சம்பா இராச்சியம்
இந்திரபுரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சம்பா அல்லது சியோம்பா ( சாம் : சாம்பா ; Vietnamese சாம் ) கி.பி 1832 இல் வியட்நாமிய பேரரசர் மின் மங் என்பவரால் இணைக்கப்பட்ட வியட்நாமிய தெற்குப் பகுதி ஆகும். வியட்நாமுடன் இணைக்கப்படுவதற்கு முன்பு இப்பகுதி, கி.பி 2 ஆம் நூற்றாண்டிலிருந்து மத்திய மற்றும் தெற்கு வியட்நாமின் கடற்கரை முழுவதும் பரவியிருந்த சுதந்திர சாம் அரசுகளின் தொகுப்பு ஆகும்.[1] இந்த அரசு சமஸ்கிருத மொழியில் நகாரா சாம்பா என்றும் (नगरः चम्पः;) (கெமர்: ចាម្ប៉ា ) சாமிக் மற்றும் கம்போடிய கல்வெட்டுகளில், சாம் பா ( Chăm Pa) என்றும் வியட்நாமிய மொழ்யில் சியாம் தான்( Chiêm Thanh ) என்றும் (சீன-வியட்நாம் சொல்லகராதி ) மற்றும் சீன பதிவுகளில் 'ஜாஞ்சாங்' (占城 ) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. . நவீன வியட்நாம் மக்கள் மற்றும் கம்போடியாவின் சாம் மக்கள் இந்த முன்னாள் ராச்சியத்தின் எச்சங்கள் ஆவார்கள். அவர்கள் மலாயிக் மற்றும் பாலி-சசாக் மொழிகளுடன் நெருங்கிய தொடர்புடைய மலாயோ-பாலினேசியனின் துணைக் குடும்பமான சாமிக் மொழிகளைப் பேசுகிறார்கள்.
சம்பா என்ற இராச்சியத்திற்கு முன்னர் இப்பகுதியில் முன்பு வியட்நாம் 'லாம் ஆப்' அல்லது லினயி( 林邑 மத்திய சீன மொழியில் லிம் ஐபி) என்றழைக்கப்பட்ட இராச்சியம் இருந்தது. இது கி.பி 192 வரை இந்த இராச்சியம் இருந்தது; லினியிக்கும் சம்பாவிற்கும் இடையிலான வரலாற்று உறவு தெளிவாக இல்லை என்றாலும். கி.பி 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளில் சம்பா அதன் உச்சக்கட்ட வளர்ச்சியை அடைந்தது. அதன்பிறகு, நவீன ஹனோய் பிராந்தியத்தை மையமாகக் கொண்ட வியட்நாமிய அரசியலான Đại Việt இன் அழுத்தத்தின் கீழ் அது படிப்படியாக வீழ்ச்சியைத் தொடங்கியது. 1832 ஆம் ஆண்டில், வியட்நாமிய பேரரசர் மின் மங் மீதமுள்ள சாம் பிரதேசங்களை வியட்நாமுடன் இணைத்துக் கொண்டார்.
கி.பி 4 ஆம் நூற்றாண்டில் அண்டை நாடான புனானில் இருந்து மோதல்கள் மற்றும் நிலப்பரப்பைக் கைப்பற்றியதன் காரணமாக இப்பகுதியில் இந்து மதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்துமதம் பல நூற்றாண்டுகளாக சம்பா இராச்சியத்தின் கலை மற்றும் கலாச்சாரத்தை வடிவமைத்ததில் பெரும்பங்கு வகித்தது. பல சாம் இந்து சிலைகள் மற்றும் சிவப்பு செங்கல் கோயில்கள் சாம் அரசு பரவியிருந்த நிலப்பரப்பைக் அடையாளம் காண உதவியாக இருந்தன. முன்னாள் மத மையமான மீ சன் மற்றும் சம்பாவின் முக்கிய துறைமுக நகரங்களில் ஒன்றான ஹாய் ஏன்இப்போது உலக பாரம்பரிய தளங்களாக உள்ளன.[2] இன்று, பல சாம் மக்கள் இஸ்லாத்தை பின்பற்றுகிறார்கள், இது 10 ஆம் நூற்றாண்டில் தொடங்கிய ஒரு மாற்றமாகும், 17 ஆம் நூற்றாண்டில் அரச குடும்பமும் மக்களும் இஸ்லாமிய நம்பிக்கையை முழுமையாக ஏற்றுக்கொண்டனர். இவர்கள் பானி சாம் (அரபியிலிருந்து: பானி ) என்று அழைக்கப்படுகின்றனர். இருப்பினும், பாலமன் சாம் (சமஸ்கிருதத்திலிருந்து: பிரம்மம்) தங்கள் இந்து நம்பிக்கை, சடங்குகள் மற்றும் பண்டிகைகளை இன்னும் தக்க வைத்துக் கொண்டு பாதுகாக்கின்றனர்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய கலாச்சாரத்துடன் உலகில் எஞ்சியிருக்கும் இந்தியர் அல்லாத பழங்குடி இந்து மக்களில் இருவரில் ஒருவர் பாலமன் சாம் மக்கள் மற்றவர் இந்தோனேசியாவின் பாலி இந்து மதத்தைப் பின்பற்றும் பாலிமக்கள் ஆவர்.[1]
Remove ads
சொற்பிறப்பு
சாம்பா என்ற பெயர் சம்பகா என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். சம்பகா என்பது செண்பக மலரைக் குறிக்கிறது சென்பகம் அதன் மணம் வீசும் மலர்களால் அறியப்படும் ஒரு பூக்கும் தாவர இனமாகும்.[3]
வரலாற்றிலக்கியத்தொகுப்பு
மூலங்கள்
சம்பாவின் வரலாற்று வரைவியல் மூன்று வகையான சான்றுகளைக் கொண்டுள்ளது.[4]
- செங்கல் கட்டமைப்புகள் மற்றும் இடிபாடுகள், கல் சிற்பங்கள் உள்ளிட்ட எச்சங்கள்;
- சிற்பத்தூண் மற்றும் பிற கல் மேற்பரப்புகளில் சாமிக்கு மற்றும் சமசுகிருதத்தில் உள்ள கல்வெட்டுகள்;
- சீன மற்றும் வியட்நாமிய வரலாறுகள், அரசாங்க அறிக்கைகள் மற்றும் ஜியா டான் வழங்கிய பிற நூல்கள். :319 [5]


சம்பாவின் வரலாற்றுவரைவியலில் நவீன புலமைப்பரிசில் இரண்டு போட்டியிடும் கோட்பாடுகளால் வழிநடத்தப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக சம்பா நவீன வியட்நாமின் கடற்கரையில் தெற்கிலிருந்து வடக்கே பரவிய பல பிராந்தியங்களாக அல்லது இளவரசரின் ஆட்சிப்பகுதியாகப் பிரிக்கப்பட்டு அவை அனைத்தும் ஒரு பொதுவான மொழி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தால் ஒன்றுபட்டது என்று அறிஞர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு வரலாற்று காலத்திலும் ஒவ்வொரு பிராந்தியத்திற்குமான வரலாற்று பதிவுகள் சமமாக இல்லை என்பது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்படுகிறது.
உதாரணமாக, கி.பி 10 ஆம் நூற்றாண்டில், 'இந்திரபுரா' செல்வாக்குடையதாக இருந்துள்ளது. கி.பி 12 ஆம் நூற்றாண்டில் 'விஜயா' செல்வாக்குள்ள பகுதியாக இருந்துள்ளது. கி.பி. 15 ஆம் நூற்றாண்டிலோ 'பாண்டுரங்கா' செல்வாக்குடையதாய் இருந்திருக்கிறாது. சில அறிஞர்கள் இந்த மாற்றங்களை, அன்றைய சம்பாவின் தலைநகரம் இந்தக் காலக்கட்டங்களில் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாற்றப்பட்டதை இந்த வரலாற்றுப் பதிவு பிரதிபலிப்பதாக எடுத்துக் கொள்கின்றனர். இவர்களின் கூற்ற்றுப்படி 10 ஆம் நூற்றாண்டில் இந்திரபுரா செல்வாக்கு மிக்கதாகத் திகழ்ந்திருந்தது. ஏனென்றால், அந்த நேரத்தில் இந்திரபுரா சம்பாவின் தலைநகராக இருந்தது என்ற கருத்தினை முன்வைக்கின்றனர். மற்ற அறிஞர்கள் இந்த கருத்தை மறுத்துள்ளனர்,
சம்பா ஒருபோதும் ஓர் ஐக்கிய நாடு அல்ல,ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்திற்கு செல்வாக்குடையதாக வரலாற்று பதிவு இருப்பது, குறிப்பாக அந்த காலகட்டத்தில் ஒரு ஐக்கிய சம்பாவின் தலைநகராக இப்பகுதி செயல்பட்டது என்று கூறுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்று இவர்கள் வாதிடுகின்றனர்.[6]
பல நூற்றாண்டுகளாக, கம்போடியா, சீனா, ஜாவா மற்றும் இந்தியாவிலிருந்து வெளிவந்த சக்திகளால் சாம் கலாச்சாரம் மற்றும் சமூகம் செல்வாக்கு செலுத்தியது. இப்பகுதியில் ஒரு முன்னோடி மாநிலமான லாம் Ấp கி.பி 192 இல் பிரிந்த சீன காலனியாக அதன் இருப்பைத் தொடங்கியது. மத்திய வியட்நாமில் சீன ஆட்சிக்கு எதிராக ஒரு அதிகாரி வெற்றிகரமாக கிளர்ந்தெழுந்தார், மேலும் கி.பி 192 இல் லோம் ஆப் நிறுவப்பட்டது. கி.பி 4 ஆம் நூற்றாண்டில், கம்போடியாவில் அண்டை நாடான ஃபுனான் இராச்சியத்துடனான போர்களும், ஃபனானிய பிரதேசத்தை கையகப்படுத்துவதும் இந்திய கலாச்சாரத்தை சாம் சமுதாயத்தில் ஊடுருவ வழிவகுத்தது. சமஸ்கிருதம் ஒரு அறிவார்ந்த மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, இந்து மதம், குறிப்பாக சைவம், அரசு மதமாக மாறியது. கி.பி 10 ஆம் நூற்றாண்டு முதல், இப்பகுதியில் அரபு கடல் வர்த்தகம் அதிகரித்தது. அதன் காரணமாக இஸ்லாமிய கலாச்சார மற்றும் மதத் தாக்கங்களை அது கொண்டு வந்தது.
பாரசீக வளைகுடாவிலிருந்து தென் சீனா வரை நீடித்த நறுமணப் பொருட்கள் வர்த்தகத்தில் சம்பா ஒரு முக்கிய இணைப்பாக பணியாற்றியது. பின்னர்
தென்கிழக்கு ஆசியாவில் மெயின்லேண்ட் பகுதியில் உள்ள அரபு கடல் வழித்தடங்களில்.கற்றாழை வழங்குநராக சம்பா திகழ்ந்தது. சம்பாவிற்கும் கம்போடியாவிற்கும் இடையில் அடிக்கடி போர்கள் இருந்தபோதிலும், இரு நாடுகளும் வர்த்தகத்தில் ஈடுபட்டன. இதனால் கலாச்சார தாக்கங்கள் இரு திசைகளிலும் நகர்ந்தன. இரு நாடுகளின் அரச குடும்பங்களும் அடிக்கடி திருமண உறவுகளைச் செய்துகொண்டன. சம்பா ஸ்ரீவிஜயாவின் சக்திவாய்ந்த கடல் சாம்ராஜ்யத்துடனும் பின்னர் மலாய் தீவுக்கூட்டத்தின் மயாபாகித்துடனும் நெருக்கமான வர்த்தக மற்றும் கலாச்சார உறவுகளைக் கொண்டிருந்தது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads