முப்பரிமாண மாற்றிய வேதியியல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முப்பரிமாண மாற்றிய வேதியியல் (Stereochemistry) என்பது மூலக்கூறுகளில் உள்ள அணுக்கள் புறவெளியில் அமைந்துள்ள விதம் மாறுபடுவதால் ஏற்படும் மாற்றியங்களை விளக்கும் வேதியியலின் உட்பிரிவாகும். முப்பரிமாண மாற்றிய வேதியியல் ஆய்வு பொதுவாக முப்பரிமாண மாற்றிகளுக்கு இடையிலான உறவுகளை விவரிக்கின்றது.[1] வரையறையின்படி முப்பரிமாண மாற்றிகள் ஒரே மூலக்கூறு சூத்திரம் மற்றும் பிணைக்கப்பட்ட அணுக்களின் வரிசை ஆகியவற்றைக் கொண்டுள்ளன, ஆனால் புறவெளியில் உள்ள அணுக்களின் வடிவியல் நிலைப்பாட்டில் வேறுபடுகின்றன. இந்த காரணத்திற்காக, இது முப்பரிமாண மாற்றிய வேதியியல் என்று அழைக்கப்படுகிறது.[2] இதில் இந்த மாற்றிகளின் பண்புகளை தீர்மானிப்பதற்கும் விவரிப்பதற்கும் முறைகள் அடங்கும்.

1815 ஆம் ஆண்டில், சீன்-பாப்டிசுட் பயோட்டின் கரிமச் சேர்மங்கள் திரவ அல்லது வாயு நிலையில், அதனுள் பாய்ச்சப்படும் ஒளியின் திசையை மாற்றுவதை கவனித்தார்.[3] லூயிஸ் பாஸ்டர் 1842 இல் ஒயின் உற்பத்தி செய்யப்பட்ட பாத்திரங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட டார்டாரிக் அமிலத்தின் உப்புகள் இதே போல் ஒளியின் திசையை சுழற்ற முடியும் என்பதையும், மற்ற மூலங்களிலிருந்து வரும் உப்புகள் அவ்வாறு செய்யவில்லை என்பதையும் அறிந்தார். இதுவே முப்பரிமாண வேதியியலின் தொடக்கமாக அறியப்படுகின்றது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads