முதல் தமிழ் இணைய மாநாடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முதல் உலகத்தமிழ் இணைய மாநாடு 1997 ஆம் ஆண்டு மே, 17, 18 ஆம் நாளில் சிங்கப்பூரில் நடந்தேறியது. சிங்கப்பூரில் உள்ள நாங்யாங் பல்கலைக் கழகப் பேராசிரியர் நா. கோவிந்தசாமியின் ஒட்டு மொத்தமான முயற்சியால் ‘தமிழ் இணையம் 97’ என்ற பெயரில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது. 1994 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கிற்கும் இம்மாநாட்டிற்கும் உள்ள தொடர்பு இணையம் தான்.
மாநாட்டின் கருப்பொருள்
1. இணையதளங்களில் தமிழ்ப் பொருண்மைகளை மிகைப்படுத்துதல் 2. விசைப்பலகையைத் தரப்படுத்துதல் தமிழ் எழுத்துரு குறியீட்டைத் தரப்படுத்துதல் 3. இணைய தளங்களையும், இணைய தளப்பக்கங்களையும் தரப்படுத்துதல். 4. அடுத்த தமிழ் இணையம் 98 மாநாடு பற்றி முடிவு செய்தல்.
மாநாட்டில் கலந்துகொண்டவர்கள்
எழுத்தாளர் சுஜாதா, அண்ணா பல்கலைக்கழகக் கணிப்பொறி பேராசிரியர் S.குப்புசாமி, இலங்கைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ST.நந்தசாரா, சுவிட்சலாந்து கு. கல்யாணசுந்தரம், சென்னை எழுத்தாளர் மாலன், பென்சில்வேனியா பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராசிரியர்கள் ஹரால்டு ஷிஃப்மன் மற்றும் வாசு அரங்கநாதன், மலேசியநாட்டு கணிப்பொறியாளர் முத்து நெடுமாறன், சிங்கப்பூர் நான்யாங்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் நா. கோவிந்தசாமி மற்றும் டேன் டின் வீ (en:Tan Tin Wee), ஆப்பிள் மென்பொருள் நிறுவனர் N. அன்பரசன் ஆகிய பதினொரு பேரும் மாநாட்டில் கலந்துகொண்டு கருந்துக்களை முன்வைத்துள்ளனர். இவர்கள் அனைவரும் உறுப்பினர்களாகவும் இருந்துள்ளனர்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads