முகம்மது நபியின் இராணுவச் செயல்பாடுகள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

முகம்மது நபியின் இராணுவச் செயல்பாடுகள்
Remove ads

முகம்மது நபியின் இராணுவச் செயல்பாடுகள் என்பது இசுலாமிய இறைத்தூதரான முகம்மது நபி மக்காவில் இருந்து மதீனாவிற்கு புலம்பெயர்ந்த பின்னர் இசுலாமியர்களின் எதிரிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகள் மேற்கொண்டதாகும். இந்த இராணுவ நடவடிக்கைகள் அவர் மதீனாவில் இருந்த அவரது வாழ்வின் கடைசி பத்து வருடங்களும் இருந்தது.

ஹிஜ்ரத்

மக்காவில் எதிரிகளின் கொடுமை அதிகமானதால் முகம்மது நபி மதீனாவிற்கு பயணம் செய்தார்.

போர் புரிய அனுமதி

மதீனாவில் இருந்த அனைத்து முஸ்லிம்களையும் குறிப்பாக முகம்மது நபியையும் ஒழித்துக்கட்ட வேண்டுமென்று தீவிரமாக மக்கா நகர் அரபு மக்களின் தலைவர்கள் ஆலோசித்தனர்.[1][2] முஸ்லிம்கள் மதீனாவில் கடுமையான ஆபத்துகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக முஸ்லிம்களுக்கு எதிரிகளை எதிர்த்துப் போர் புரியலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது.[3] அதன்படி மதீனா நகரைச் சுற்றி குடியிருக்கும் அனைத்துக் கோத்திரத்தாருடனும் யூதர்களுடனும் சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.[4]

Remove ads

மக்கா எதிரிகள் மீது தாக்குதல்கள்

மக்கா எதிரிகளை தாக்க, முகம்மது நபி 8 வெவ்வேறான போர்களில் பல இடங்களில் இசுலாமியப் படையை அனுப்பினார்.[5] மக்கா எதிரிகள் வணிகம் செய்ய வெவ்வேறான இடங்களுக்கு செல்லும் போது அவர்களை தாக்கி மக்கா எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள முகம்மது நபி அந்த படைகளை பயன்படுத்தினார்.[6][7] அந்த எட்டுப் போர்களும் அவை நடந்த காலங்களும் வருமாறு:[8]

மேலதிகத் தகவல்கள் எண், போர் ...

இதில் அப்வா, பூவாத், ஸஃப்வான் ஆகிய போர்களில் முகம்மது நபி தலைமை தாங்கினார்.[9] மற்ற போர்களில் இசுலாமியப் படைகளை அனுப்பினார்.

பதுருப் போர்

மக்கா எதிரிகள் மீது பல வழிகளிலும் முகம்மது நபி போர் நடத்தி கொண்டிருந்த வேளையில், மக்கா தலைவர்கள் ஒன்று சேர்ந்து பெரிய படை ஒன்றை மதீனா நகரைச் தாக்க கொண்டு சென்றனர்.[10] மக்கா எதிரிகளின் படை மதீனாவைத் தாக்க வருவதை அறிந்த முகம்மது நபி உடனே மதீனா மக்களை ஒன்று திரட்டி ஆலோசனை நடத்தினார்.[11] பின்னர் இசுலாமியப் படையைத் தயார் செய்து அவரே தலைமை ஏற்றார். மார்ச் 17, கிபி 624 அன்று இருதரப்பினரும் "பத்ரு" எனுமிடத்தில் போரிட்டனர் எனவே இது பதுருப் போர் என அழைக்கப்பட்டது. இறுதியில் முகம்மது நபி தலைமையிலான இசுலாமியப் படை வென்றது.[12]

Remove ads

ஸுலைம் குலத்தவருடன் போர்

பதுருப் போருக்குப்பின் ஹிஜ்ரி 2, ஷவ்வால் மாதத்தில் ஸுலைம் மற்றும் கத்ஃபான் கிளையினர் மதீனாவின் மீது போர் தொடுக்க தங்களது படைகளைத் திரட்டினர். உடனே முகம்மது நபி 200 வீரர்களுடன் அவர்களது பகுதிக்குள் திடீரெனப் புகுந்து போரிட்டார். இதில் வெற்றி பெற்று மதீனா திரும்பினார்.[13]

கைனுகா யூதர்களுடன் போர்

கைனுகா கிளை யூதர்கள் மதீனாவின் அன்சாரிகளில் அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு கிளையினருக்கும் மத்தியில் பகைமை ஏற்படுத்தி முசுலிம்களுக்குள்ளே சண்டை ஏற்படுத்தி முசுலிம்களை அழிக்க சூழ்ச்சி செய்தனர்.[14] இதனால் முகம்மது நபி தமது கூட்டத்தை பாதுகாக்க ஹிஜ்ரி 2, ஷவ்வால் 15 தொடங்கி தொடர்ந்து 15 நாட்கள் கைனுகா கூட்டத்தாரின் கோட்டைகளை தமது படையினருடன் முற்றுகையிட்டார். அவர்கள் அனைவரும் முகம்மது நபி அவர்களின் கட்டளைக்கு இணங்குவதாய் கூறி, கோட்டைகளை விட்டு வெளியே வந்து சரணடைந்தனர்.[15]

Remove ads

உஹத் யுத்தம்

பதுருப் போரில் ஏற்பட்ட தோல்விக்குக் பழி தீர்க்க மக்கா தலைவர்கள் ஒன்று சேர்ந்து அபூசுப்யான் தலைமையில் பெரிய படை மதீனாவைத் தாக்க வந்தனர்.[16] உஹத் மலை அடிவாரத்தில் 625 மார்ச் 19 அன்று இருபடையினருக்கும் கடுமையான போர் நடந்தது. இப்போரில் முகம்மது நபியின் தோழரான ஹம்ஜா கொல்லப்பட்டார்.[17] இசுலாமியப் படை கடும் இழப்புகளை சந்தித்தது. மக்கா எதிரிகள் மதீனாவை கைப்பற்ற முடியாமல் மக்கா திரும்பினர்.[18][19][20]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads