ஏப்ரல் முட்டாள்கள் நாள்

From Wikipedia, the free encyclopedia

ஏப்ரல் முட்டாள்கள் நாள்
Remove ads

ஏப்ரல் முட்டாள்கள் நாள் (April Fools' Day or All Fools' Day) என்பது ஏப்ரல் முதலாம் நாள் உலகம் முழுவதும் நகைச்சுவைக்காக கொண்டாடப்படும் ஒரு நாளாகும். இந்த நாளில் ஒருவரை ஒருவர் நகைச்சுவையாக ஏமாற்றி, பாதிக்கப்பட்டவர்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று அழைக்கிறார்கள். இந்த நாள் 19-ஆம் நூற்றாண்டு முதல் அறியப்பெற்றதாக இருந்தாலும், ஒவ்வொரு நாட்டிலும் இந்த நாள் பொது விடுமுறை அன்று.

விரைவான உண்மைகள் ஏப்ரல் முட்டாள்கள் நாள், பிற பெயர்(கள்) ...
Remove ads

வரலாறு

இந்நாள் எவ்வாறு, எப்போது ஆரம்பமானது என்பது குறித்த தெளிவான வரலாறு இல்லாதபோதும் பிரான்ஸ் நாட்டிலேயே இது முதன்முதலில் பின்பற்றப்பட்டது எனத் தெரிகிறது.[1]

16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் 1 அன்றே புத்தாண்டு நாள் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1562 ஆம் ஆண்டளவில், அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி என்பவர் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி, புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி, ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு தொடங்குகிறது.

எனினும், இந்தப் "புதிய" புத்தாண்டு நாளை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் ஆனது. பிரான்ஸ் 1852 ஆம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660 ஆம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் 1700 ஆம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752 ஆம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு நாளை அலுவல் முறைப்படி ஏற்றுக் கொண்டன.

புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள், இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்ரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று அழைக்கத் தொடங்கினார்கள். இதிலிருந்து ஏப்ரல் முட்டாள்கள் நாள் தொடங்கிற்று எனும் கருத்து பரவலாக நிலவுகிறது. ஆனால், இதற்கு சான்றுகள் ஏதுமில்லை.

1582 ஆம் ஆண்டுக்கு முன்னரேயே 1508 ஆம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் நாள் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்குச் சான்றுகள் உள்ளன. அதேபோல், டச்சு மொழியிலும் 1539 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் நாள் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.

1466-ஆம் ஆண்டு, மன்னன் பிலிப்பின் அரசவை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் முதலாம் நாள் என்றும் கூறப்படுகிறது.

Remove ads

அடிக்குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads