முகேஷ்

இந்திய பின்னணிப் பாடகர் From Wikipedia, the free encyclopedia

முகேஷ்
Remove ads

முகேசு சந்து மாத்தூர் (Mukesh Chand Mathur, (22 சூலை 1923 – 27 ஆகத்து 1976) முகேசு என்ற ஒரே பெயரில் நன்கு அறியப்பட்டவரும், ஒரு இந்தியப் பின்னணிப் பாடகருமாவார். முகேசு இந்தித் திரைப்படத் துறையில் மிகவும் பிரபலமானவரும், பாராட்டப்பட்ட பின்னணிப் பாடகர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.[1][2][3] இவர் வென்ற பல பரிந்துரைகளிலும் விருதுகளிலும், இராஜ்னிகந்தா (1973) திரைப்படத்தில் இவர் பாடிய "கை பார் யுகி தேகா கை" என்ற பாடல் சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசிய திரைப்பட விருதை வென்றது.

விரைவான உண்மைகள் முகேசுMukesh, பிறப்பு ...

இராச்சு கபூர், மனோஜ் குமார், பெரோசு கான், சுனில் தத், திலிப் குமார் ஆகிய நடிகர்களின் குரலாக முகேசு பிரபலமாக இருந்தார்.[4]

Remove ads

ஆரம்பகால வாழ்க்கை

முகேசு 1923 சூலை 22 அன்று தில்லி மாத்தூர் காயசுதா குடும்பத்தில் பிறந்தார்.[5][6][7] இவரது பெற்றோர் பொறியாளரான சோராவர் சந்து மாத்தூர், சந்திராணி மாத்தூர் ஆகியோராவர். பத்துப் பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இவர் ஆறாவது பிள்ளை. முகேசின் சகோதரி சுந்தர் பியாரிக்கு சொல்லிக்கொடுக்க வந்த இசையாசிரியர் பக்கத்து அறையிலிருந்து அதை கேட்டுக்கொண்டிருக்கும் முகேசின் ஆர்வத்தைக் கண்டார். 10 ஆம் வகுப்பிற்குப் பிறகு பள்ளியை விட்டு வெளியேறிய முகேசு, பொதுப்பணித் துறையில் சிறிது காலம் பணியாற்றினார். இவர் தில்லியில் பணிபுரிந்தபோது குரல் பதிவுகளை பரிசோதித்தார். படிப்படியாக தனது பாடும் திறன்களையும் இசைக்கருவி திறன்களையும் வளர்த்துக் கொண்டார்.[8]

Remove ads

பாடும் தொழில்

முகேசு தனது சகோதரியின் திருமணத்தில் பாடியபோது, இவரது தொலைதூர உறவினரான மோதிலால் இவரது குரலை முதலில் கவனித்தார். மோதிலால் இவரை பம்பாய்க்குச(தற்போது மும்பை) அழைத்துச் சென்று பண்டித் ஜெகந்நாத் பிரசாத்திடம் இசை வகுப்பிற்கு ஏற்பாடு செய்தார். இக்காலகட்டத்தில் முகேசு இந்திப் படமான நிர்தோசு (1941) இல் நடிகராகவும்-பாடகராகவும் பங்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. இவரது முதற் பாடல் நீலகாந்து திவாரி எழுதிய நிர்தோசு திரைப்படத்தில் நடிகர்-பாடகராக நடித்த "தில் கி புசா குவா கோ தோ" என்ற பாடலாகும். பின்னணிப் பாடகராக இவரது முதல் வெற்றிப் பாடல் 1945 இல் நடிகர் மோதிலால் நடித்த பெகிலி நாசர் திரைப்படத்தில் அனில் பிசுவாசு இசையமைத்தது. ஆ சீதாபுரி எழுதிய பாடல்களால் திரைப்படம் வெற்றி பெற்றது.

முகேசு பாடகர் கே. எல். சைகலின் இரசிகர் ஆவார். இவரது ஆரம்பகாலங்களில் பின்னணி பாடும் போது சைகலின் பாணியைப் பின்பற்றினார்.[9][10] உண்மையில், கே. எல். சைகல் "தில் சல்தா கை"... என்ற பாடலை முதன்முதலில் கேட்டபோது, "அது விசித்திரமானது. அப்பாடலைப் பாடியது எனக்கு நினைவில் இல்லை" என்று கூறினார்.[9]

Remove ads

நடிகர், தயாரிப்பாளராக

முகேஷ் 1941 இல் நளினி ஜெய்வந்த் கதாநாயகியாக நடித்த நிர்தோசு திரைப்படத்தில் ஒரு நடிகர் பாடகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1943இல் அதாப் அர்சு என்ற இவரது இரண்டாவது திரைப்படம்  வெளிவந்தது. 1953 இல் இராச்சு கபூரின் "ஆக்" படத்தில் விருந்தினர் தோற்றத்தில் நடித்தார். 1953 இல் "மசூகா" திரைப்படத்தில் கதாநாயகனாக சுரையாவுடன் நடித்தார். 1956 இல் அனுராக் திரைப்படத்தில் "உசா கிரண்",  "மிருதுளா இராணி" ஆகியோருடன் நடித்தார். (திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர், இசையமைப்பாளர்), . 1951 இல் மல்கர் என்ற ஒரு திரைப்படத்தை டார்லிங் பிலிம்சு என்ற தயாரிப்பகத்தின் மூலமாக முகேஷ் தயாரித்தார். இதில் நாயகன், நாயகி முறையே அர்ஜுன், சம்மி ஆகியோர் நடித்திருந்தனர்.[11][12][13]

பாராட்டுகள்

முகேசு, புகழ்பெற்ற இந்திய சுழற்பந்து வீச்சாளரான பகவத் சந்திரசேகருக்கு மிகவும் பிடித்தமானவர். முகேசின் குரல் சுருதியை நோக்கி நகரும்போது, ​​​​சந்திரசேகரின் அஞ்சலியை முகேசு ஏற்றுக்கொண்டது போல, கூட்டத்தில் இருந்து ஒரு கர்ஜனையைக் கொண்டு வந்தது. சுனில் கவாஸ்கர்  சந்திரசேகரை ஊக்கப்படுத்துவதற்காக சில நேரங்களில் முகேசு பாடிய பாடல்களை மைதானத்தில் முணுமுணுத்ததாக குறிப்பிட்டார். சந்திரசேகரின் பேரார்வம், அணி வீரர்கள் சையத் கிர்மானிகுண்டப்பா விசுவநாத் போன்றோருடன் சில பத்திரிகையாளர்களையும் ஈர்த்தது.[14]

2016இல் முகேசின் 93ஆவது பிறந்தநாளை கூகுள் நிறுவனம் நினைவு கூர்ந்தது.[சான்று தேவை]

இவரது 100வது பிறந்தநாளை முன்னிட்டு தபால் தலையை வெளியிடப்பட்டது.[15][16]

Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

முகேசு, கோடீஸ்வரரான இராய்சந்து திரிவேதியின் மகள் சாரல் திரிவேதியை மணந்தார்.[8][17][18] முறையான வீடு இல்லாததால், ஒழுங்கற்ற வருமானம் இந்தியாவில் "ஒழுக்கக்கேடான" தொழிலாகக் கருதப்பட்டது (திரைப்படங்களில் பாடுதல்) இவர்களின் திருமணத்திற்கு சாரல் திரிவேதி தந்தையின் ஒப்புதலைப் பெற முடியவில்லை. இதனால் முகேசும் சாரலும் தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முகேசின் 23வது பிறந்த நாளான 1946 சூலை 22 அன்று கண்டிவாலியிலுள்ள ஒரு கோவிலில், நடிகர் மோதிலால் உதவியுடன் ஆர். டி. மாத்தூரின் இல்லத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் மகிழ்ச்சியற்ற நாட்களை ஒப்பிட்டு, எல்லோரும் விவாகரத்து பற்றி கடுமையான கணிப்புகளை வைத்திருந்தனர். ஆனால் இருவரும் சோர்வடைந்த நாட்களைச் சமாளித்து, இவர் அமெரிக்காவுக்குப் புறப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு, 1976 சூலை 22 அன்று தங்களின் முப்பதாவது திருமண நாளைக் கொண்டாடினர். இத்தம்பதியினருக்கு இரீட்டா, பாடகர் நிதின், நளினி (இறப்பு. 1978), மொகினிசு, நம்ரதா (அமிர்தா) என ஐந்து குழந்தைகள் இருந்தனர். நடிகர் நீல் நிதின் முகேசு முகேசின் பேரன் (நிதினின் மகன்) ஆவார்.[8]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads