொழிலாளியைப் பற்றியதாகும்.[5]
Remove ads
தொழில் வாழ்க்கை
எழுத்தாளராக
சாதிய ஒழிப்பு, பெண்ணியம், மொழிசார் அடையாளம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு மீனாவின் படைப்புகள் அமைந்துள்ளன.[6] அவரது முதல் கவிதைத் தொகுப்பு ’டச்’ (Touch) 2006 இல் கமலா தாசின் முன்னுரையுடன் வெளியானது.[1] இந்நூல் ஐந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. அவரது படைப்புகள் ’மஸ்காரா’ (Mascara), ’மை லவர் ஸ்பீக்ஸ் ஆஃப் ரேப்’ (My lover speaks of Rape) இரண்டும் இந்தியக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றன.[7] 'ஜிப்சி காடெஸ்' என்ற இவர் எழுதிய ஆங்கிலப் புதினம் 2014 ஆம் ஆண்டில் வெளி வந்தது. இதை குறத்தியம்மன் என்ற பெயரில் பிரேம் என்பவர் மொழிபெயர்த்துள்ளார்.
மொழிபெயர்ப்பாளராக
இவரது படைப்புகள் ஆங்கிலத்தில் அமைந்தாலும், தமிழில் இருந்து பல உரைநடை மற்றும் கவிதை ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.[8] ஈ. வெ. இராமசாமி , தொல். திருமாவளவன் மற்றும் காசி ஆனந்தன், சேரன், வ. ஐ. ச. ஜெயபாலன் போன்ற ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் ஆக்கங்களைத் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்திருக்கிறார்.[9]
நடிகையாக
’ஓராள்போக்கம்’ (Oraalppokkam) என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரைப்பட நடிகையாக அறிமுகம் ஆகிறார். இதற்கான முதலீடு மலையாளத் திரைப்படத்துறையில் முதல்முறையாக திரள்நிதி திரட்டல் மூலமாக திரட்டப்படுகிறது.[10][11]
Remove ads
தொலைக்காட்சித் துறைப் பங்களிப்பு
நியூஸ்7தமிழ் எனும் செய்தித் தொலைக்காட்சியின் ஆசிரியர் குழு உறுப்பினர்களுள் ஒருவர்.[12].
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads