முகமது கத்தாமி

ஈரானின் ஐந்தாவது குடியரசுத் தலைவர் From Wikipedia, the free encyclopedia

முகமது கத்தாமி
Remove ads

முகமது கத்தாமி (ஆங்கிலம்: Mohammad Khatami) 1943 அக்டோபர் 14 அன்று ஈரானில் பிறந்தவர் ஆவார்.[1][2][3][4] ஈரானின் ஐந்தாவது குடியரசுத் தலைவராக 1997 ஆகஸ்ட் 3 முதல் 2005 ஆகஸ்ட் 3 வரை பணியாற்றினார். 1982 முதல் 1992 வரை ஈரானின் கலாச்சார அமைச்சராகவும் பணியாற்றினார். அவர் முன்னாள் அதிபர் மகுமூத் அகமதி நெச்சாத்தின் அரசாங்கத்தை விமர்சிப்பவர் ஆவார்.[5][6][7][8]

Thumb
2007 டிசம்பரில் கத்தாமி

அந்தக் காலம் வரை அதிகம் அறியப்படாத கத்தாமி, அதிபதி பதவிக்கு தனது முதல் தேர்தலின் போது கிட்டத்தட்ட 70% வாக்குகளைப் பெற்றபோது உலகத்தின் கவனத்தை ஈர்த்தார். கத்தாமி தாராளமயமாக்கல் மற்றும் சீர்திருத்தத்தின் வழியில் இயங்கினார். கத்தாமி தான் அதிபராக இருந்த இரண்டு பதவிக் காலங்களில் , கருத்துச் சுதந்திரம், சகிப்புத்தன்மை மற்றும் பொது சமூகம், ஆசியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பிற மாநிலங்களுடன் ஆக்கபூர்வமான இராசதந்திர உறவுகள் மற்றும் தடையற்ற சந்தை மற்றும் வெளிநாட்டு முதலீட்டை ஆதரிக்கும் பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றை ஆதரித்தார்.

பிப்ரவரி 8, 2009 அன்று, கத்தாமி 2009 அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார் [9] ஆனால் மார்ச் 16 அன்று தனது நீண்டகால நண்பரும் ஆலோசகருமான ஈரானின் முன்னாள் பிரதம மந்திரி மிர்-கொசைன் மௌசவிக்கு ஆதரவாக விலகினார்.[10]

கத்தாமி நாகரிகங்களிடையே உரையாடலை முன்மொழிந்தார். 2001 ஆண்டு ஐக்கிய நாடுகள் கடாமியின் கருத்தினை "ஐக்கிய நாடுகளின் நாகரிகங்களின் மத்தியில் உரையாடல் ஆண்டாக" அறிவித்தது.[11][12]

Remove ads

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

கத்தாமி 1943 அக்டோபர் 14 ஆம் தேதி, யாசுது மாகாணத்தில் உள்ள அர்தகன் என்ற சிறிய நகரத்தில் பிறந்தார். கத்தாமி முகம்மதுவின் நேரடி ஆணாதிக்க வம்சாவளி என்பதால் சயீத் என்ற பட்டத்தை வைத்திருக்கிறார். அவர் 1974 ஆம் ஆண்டில் (31 வயதில்) மதச் சட்டத்தின் பிரபல பேராசிரியரின் மகள் மற்றும் மூசா அல் சதரின் மருமகள் ஜோக்ரே சதேகியை மணந்தார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்: லைலா (பிறப்பு 1975), நார்சசு (பிறப்பு 1980), மற்றும் எமட் (பிறப்பு 1988).

கத்தாமியின் தந்தை, மறைந்த அயதுல்லா உருகொல்லா கத்தாமி, ஒரு உயர் பதவியில் இருந்த மதகுருவாகவும், ஈரானிய புரட்சியின் ஆரம்ப ஆண்டுகளில் யாசுது நகரில் காதிப் (வெள்ளிக்கிழமை தொழுகைக்கான பிரசங்கத்தை வழங்குபவர்) ஆவார். தனது தந்தையைப் போலவே, கத்தாமியும் அயதுல்லாவாக மாறியபோது உள்ளூரின் முக்கியத்துவத்திற்கு உயர்ந்தார்.

Remove ads

அதிபராக

ஒரு சீர்திருத்த பாதையில் இயங்கிய கத்தாமி 1997 மே 23 அன்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார், இது குறிப்பிடத்தக்க தேர்தல் என்று பலர் விவரித்தனர். வாக்காளர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 80% ஆகும். மட்டுப்படுத்தப்பட்ட தொலைக்காட்சி ஒளிபரப்பு இருந்தபோதிலும், கத்தாமி 70 சதவீத வாக்குகளைப் பெற்றார். "ஈரானில் இறையியல் பயிற்சியின் மையமாகவும், பழமைவாத கோட்டையாகவும் இருக்கும் கோமில் கூட, 70% வாக்காளர்கள் கத்தாமிக்கு வாக்களித்தனர்." [13] இஸ்லாமிய குடியரசின் அரசியலமைப்பின் படி அதிகபட்சமாக இரண்டு முறை பணியாற்றிய பின்னர்,சூன் 8, 2001 அன்று இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் ஆகஸ்ட் 3, 2005 அன்று பதவி விலகினார்.

Remove ads

ஈரானின் குடியரசுத் தலைவர்கள் பட்டியல்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads