இசுக்கொட்லாந்து
வட ஐரோப்பிய நாடு, ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
Script error: The module returned a nil value. It is supposed to return an export table.
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
சுகாட்லாந்து (ஆங்கிலம்: Scotland) வடமேற்கு ஐரோப்பாவில் பெரிய பிரித்தானியத் தீவில் உள்ள நாடு. இது ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பாகமாகும்.[1][2][3] இதன் கிழக்கில் வட கடலும், வடமேற்கிலும் மேற்கிலும் அட்லாண்டிக் பெருங்கடலும், தென்மேற்கில் வடக்குக் கால்வாயும் ஐரியக் கடலும் சூழ்ந்துள்ளது. இதன் தெற்கில் இங்கிலாந்துடன் தனது எல்லையைக் கொண்டிருக்கிறது. முதன்மையான பெரும் தீவு மட்டுமின்றி 790க்கும் மேற்பட்ட சிறு தீவுகளும் சுகாட்லாந்தில் அடங்கும்.[4]
நாட்டின் இரண்டாம் பெரிய நகரும், ஐரோப்பாவின் மிகப்பெரிய வணிக மையங்களுள் ஒன்றான எடின்பரோ நகரம் இதன் தலைநகரமாகும். இந்நகரில்தான் 18ஆவது நூற்றாண்டில் சுகாட்லாந்திய அறிவொளி நிகழ்ந்தது. சுகாட்லாந்தின் பெரிய நகரமான கிளாசுக்கோ[5] முன்னொரு காலத்தில் உலகின் முன்னணி தொழில்நகரங்களில் ஒன்றாக விளங்கியது. சுகாட்லாந்தின் வட அத்திலாந்திக்குப் பெருங்கடல் மற்றும் வட கடல் கடற்பரப்புகளில்[6] ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப் பெரும் எண்ணெய் இருப்பு உள்ளது. இதனால் சுகாட்லாந்தின் மூன்றாவது பெரிய நகரமான அபர்தீனுக்கு ஐரோப்பாவின் எண்ணெய்த் தலைநகர் என்ற பட்டம் கிடைத்துள்ளது.[7]
துவக்க நடுக் காலத்தில் தனியான இறையாண்மையுள்ள சுகாட்லாந்து இராச்சியம் உருவானது. இந்நிலை 1707 வரை தொடர்ந்தது. 1603இல் இங்கிலாந்தின் ஆறாம் சேமுசின் முடிசூடலை அடுத்து இங்கிலாந்துடனும் அயர்லாந்துடனும் விரும்பிய ஒன்றிணைப்பு செய்துகொண்ட சுகாட்லாந்து மே 1,1707இல் பெரிய பிரித்தானிய இராச்சியம் உருவாக்க அரசியல் ஒன்றிணைப்பை ஏற்றது. இதனையடுத்து இரு நாட்டு நாடாளுமன்றங்களும் ஒன்றிணைப்புச் சட்டங்களை நிறைவேற்றின. இந்த ஒன்றிணைப்பிற்கு எதிராக பரவலாக எடின்பர்கு, கிளாசுக்கோ, மற்றும் பிற இடங்களில் கிளர்ச்சி எழுந்தது.[8][9] பெரிய பிரித்தானியா பின்னர் சனவரி 1, 1801இல் அயர்லாந்துடன் அரசியல் ஒன்றிணைப்பை மேற்கொண்டு பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியத்தை உருவாக்கியது.
சுகாட்லாந்தின் சட்ட முறைமை இங்கிலாந்து, வேல்சு மற்றும் வட அயர்லாந்து சட்ட முறைமைகளிலிருந்து வேறுபட்டே இருந்து வந்துள்ளது. சுகாட்லாந்தில் பொதுச் சட்டத்திற்கும் தனிச் சட்டத்திற்கும் தனித்தனி நீதிபராமரிப்பு இருந்தது.[10] ஐக்கிய இராச்சியத்தின் பிற பகுதிகளிலிருந்து வேறுபட்ட சட்ட, கல்வி, சமய நிறுவனங்களை தொடர்ந்து வருவதால் சுகாட்டிய பண்பாடும் தேசிய அடையாளமும் 1707 ஒன்றிணைப்பிற்குப் பிறகும் காக்கப்பட்டுள்ளது.[11] 1999இல், ஒப்படைப்பு சட்டமன்றமான சுகாட்டிய நாடாளுமன்றம் உருவான பிறகு உள்துறை விவகாரங்களில் பலவற்றில் அதிகாரம் பகிரப்பட்டுள்ளது. மே 2011இல் சுகாட்டிய தேசியக் கட்சி சுகாட்டிய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை வென்றது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 18, 2014இல் விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.[12][13]
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads