முகாசிபிடாரியூர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

முகாசிப்பிடாரியூர் (Mukasipidariyur) என்பது தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

ஊராட்சியாக இருந்த இந்த ஊர் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[3][4]

Remove ads

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான ஈரோட்டிலிருந்து 27 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னிமலையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 416 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[5]

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,045 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். முகசிப்பிடாரியூர் மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியது. முகசிப்பிடாரியூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads