முதலாம் சூரியவர்மன்
கம்போடிய மன்னன் From Wikipedia, the free encyclopedia
Remove ads
முதலாம் சூர்யவர்மன் (Suryavarman I) மரணத்திற்குப் பின் "நிர்வாணபாதா" ) 1006 முதல் 1050 வரை கெமர் பேரரசின் ஆட்சி செய்த மன்னனாவான்.[1]:134–135 சூரியவர்மன், தோராயமாக 1002இல் முதலாம் உதயாதித்யவர்மனை தோற்கடித்தான். உதயாதித்யவர்மனின் வாரிசாக வரவிருக்கும் செயவீரவர்மனுடன் நீடித்த போருக்குப் பிறகு,[2] இவன் 1010இல் அரியணையைக் கைப்பற்றினான். சூரியவர்மன் ஒரு மகாயான பௌத்தனாவான்.[1]:134 கெமர் இராச்சியத்தில் வளர்ந்து வந்த தேரவாத பௌத்தத்தையும் பொறுத்துக் கொண்டான்.

Remove ads
சுயசரிதை
முதலாம் சூர்யவர்மன், தென்னிந்தியாவின் (தமிழ்நாடு) சோழ வம்சத்துடன் 1012இல் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தினான்.[1]:136 முதலாம் சூர்யவர்மன் சோழப் பேரரசர் முதலாம் இராஜராஜ சோழனுக்குப் பரிசாக ஒரு தேரை அனுப்பினான்.[3] தம்பிரலிங்க சாம்ராச்சியத்திற்கு எதிராக சக்திவாய்ந்த சோழப் பேரரசர் இராஜேந்திர சோழனிடம் கெமர் மன்னர் முதலாம் சூர்யவர்மன் உதவி கோரியதாகத் தெரிகிறது.[4][5] இராஜேந்திர சோழனுடன் சூர்யவர்மனின் கூட்டணி பற்றி அறிந்ததும், தம்பிரலிங்க சாம்ராஜ்யம் சிறீவிஜய மன்னன் சங்கராம விஜயதுங்கவர்மனிடம் உதவி கோரியது.[4][6] இது இறுதியில் சோழப் பேரரசு சிறீவிஜிய பேரரசுடன் மோதலுக்கு வழிவகுத்தது. சோழ வம்சம் கெமர் பேரரசு ஆகிய இரண்டும் அங்கோர் வாட் வெற்றியுடன் போரை முடிவுக்கு கொண்டு வந்தது. இப்போரினால் சிறீவிஜயப் பேரரசுக்கும், தம்பிரலிங்க இராச்சியத்திற்கும் பெரும் இழப்புகள் ஏற்பட்டது.[4][7]
இவனது ஆட்சி சுமார் 40 ஆண்டுகள் நீடித்தது. மேலும் இவன் நாட்டைப் பாதுகாப்பதில் அதிக நேரத்தை செலவிட்டான். "நியாயமான சட்டங்களின் அரசன்" என்று அறியப்பட்ட இவன், சுமார் நான்காயிரம் உள்ளூர் அதிகாரிகளை அரண்மனைக்கு வரவழைத்து, தனக்கு விசுவாசமாக இருக்குமாறு செய்து தனது அரசியல் அதிகாரத்தை பலப்படுத்தினான். இவன் பௌத்த மதத்தை ஆதரித்தான். ஆனால் தனது மக்கள் இந்து மதத்தை தொடர்ந்து கடைப்பிடிக்கவும் அனுமதித்தான். இவனது அரண்மனை அங்கோர் தோம் அருகே அமைந்துள்ளது. மேலும் இவன் தனது அரண்மனையை கோட்டையுடன் பாதுகாத்த முதல் கெமர் ஆட்சியாளனாவான்.
தோல் தாபெக்கிலுள்ள கல்வெட்டில், சூரியவர்மன் ஆறு வேதாங்கங்களின் கொள்கைகளை அறிந்ததாகக் கூறப்பட்டுள்ளது . இவன் சூர்யவர்மன், தாய்லாந்தில் உள்ள சாவோ பிரயா ஆற்றுப் படுகையிலுள்ள லோப்புரி வரையிலும், கிழக்கே மேக்கொங் ஆற்றுப் படுகையில் கிழக்கிலும் தனது எல்லையை விரிவுபடுத்தினான்.[1]:136–137
சூர்யவர்மன் அநேகமாக பிரீ கான் கொம்பொங் மத வளாகக் கட்டுமானத்தைத் தொடங்கினான். மேலும் பந்தியாய் சிரே, வாட் ஏக் புனோம் , புனோம் சிசோரை விரிவுபடுத்தினான்.[8] :95–96 இவனால் கட்டப்பட்ட முக்கிய கட்டுமானங்கள் டாங்கிரெக் மலையில் உள்ள பிரியா விகார் கோயில், பிமேனாகாஸ் மற்றும் டா கியோவின் நிறைவு ஆகியவை அடங்கும்.[1]:135–136 இவன் 8 கி.மீ. நீளமும் 2.1 கி.மீ. அகலமும் கொண்ட இரண்டாவது அங்கோர் நீர்த்தேக்கமான மேற்கு பரேயையும் தொடங்கினான்.[9] :371இதில் 123 மில்லியன் லிட்டர் தண்ணீரைத் தேக்கி வைக்கலாம்.[10] இது எஞ்சியிருக்கும் மிகப்பெரிய கெமர் நீர்த்தேக்கமாகும். இவன் சோழப் பேரரசரான முதலாம் இராஜேந்திர சோழனுக்கு வர்த்தகத்தை எளிதாக்கும் வகையில் ஒரு பரிசை அனுப்பியதாக சில குறிப்புகள் உள்ளன.[11]
இவனது ஆட்சியின் போது, 47 நகரங்கள் (47 புரங்கள் என அறியப்பட்டது) கெமர் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தன.[12]
Remove ads
இறப்பு
இவன் 1050 இல் இறந்தான். மேலும் தனது பௌத்த மத நம்பிக்கைகள் காரணமாக நிர்வாணபாதா ("நிர்வாணத்திற்குச் சென்ற அரசன்") என்ற பதவிப்பெயர் இவனுக்கு வழங்கப்பட்டது. இவனுக்குப் பிறகு இவனது மகன்கள் இரண்டாம் உதயாதித்தவர்மன், கி.பி1050 முதல் 1066 வரை ஆட்சி செய்தான். இவன் 1066இல் இறந்த பின்னர், மூன்றாம் ஹர்ஷவர்மன் (சதாசிவபாதா) ஆட்சிக்கு வந்தான். பிந்தையவன் உள்நாட்டுக் கிளர்ச்சிகளுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்தான். 1080இல் தான் இறக்கும் வரை சம்பாக்களின் தாக்குதல்களை எதிர்த்துப் போராடினான்.
Remove ads
பிரபலமான கலாச்சாரத்தில்
ஏஜ் ஆஃப் எம்பயர்ஸ் II என்ற வீடியோ விளையாட்டு "முதலாம் சூர்யவர்மன் " என்ற தலைப்பில் ஐந்து அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
இதனையும் பார்க்கவும்
- கம்போடியாவில் புத்த மதம்
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads