முதலாம் கிரகோரி (திருத்தந்தை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருத்தந்தை முதலாம் கிரகோரி (இலத்தீன்: Gregorius I) (சுமார். 540 – 12 மார்ச் 604), அல்லது பெரியா கிரகோரி, என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 3 செப்டம்பர் 590 முதல் தன் இறப்பு வரை இருந்தவர் ஆவார். இவர் தனது எழுத்துகளுக்காக மிகவும் அறியப்படுகின்றார்[1]
இவர் கிறித்தவ வழிபாட்டினை சீறமைத்து ஒழுங்குபடுத்தியதால் நடுக் காலம் முழுவதும் இவர் கிறித்தவ வழிபாட்டின் தந்தை என அழைக்கப்பட்டார்.[2]
இவரே கத்தோலிக்க மடங்களில் வாழ்ந்த அனுபவமுடைய முதல் திருத்தந்தை. இவர் மறைவல்லுநராகவும், திருச்சபைத் தந்தையர்களுல் ஒருவராகவும் கருதப்படுகின்றார். கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம் மற்றும் சில லூதரனிய திருச்சபைகளில் இவர் புனிதர் என ஏற்கப்படுகின்றார். இவர் இறந்த உடனேயே மக்களின் பலத்த ஆதரவால் புனிதர் பட்டம் பெற்றார்.[3] சீர்திருத்தத் திருச்சபையினைச் சேர்ந்த ஜான் கால்வின் இவரைப்பற்றிக்கூறும் போது, இவரே கடைசியாக இருந்த நல்ல திருத்தந்தை எனக்கூறுகின்றார்.[4] இசையமைப்பாளர்கள், பாடகர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இவர் பாதுகாவலராகக் கருதப்படுகின்றார்.[5]
Remove ads
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads