முதலாம் திருவந்தாதி

தமிழ் வைணவ இலக்கிய படைப்பு From Wikipedia, the free encyclopedia

முதலாம் திருவந்தாதி
Remove ads

முதல் திருவந்தாதி (Mutal Tiruvantati) வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றிப் பொய்கையாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும் இஃது அந்தாதி அமைப்பில் இயற்றப்பட்டது, 100 பாசுரங்களைக் கொண்டது,[1] பொய்கையாழ்வாரால் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்த போது பாடப்பட்ட இப்பாசுரம் “ வையம் தகளியா வார்கடலே நெய்யாக” என்னும் வரியை முதலடியாக கொண்டு தொடங்குகிறது.[2] இந்நூல் நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பில் இயற்பா தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.[3]

Thumb
Remove ads

சில பாசுரங்கள்

வையம் தகளியா வார்கடலே நெய்யாக,

வெய்ய கதிரோன் விளக்காக, – செய்ய

சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,

இடராழி நீங்குகவே என்று.
பொய்கையாழ்வார், முதலாம் திருவந்தாதி 1 ஆம் பாசுரம்

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads