முகம்மது முர்சி

From Wikipedia, the free encyclopedia

முகம்மது முர்சி
Remove ads

முகம்மது முர்சி (Mohamed Morsi, அரபி: محمد مرسى عيسى العياط, 8 ஆகத்து 1951 – 17 சூன் 2019) ஓர் எகிப்திய அரசியல்வாதி. இவர் எகிப்தின் ஐந்தாவது அரசுத்தலைவராக[1] 2012 முதல் 2013 வரை இருந்துள்ளார். 2013 சூன் மாதத்தில் எகிப்தில் இடம்பெற்ற போராட்டங்களை அடுத்து இராணுவப் புரட்சி ஒன்றில் இவர் இராணுவத் தலைவர் அப்துல் பத்தா அல்-சிசியினால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.[2]

விரைவான உண்மைகள் முகம்மது முர்சிMohamed Morsiمحمد مرسي العياط, எகிப்தின் 5-வது அரசுத்தலைவர் ...

இவர் தனது அரசுத்தலைவர் பதவிக் காலத்தில், அரசியலமைப்பைத் தற்காலிகமாக மாற்றி அமைத்தார். இதன் மூலம் அரசுத்தலைவருக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட்டு, நீதிமன்ற ஒப்புதல் இன்றி சட்டமியற்றும் அதிகாரம் வழங்கப்பட்டது.[3] 2013 சூன் 30 இல் அரசுத்தலைவரைப் பதவி விலகக்கோரி நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன.[4][5][6] இதனையடுத்து, போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கவும், அரசியல் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வரவும் வேண்டி மூர்சிக்கு இராணுவத்தினரால் 48 மணி நேரக் கெடு விதிக்கப்பட்டது.[7] சூலை 3 ஆம் நாள் பாதுகாப்பு அமைச்சர் அப்துல் பத்தா அல்-சிசி, எதிர்க்கட்சித் தலைவர் முகம்மது அல்-பராதிய் ஆகியோர் தலைமையிலான இராணுவப் புரட்சிக் குழு கூடி மூர்சியைப் பதவியில் இருந்து அகற்றியது.[8][9] இராணுவம் அரசியலமைப்புச் சட்டத்தை இடைநிறுத்தி, அரசியலமைப்பு நீதிமன்றத் தலைவர் அட்லி மன்சூரை இடைக்காலத் தலைவராக அறிவித்தது.[10] இராணுவப் புரட்சிக்கு எதிராக மூர்சிக்கு ஆதரவான முசுலிம் சகோதரத்துவம் ஆர்ப்பாட்டங்களில் இறங்கியது. இவ்வார்ப்பாட்டங்களில் 817 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.[11] இப்படுகொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் அல்-பராதி பதவி விலகினார்.[12]

மூர்சி மீதான விசாரணைகளை அடுத்து அவருக்கு மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.[13] 2016 நவம்பரில் இவரது மரணதண்டனை ரத்துச் செய்யப்பட்டு, விசாரணைகள் மீண்டும் ஆரம்பமாயின.[14] 2019 சூன் 17 அன்று இடம்பெற்ற நீதிமன்ற விசாரணையின் போது, மூர்சி காலமானார்.[15][16]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads