முகேஷ் (நடிகர்)

இந்திய நடிகர் From Wikipedia, the free encyclopedia

முகேஷ் (நடிகர்)
Remove ads

முகேஷ் ( Mukesh ) (பிறப்பு: 1956 மார்ச் 5) முகேஷ் மாதவன் என்ற பெயரில் பிறந்த இவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், தொலைக்காட்சி தொகுப்பாளரும், அரசியல்வாதியும் ஆவார். மலையாளத் திரைப்படத்துறையில் இவரது பணிக்காக பெரிதும் அறியப்பட்டவர். நகைச்சுவை வேடங்களில் இவர் மிகவும் பிரபலமானவர்.[1] கேரள சங்கீத நாடக அகாதமியின் தலைவராக இருந்தார். கேரள மாநிலத்தின் கொல்லம் தொகுதியை 2016 மற்றும் 2021இல் இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி சட்ட மன்ற உறுப்பினரானார்.[2]

விரைவான உண்மைகள் முகேஷ், கேரள சட்டமன்றத்தின் சட்ட மன்ற உறுப்பினர் ...
Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

முகேஷ் நடிகர்களான ஓ. மாதவன் மற்றும் விஜயகுமாரி ஆகியோருக்கு 5 மார்ச் 1956 அன்று கேரளாவின் கொல்லத்தில் பிறந்தார்.[3] தங்கசேரி குழந்தை ஏசு பள்ளியில் பயின்ற இவர் கொல்லத்தில் உள்ள ஸ்ரீ நாராயண கல்லூரியில் அறிவியல் இளங்கலை படித்தார். திருவனந்தபுரம் கேரள சட்ட அகாதமி சட்டக் கல்லூரியில் சட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். திரைப்படத் துறையில் நுழைவதற்கு முன்பு நாடகங்களில் நடித்து வந்தார்.[4]

இவர் 1988 ஆம் ஆண்டில் தென்னிந்திய திரைப்பட நடிகை சரிதாவை மணந்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.[5][6] சரிதாவுடனான திருமண வாழ்க்கை முறிந்து, 2011இல் இவர்கள் விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர்.[7]

முகேஷ் 24 அக்டோபர் 2013 அன்று நடனக்கலைஞர் மேதில் தேவிகாவை இரண்டாவதாக மணந்தார்.[8]

இவர் 2016 தேர்தலில் கொல்லம் தொகுதியிலிருந்து இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியின் சார்பில் கேரள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9] 2021இல் மீண்டும் இதே கொல்லம் தொகுதியிலிருந்து தேர்தெடுக்கப்பட்டார்.

Thumb
2016 தேர்தல் பிரச்சாரத்தின் போதுகொல்லத்தில் முகேஷ்,
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads