முக்காடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முக்காடு, தலை மற்றும் முகத்தின் சில பகுதிகளை மறைக்க, பெரும்பாலும் பெண்கள் அணியும் துணியாகும். வெயிலை மறைக்கவும் சமயக் காரணங்களுக்காகவும் சில திருமண வைபவங்களிலும் இது அணியப்படுகிறது. சமயத் தொடர்புள்ள ஒன்றாக, இது ஒரு பொருளுக்கோ, இடத்துக்கோ மதிப்புக் கொடுப்பதற்காக அணியப்படுவதாகக் கருதப்படுகிறது.[1]

முக்காட்டின் உண்மையான சமூக பண்பாட்டு, உளவியல், மற்றும் சமூக பால்சார் செயற்பாடுகள் குறித்து பரந்த அளவில் ஆய்வுகள் செய்யப்படவில்லை. ஆனாலும், சமூகத் தொலைவைப் பேணுதல், சமூகத் தகுதியைக் காட்டுதல், பண்பாட்டு அடையாளம் என்பன முக்காட்டில் செயற்பாடுகளுக்குள் அடங்கும் எனலாம்.[2][3]
அறியப்பட்ட வரலாற்றின்படி கி.மு பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த அசிரியச் சட்டத்தில் முக்காடு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Remove ads
இந்தியாவில்
இந்தியாவை ஆண்ட முகலாயர்களின் பண்பாட்டுத் தாக்கத்தால், வட இந்தியாவில் பெண்கள் முக்காடு இடும் வழக்கம் கிபி 15 மற்றும் 16ம் நூற்றாண்டுகளில் பரவலாயிற்று.[4]ஆனால் சீக்கியப் பெண்கள் முக்காடு அணியும் வழக்கத்தை, சீக்கிய சமய குரு அமர் தாஸ் கடுமையாக எதிர்த்தார்.[5]
இதனையும் காண்க
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads