முக்கோண இருஅடிக்கண்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முக்கோண இருஅடிக்கண்டம் (triangular bifrustum) என்பது, இருஅடிக்கண்டப் பன்முகிகளின் முடிவிலாத் தொடரில் முதலாவதாக உள்ள இருஅடிக்கண்ட வகையாகும். ஒரு முக்கோண இருஅடிக்கண்டம் 6 சரிவக முகங்களையும் 2 முக்கோண முகங்களையும் கொண்டது. முக்கோண இருஅடிக்கண்டத்தைத் முனைதுண்டிக்கப்பட்ட முக்கோண இருபட்டைக்கூம்பு எனவும் அழைக்கலாம். எனினும் ஒரு முக்கோண இருபட்டைக்கூம்பின் ஐந்து முனைகளையும் துண்டிக்கக் கிடைக்கும் பன்முகியும் இதே பெயரால் அழைக்கப்படுவதால், முனைதுண்டிக்கப்பட்ட முக்கோண இருபட்டைக்கூம்பு என முக்கோண இருஅடிக்கண்டத்தை அழைப்பது ஈரடிவகைக்குள்ளாகும்.[1]
ஒரு முக்கோண இருபட்டைக்கூம்பின் துருவ அச்சின் இரு முனைகளையும் துண்டித்து அதனை இரு அடிக்கு-அடி அடிக்கண்டங்களின் இணைப்பு மூலம் ஒரு முக்கோண இருஅடிக்கண்டத்தை வடிவமைக்கலாம். இது ஒரு மீநுண்மபடிக வடிவில் இருக்கும்.[2][3]
அடுக்கப்பட்ட இரு ஒழுங்கு எண்முகிகளின் பக்கங்களைச் சுற்றி மூன்று சோடி நான்முகிகளை இணைத்து ஒரு முனைதுண்டிக்கப்பட்ட முக்கோண இருபட்டைக்கூம்பை வடிவமைக்கலாம்.
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads